நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 15 ஜூலை, 2013

வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்ப பேக்கிங் சோடாவை யூஸ் பண்ணுங்க...

காலை கடன்களில் மிகவும் முக்கியமானது பல் துலக்குவது. பற்களை சுத்தமாக வைத்து கொள்ளவில்லையென்றால், பல நோய்கள் நம்மை தாக்கக்கூடும். ஆகையால் எந்த வேளையை மறந்தாலும், பல் துலக்குவதை மறக்கக் கூடாது. பற்களை சுத்தமாக துலக்கினால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.
அதிலும் எங்காவது வெளி இடங்களுக்கு செல்லும் போது, டூத் பேஸ்ட்டை எடுத்து செல்ல மறந்துவிட்டால், அப்போது கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் இருக்கும் இடத்திலிருந்தே, அதை எளிமையாக தயாரித்து கொள்ள முடியும். இவ்வாறு செய்வதால் கெமிக்கல் நிறைந்த டூத் பேஸ்ட்டை தவிர்ப்பதுடன், வெள்ளையான பற்களையும் பெற முடியும். குறிப்பாக அந்த தருணங்களில் பேக்கிங் சோடா கைக் கொடுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். ஆம், பேக்கிங் சோடா கொண்டும் எளிய முறையில் பேஸ்ட் செய்து, பற்களை துலக்கலாம். சரி, இப்போது அந்த பேக்கிங் சோடா கொண்டு எப்படி டூத் பேஸ்ட் செய்வதென்று பார்ப்போமா!!!
டூத் பேஸ்ட் தயாரிக்கும் முறை:*
பேக்கிங் சோடாவை ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் சேர்த்து, வீட்டிலேயே டூத் பேஸ்ட் தயாரிக்க முடியும். அதற்கு கால் டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு எடுத்து, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் கலந்து, ஒரு டப்பாவில் போட்டு விடவும்.*
பின் அதனுடன் ஒரு துளி பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்தால், புத்துணர்வு கொடுக்கும் நறுமணத்தை பெறலாம்.*
பிறகு சிறிது கிளசரின் சேர்க்கவும். இயல்பாக இது பிசுபிசுப்பு தன்மை கொண்டிருப்பதால், இதை நன்கு கலக்க வேண்டும். மேலும் வேண்டுமெனில் அத்துடன் 5 துளி ஸ்ட்ராபெர்ரி எண்ணெயைக் கலந்து கொள்ளலாம்.*
பின்பு அதனை ஒரு டப்பாவில் போட்டு, குளிச்சியான அல்லது சாதாரண வெப்ப நிலையில் வைத்து பராமரித்து வந்தால், ஒரு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் இயற்கைக்கு மாறான டூத் பேஸ்ட்களை விட, இந்த டூத் பேஸ்ட் மிகவும் சிறந்தது.*
மேலும் இதனை டூத் பிரஷ்ஷில் தொட்டு, பற்களை துலக்கி, வாயை நீரில் நன்கு அலசினால், பற்களின் இடையில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கிவிடுவதோடு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை கொன்று ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.*
அதுமட்டுமல்லாமல் இதனுள் இருக்கும் சோடியம்-பை-கார்பனேட், பற்களின் அழுக்குகளை எளிதில் போக்கக் கூடியது. ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் காரணிகள் அதிகம் நிறைந்துள்ளதால், கிருமிகளை எளிதில் கொன்று விடுகின்றது.*
அதிலும் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்து கலந்தால், மௌத் வாஷாகவும் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த முறையை மேற்கொள்ளும் போது, விழுங்கி விடாமல் கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த கலவையை குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் !

தக்காளிப்பழம்
தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.
தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.
தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.
பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.
தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.
தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம்.