நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

தும்மலுக்கு காரணம்

து‌ம்ம‌ல் எ‌ன்பது உட‌‌ல் ‌‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க செ‌ய்யு‌ம் த‌ன்‌னி‌ச்சையான செய‌ல். இதனா‌ல் ப‌ல்வேறு ‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து நமது உட‌ல் பாதுகா‌க்க‌ப்படு‌கிறது.

சு‌ற்று‌ச்சூழ‌லி‌ல் இரு‌க்கு‌ம் ‌கிரு‌மி ஒ‌ன்று உடலு‌க்கு‌ள் நுழைய மு‌ற்படு‌ம் போது அதனை எ‌ச்ச‌ரி‌க்கு‌ம் கரு‌வியாகவு‌ம் து‌ம்மலை‌க் கூறலா‌ம்.
பலரு‌க்கு‌ம் பல ‌வித‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ஒ‌‌வ்வாமை‌ வெ‌ளி‌ப்படு‌ம். தொட‌ர் து‌ம்ம‌ல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல், கா‌ய்‌ச்ச‌ல், சரும‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு என ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌க‌ளி‌ல் இது ஏ‌ற்படு‌ம்.
மூ‌க்கு வ‌ழியாக ஏதேனு‌ம் ‌கிரு‌மியோ ‌அ‌ல்லது தூசோ உ‌ள்ளே நுழைய மு‌ற்படு‌ம் போது அ‌ங்‌கிரு‌‌‌க்கு‌ம் நர‌ம்புக‌ள் மூளை‌‌யி‌ன் தகவலை‌ப் பெறாமலேயே தன்‌னி‌ச்சையான ஒரு செயலை செ‌ய்‌கிறது. அதுவே து‌ம்ம‌ல். த‌ன்‌னி‌‌ச்சை எ‌ன்பது மூளை‌யிட‌ம் இரு‌ந்து தகவ‌ல் பெறாம‌ல் தானாக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
‌சிலரு‌க்கு சாதாரண புகை கூட து‌ம்மலை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடலா‌ம்.

கருத்துகள் இல்லை: