நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 12 டிசம்பர், 2013

வெங்காயம் காம உணர்வுகளை தூண்டக் கூடியது !!!

காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். அது மட்டுமின்றி திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.மேலும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம்.அதே போல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.அதிலும் உண்மையில்லையாம்.இவைகளையெல்லாம் விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம்தான் என்பதை மடடும் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளதால் தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது;.


நமமை மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.


சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.
புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும்

உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம்.
கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய் என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் `', `சி'.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
அவரைக்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
பீர்க்கங்காய் என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சாப்பிடக்கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக் கூடாது. தலையில் நீர்க் கோத்துக்கொள்ளும்.
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
புடலங்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், விட்டமின் `', சுண் ணாம்புச்சத்து, கந்தகச்சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பாகற்காய் என்ன இருக்கு: பாலிபெப்டு டைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய் என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீத ளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய் என்ன இருக்கு: புரதம், கொழுப்பு யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக்கூடாது
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூச ணியே நல்லது.
கொத்தவரைக்காய் என்ன இருக்கு: நார்ச்சத்து
யாருக்கு நல்லது: நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே வாழைக்காய்
என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் `'.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
காரட் என்ன இருக்கு : விட்டமின் , கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
பீன்ஸ் என்ன இருக்கு: புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் , தாது உப்புகள்.
யாருக்கு நல்லது: ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம்: குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பள பளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.
பீட்ரூட் என்ன இருக்கு: க்ளூ கோஸ்
யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது.
பலன்கள்: ரத்தத்தை வளப் படுத்தும். சுறுசுறுப்பை அளிக் கும். மேனி நிறம் பெறும்.
முள்ளங்கி (வெள்ளை) என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: அதிகம் குளிர்ச் சியை தரும். வாயுவை வெளியேற்றும்.
காலிஃபிளவர் என்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ் பரஸ், மெக்னீசியம், விட்ட மின் , .
யாருக்கு நல்லது: புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ் என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் , .
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம்: பனி காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.




வியாழன், 5 டிசம்பர், 2013

பழைய சாதமு‌ம் பல ந‌ன்மைகளு‌ம்

முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.
காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது. இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.




அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.பழைய சாதம் செய்வது எப்படி?பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது "ப்ரௌன் ரைஸ்" என்று அழைக்கப்படும் "கைக்குத்தல்" அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்‌பிடலா‌ம், ஆரோக்கியமாக இருக்கலாம்.

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது !!!

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது
என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.



பதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள். மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள்
, இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும்.மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஓவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.




இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஓருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்றும் நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடியதும், பக்கவிளைவுகளற்ற சிகிச்சை முறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.
அதே சமயம் நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலும் ஆய்வுகள் செய்வது அவசியம் என்கிறார் அம்ரிதா அலுவாலியா. இந்த ஆய்வின் முடிவுக்குக் காத்திராமல் பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை. அதே சமயம் பீட்ரூட் சாறு அருந்துபவர்சிறுநீர் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும்