நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 24 ஏப்ரல், 2014

பொடுகு தொல்லையா ?

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு.குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும்.

எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம். சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்….

1. வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். வால் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், “பொடுகு தொல்லை நீங்கும்”. தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

2. பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும

3. பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

4. வசம்பை நன்கு தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

5. வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

உலர் பாதாமி பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் !!!

ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம்.

இப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை. இயற்கையின் அருங்கொடையான இந்த பழத்தைப் பற்றிய 12 சிறந்த நற்பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.

உலர் ஆப்ரிகாட் பழங்களில் பெக்டின் உள்ளது. மேலும் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவல்லதாகும். மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் பெக்டின் பொருட்கள், உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.

செரிமான சக்தியை அதிகமாக்கும் பொருட்டு உலர் ஆப்ரிகாட்கள் உணவுக்கு முன்னதாக உட்கொள்ளப்படுகின்றன. அமிலங்களை மட்டுப்படுத்தக்கூடிய காரமானி இதில் இருப்பதே இதற்கு காரணமாகும்.

உலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும். ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயரித்துக் கொள்ளுங்கள். இத்திரவம் உங்களுக்கு தாக சக்தியையும் கொடுக்கும்.

உலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள் மிதமான மலமிளக்கியாக செயல்பட்டு, தேவையற்ற கழிவுகளை அகற்றி செரிமானக் குழாயை சீராக்க உதவுகின்றன. இது உடலின் ஜீரணத் திரவங்களுடன் எதிர்வினையாக செயலாற்றி, ஆல்கலைன் சூழலை உருவாக்கி, அதன் மூலம் செரிமானக்குழாயை சுத்திகரிக்க உதவுகிறது.



உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தையின்மை, இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. இந்த உலர் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை போக்கவல்லது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவு உட்கொள்வது நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தின் போது, இனிப்புகள் மற்றும் இதர நொறுக்குத்தீனிகளை உண்பதைக் காட்டிலும், உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.


apricot and dry fruits

உலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது

உலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்

உலர் ஆப்ரிகாட்கள் இரத்தசோகையை குணப்படுத்தக்கூடிய இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகின்றன. ஏனெனில், உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய தாதுப்பொருட்களான இரும்பு மற்றும் செம்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதனால் தான்.

காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.

உலர் ஆப்ரிகாட் சாறு, வேனிற்கட்டி, சருமப்படை மற்றும் சொறி, சிரங்கு ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய அரிப்பை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. ஆப்ரிகாட் ஸ்கரப், பெரும்பாலும் சருமத்தின் இறந்த செதில்களை அகற்றுவதற்கு உபயோகிக்கப்பட்டு வருகின்றது.