நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்

கல்யாண சீசனில் புது மணப்பெண்களும், புது மாப்பிள்ளைகளும் அழகுக்கு அழகு சேர்க்க அலை பாய்வார்கள். மினுமினுக்கும் அழகுடன் கல்யாணப் பெண்கள் மணமேடையை அலங்கரிக்கும் காலம் இது.


கல்யாணம் என்றாலே பெண்கள் கற்பனா லோகத்தில் மிதக்கத் துவங்கி விடுவார்கள். மணப்பெண்கள் கல்யாண நாளன்று பொலிவுடன் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் சகட்டு மேனிக்கு கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். தோகள், உறவினர்கள், அழகு நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளில் பொதுவானவை 7 கேள்விகள். அவற்றுக்கு இங்கு பதில்கள் உள்ளன.

மணநாளன்று பொலிவாக இருக்க என்று முதல் சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும்?

திருமணத்திற்கு முன்பு, குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாகவே சருமத்தைப் பராமரிக்கத் துவங்கவும். தோல் நிறத்தை மெருகூட்டவும், புள்ளிகளையும் போக்க 3 மாதமாவது தேவைப்படும் என்று மும்பையைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் ஸ்வாதி ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

மணப்பெண்களின் சருமத்தின் மெருகை கூட்ட எந்த முறை சிறந்தது?

தோல் இளமையாக இருக்க, மினுமினுக்க, நிறத் திண்மையை கூட்ட பல சிகிச்சை முறைகள் உள்ளன என்று டெல்லியைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் சப்ரா கூறினார். இதில் ஆக்சிஜன் பேஷியல், லேசர் சிகிச்சை, கடல்பாசி சிகிச்சை சிறந்தவை. லேசர் சிகிச்சைக்கு 10 அமர்வு (சிட்டிங் )தேவைப்படும். பின்னர் பாருங்கள் உங்கள் தோல் எப்படி இளமையாகவும், அழகாகவும் இருக்கிறது என்று.

போடாக்ஸ் பயன்படுத்தலாமா? அவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பனதா?

தோல் இறுக்கத்துடனும், உறுதியாகவும் இருக்க பல மணப்பெண்கள் போடாக்ஸை பயன்படுத்துகிறார்கள். மேலும், மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தாரும் போடாக்ஸை பயன்படுத்துகின்றனர் என்கிறார் டாக்டர் ஸ்ரீவஸ்தவா.

முகச் சுருக்கத்தை கல்யாணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு சரி செய்துவிட முடியாது. சுருக்கமில்லாத நல்ல தோல் வேண்டுமானால் குறைந்தது 1 மாதத்திற்கு முன் போடாக்ஸ் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நிபுணர்களிடம் சென்று இந்த சிகிச்சையை செய்து கொண்டால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது.

அழகான தோல் கிடைக்க நான் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

மணப்பெண்கள் நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். யோகா, மனஅழுத்தத்தைப் போக்கும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை 2 மாதத்திற்கு முன்பே துவங்க வேண்டும் என்கிறார் டாக்டர் சப்ரா. பழங்கள், காய்கறிகள், ஒரு நாளைக்கு 3 தரம் கிரீன் டீ ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீவஸ்தவா.

நல்ல தோலைப் பெற அதற்கு ஈரத்தன்மை அளிப்பது அவசியம். எனவே, கிலென்சிங், டோனிங், மாய்சுரைசிங்கை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

நான் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்தலாமா? இது உகந்ததா?

ஒரு மணப்பெண் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதென்றால் ஒரு மாதத்திற்கு முன்பே உபயோகிக்கவும். அப்போது தான் ஏதாவது அலர்ஜி இருந்தாலும் திருமணத்திற்குள் மறைந்துவிடும் என்கிறார் சப்ரா. தோல் மினுமினுக்க வேண்டுமென்றால் வெயிலைத் தவிர்க்கவும்.

திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு எவ்வளவு செலவாகும்?

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு ரூ. 5,000ல் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். சிகிச்சைக்கு ஏற்றவாறு செலவும் அதிகரிக்கலாம்.
இந்த நிபுணர்கள் சொல்வதை செய்து பாருங்கள். பிறகு உங்கள் முகத்தில் வெட்கப் பூ சிரிப்பது போல சருமமும் ஜில்லென மினுமினுப்பதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை: