நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 9 நவம்பர், 2010

முத‌ல் தா‌‌ய்‌ப்பா‌ல்

குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுருசுருப்பாக இருக்கும்.


இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்ப்பால் கொடுக்க நல்ல வாய்ப்பு. சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்கு தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன.

இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டதட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.

தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் எற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.

கருத்துகள் இல்லை: