நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 21 ஏப்ரல், 2011

எளிய மருத்துவக் குறிப்புகள்

அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.


தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.

வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

‌வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும்.

மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.

உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும்.

ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்

சரும நோயை உருவாக்கும் ஏ.சி.!

கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே,மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை மிக அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாலும், மக்கள் ஏ.சி. அறைக்குள் பதுங்கிக் கொள்ளும் போக்கு மிக அதிகமாகவே அதிகரித்து வருகிறது.

இதனால் நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருப்பதும், நடமாடுவதுமாக இயற்கையான சீதோஷ்ண நிலையில் இல்லாமலேயே மக்களது, குறிப்பாக நகர்ப்புறங்களில் அலுவலகம் செல்வோரது, நாட்கள் கழிகின்றன.

இவ்வாறு முழு நாளையும் ஏ.சி. அறையிலேயே கழிப்பதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட வீட்டில் இவர்களால் ஏ.சி. இல்லாமல் இருக்க முடிவதில்லை.

கடும் வெயிலில் சுற்றி திரிந்துவிட்டு அலுவலகத்திற்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ ஏ.சி. அறைக்குள் நுழைவது சற்று ரிலாக்ஸ் ஆன ஒன்றுதான் என்றாலும் கூட, நீண்ட நேரம் ஏ.சி. அறையில் முடங்கிக் கிடப்பதால் உடலுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக ஏ.சி.யினால் உடலின் தோல் மற்றும் முடிக்கு எத்தகைய தீங்கு நேருகிறது என்பது குறித்து நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.ஒரு அறையில் ஏ.சி. ஓடும்போது அந்த அறையின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டு போய்விடுகிறது. இதனால் அந்த அறையில் இருப்பவர்களது உடலின் தோலின் ஈரப்பதமும் உறிஞ்சப்பட்டு தோல் வறட்சியாகவும், வெடிப்பு விழுந்தும் இருப்பதை நம்மில் பலரிடம் பார்த்திருக்க முடியும்.

அவ்வளவு ஏன்... பனிக்காலங்களில் நமது உடலின் தோல் வறண்டு, குறிப்பாக உதடுகளில் வெடிப்பும், அதிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டு இருப்பதை நாமே உணர்ந்திருப்போம்.

அவ்வாறு பனிக்காலத்தில் ஏற்படுவதுதான், நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

இவ்வாறு உங்களது உடலின் தோல் உரிய பாதுகாக்கப்படாமல், தொடர்ந்து வறண்டே காணப்பட்டால், தோலின் அடிப்பாகம் பாதிக்கப்படும்.தோல் அளவுக்கு அதிகமாக வறண்டு போகும்போவதால் அரிப்பு உணர்வும் ஏற்படும்.

அவ்வாறு ஏற்படும் அரிப்பை போக்க கை நகங்களால் சொறியும்போது,வறண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உதிர்ந்து விழுந்து அந்த இடம் வெண்மையாக மாறி, பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். இதைத்தான் 'வங்கு' என்றும் கூறுவர்.

எனவே தொடர்ச்சியாக ஏ.சி. அறையில் இருப்பது கடுமையான தோல் நோயை உருவாக்க வழி வகுத்துவிடும் என எச்சரிக்கின்றனர் தோல் நோய் மருத்துவ நிபுணர்கள்.
எனவே பொதுவான இடம் என்பதால் அலுவலகத்தில்தான் ஏ.சி. அறையை தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வீட்டிற்கு வந்த பிறகாவது சாதாரண காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ப‌க்கவாத‌த்தை த‌வி‌ர்‌க்கலா‌ம்!

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கு முந்தைய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்கவாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது

முக அழகு

5 அ‌ல்லது 6 ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்களை முக‌த்‌தி‌ல் சாறு படுமாறு ந‌ன்கு தே‌ய்‌த்து ‌விடவு‌ம். கழு‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் தே‌ய்‌க்கவு‌ம். 15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து ‌ப‌ச்சை‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் முக‌த்தை‌க் கழுவவு‌ம்.

கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது ‌கி‌ளிச‌ரி‌ன் சே‌ர்‌த்து ‌விழுதா‌க்‌கி அதனை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் முக அழகு மெருகேறு‌ம்.

உட‌ம்‌பி‌ல் கறு‌ப்பாக இரு‌க்கு‌ம் மு‌ட்டி, மூ‌ட்டு‌ப் பகு‌திக‌ளி‌ல் த‌யி‌‌ர் அ‌ல்லது எலு‌மி‌ச்சை சாறை தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கருமை ‌நீ‌‌ங்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் பரு‌க்க‌ள் உ‌ள்ளவ‌ர்க‌ள் பே‌‌சிய‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம். பரு‌க்கைள ‌கி‌ள்ளுவதோ, அதனை சுர‌ண்டுவதோ த‌வறு.

கறு‌ப்பான தேக‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள், உடனடியாக வெ‌ள்ளையா‌க்குவோ‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்களை ந‌ம்‌பி எ‌ந்த மரு‌ந்‌துகளையு‌ம் முக‌த்‌தி‌ல் போட வே‌ண்டா‌ம்.

கறுகறு கூந்தல்

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.


ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.


ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.


உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.


இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.
கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.


டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.


வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.


அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.


பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.