நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 20 செப்டம்பர், 2010

கத்தரிக்காய் :

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவை‌யி‌ல் ம‌ட்டுமே க‌த்‌தி‌ரி‌க்கா‌யி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்து‌கிறா‌ர்க‌ள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களு‌க்கு க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ந‌ல்லது. ‌அம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் க‌த்‌தி‌ரி‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அ‌தி‌ல்லாம‌ல் ஏ‌ற்கனவே சரும ‌வியா‌தி இரு‌ப்பவ‌ர்க‌ள் க‌த்‌தி‌ரி‌க்காயை உ‌ண்பதா‌ல் ‌வியா‌தி அ‌திக‌ரி‌க்கு‌ம். நமை‌ச்ச‌ல் உ‌ண்டாகு‌ம்.

கருத்துகள் இல்லை: