நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 30 மார்ச், 2022

குடல்புண் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும் நெய் !!

 நெய்யில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. அதோடு விட்டமின் ஏ, டி. இ. கே என்ற விட்டமின்களும் அடங்கி உள்ளது.


வெதுவெதுப்பான தண்ணீரில் நெய்யை ஊற்றி குடித்து வந்தால், உடலில் இருக்கும் வெள்ளை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால், நோய் நம்மை எளிதில் தாக்கிவிடாது.

நெய் மற்றும் மஞ்சளை வெந்நீரில் போட்டு குடித்து வந்தால், வரட்டு இருமல் குணமடைந்துவிடும். நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் தன்மை கொண்டது.

இரத்தகுழாயில் அதிக கொழுப்பு படியாமல் பாதுகாக்கவும், இரத்தகட்டிகள் உருவாகாமல் தடுக்கவும், அதோடு பற்சொத்தை, பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும் நெய்யில் உள்ள விட்டமின் கே மற்றும் கே2 உதவுகின்றது

காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது, உடலுக்கு வலுவை தரும். மேலும், எலும்பின் மூட்டுகளும் நல்ல ஸ்டராங்காக மாறும். தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக நெய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும். தலைமுடி உதிர்வு நெய்யை ஒருவர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.


பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்

 இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.


மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

சோப்புத் தண்ணீர்

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரின்

கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். 

இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்