நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம்

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. மசால் வடை சுட்டாலோ, மீன் குழம்பு வைத்தாலோ எங்கிருந்தாலும் அவர்கள் உடனே ஓடிவந்துவிடுவது இதனால்தான்.

உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து லண்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு தலைவர் லொரான்ஸோ ஸ்டாஃபோர்ட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தெரியவந்த தகவல்கள்:


மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே வாசனையை நுகர்வதற்கு நம்மை தூண்டுகிறது. இவ்வாறு தூண்டப்படும் நேரத்தில் மோப்ப சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். வாசனை கமகமக்கும் இடத்துக்கு சென்றதும் ‘அதை எடுத்து சாப்பிடு’ என்று மூளையின் இன்னொரு பகுதி நம்மை தூண்டும். இதனால்தான் அதை சாப்பிடுகிறோம்.
மூளை இப்படி அடிக்கடி தூண்டினால் நிறைய சாப்பிட்டு உடல் பருமனாகிறோம். மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி குறைவு. பருமனாக உள்ளவர்களுக்கு வாசனையை வைத்தே உணவின் ருசியை நிர்ணயிக்கும் மோப்ப சக்தி அதிகம்.
இதனால்தான் ருசியான உணவுகளை எளிதில் அடையாளம் காண்கின்றனர். பருமன் அதிகமாகிறதே என்ற எச்சரிக்கை உணர்வு இல்லாமல் பிடித்த உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுகின்றனர். அதிகளவு குண்டாகி அவஸ்தைப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.

கருத்துகள் இல்லை: