நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 27 ஜூன், 2012

குழந்தைகளுக்கு வாயுத்தொல்லையா...?

வாயுத்தொல்லை என்பது பிறக்கும் குழந்தை முதல் பெரியோர் வரை இருக்கும். பிறந்த குழந்தைக்கு எப்போதும் தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையானது சிலசமயம் வாயுத்தொல்லை அல்லது மலச்சிக்கல் அல்லது வயிற்றுக்கடுப்பு போன்றவற்றால் அவதிப்படும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது வளர்ச்சியில் இருப்பதே ஆகும். இத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருக்க மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். அதேப் போல் ஒரு சில பாட்டி வைத்தியமும் இருக்கிறது, அது என்னவென்று படித்துப் பாருங்களேன்..


1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப் பின், குழந்தையை கையில் தாங்கி அதன் முதுகில் மெதுவாக தடவி விடவும். இதனை தொடர்ந்து 1-2 நிமிடம் வரை அல்லது குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை செய்தால், குழந்தைக்கு வாயுத்தொல்லையானது இருக்காது.
2. வாயுத்தொல்லை நீங்க குழந்தையின் வயிற்றை சற்று தேய்க்க வேண்டும். அதாவது குழந்தையை படுக்க வைத்து அதன் வயிற்றில் விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வாயுவானது வெளியேறிவிடும்.

3. எப்போது குழந்தையானது வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறதோ, அப்போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீரானது ரொம்ப சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் குழந்தையின் தொண்டையானது மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வாறு குளிக்கவும் வைத்தால், உடலில் உள்ள வாயு நிறைந்திருக்கும் பாக்கெட்டானது அந்த வெதுவெதுப்பான நீரினால் வெடித்து, வாயுவை வெளியேற்றும்.



4. தினமும் குழந்தையின் கை மற்றும் கால்களுக்கு ஏதேனும் உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். அதாவது குழந்தையின் கால்களை கைகளால் தாங்கி, சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாயுவானது எளிதாக வெளியேறிவிடும்.
5. குழந்தையுடன் விளையாட வேண்டும். அவ்வாறு குழந்தையை விளையாட வைப்பதன் மூலமும் வாயுவானது வெளியேறும். மேலும் குழந்தையானது உட்கார்ந்து, தவழ்ந்து விளையாடுவதன் மூலமும் வாயுவானது நீங்கிவிடும்.

இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வராமல் தடுக்கலாம். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது காற்றானது குழந்தையின் வாயினுள் செல்லாமல் கொடுக்க வேண்டும். ஏனெனில் காற்றானது குழந்தையின் உடலினுள் செல்வதாலும் வாயுத் தொல்லை ஏற்படுத்தும்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

'நோன்பு'இருந்தால்,மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு !!!

ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.

முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் !!!

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.


சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.

மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :

1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.

2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.