நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 8 டிசம்பர், 2011

இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்

1. வெள்ளரிப் பிஞ்சு:

இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். 
2. எலுமிச்சம் பழம் :
எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள்.
எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும்.
3. மோர் :
இது குடிப்பதற்கு மட்டுமல்ல, குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
4.வெந்தயம் :
சீயக்காய் அரைக்கும்போது வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில், இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி பளபளப்பாக இருக்கும்.
5.விளக்கெண்ணெய் :
கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும்.
6. பருப்பு :
கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம்.
7. தேங்காய் எண்ணெய் :
இதை முடியில் தடவுவது பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.
8. பூசு மஞ்சள் தூள் :
இதை, தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள் தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இதனால் சருமம் கருமை அடையும். 9. உருளைக் கிழங்கு :
இதை அரைத்து பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது உலர்ந்த சருமத்திற்கு நல்லது.
அரைத்த உருளைகிழங்கை, எலுமிச்சம் பழச் சாற்றுடன் கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் பசையை போக்கும்.
ஊரவைத்த பாதாம் பருப்பையும், உருளைக் கிழங்கையும் அரைத்து கண்களுக்குக் கீழே தடவி வந்தால் வீக்கத்தை குறைக்கும்.
10. வாழைப்பழம் :
இதை நன்றாக மசித்து தினமும் முகத்தில் 10 நிமிடங்களுக்கு தடவினால் முகம் மிருதுவாகும்.
11. காரட் :
இதன் சாறு எடுத்து முகத்தில் தடவினால் சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்கை நீக்கும்.
12. தயிர் :
மசித்த பப்பாளிப்பழத்தை தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுவதால் முகத்துக்கு பொலிவு கிடைக்கும்.
13. புதினா இலை :
இதை எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால், பருக்களை நீக்கும்
14. நெய்:
உதட்டின் வெடிப்பை நெய் தடவுவதால் போக்கலாம்.
15. ஐஸ் கட்டி:
மேக்கப் போடுவதற்கு முன்பு முகத்தை ஐ° கட்டியால் தடவினால் நீங்கள் போடும் மேக்கப் நீண்ட நேரம் நீடிக்கும்.

கருத்துகள் இல்லை: