நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 23 செப்டம்பர், 2010

பேன், பொடுகு தொல்லையா?

பேன், பொடுகு தொல்லை பெண்களுக்குப் பெருந்தொல்லை. பேன் கூட பரவா‌யி‌ல்லை கா‌ட்டி‌க் கொடு‌ப்ப‌தி‌ல்லை. ஏனென்றால், பேனும் கருப்பு, தலை முடியும் கருப்பு. ஆனால் பொடுகு அப்படியில்லை. கருப்பான தலைமுடியில் பளிச்சென வெள்ளையாக காட்டிக் கொடுத்துவிடும்.


இந்த பேன், பொடுகு பிரச்சனைகளுக்கு எவ்வளவோ செலவு செய்பவர்களையும் நாம் பார்க்கிறோம். மேலும், பொடுகை ஒழிக்க வேண்டுமா? என்று வரும் விளம்பரங்களைப் பார்த்து அவற்றை வாங்கிப் போட்டு தலைமுடியை ஒழிக்கும் ஷாம்புகளையும் பார்க்கிறோம். 

ஆனால், இவையெல்லாம் இல்லாமல் எளிமையான இயற்கை முறையில் எப்படி ஒழிப்பது என்பதை இப்போது பார்ப்போம்:

பெரும்பாலும் தலையில் அழுக்கு சேர்வதாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்திய சீப்பை பயன்படுத்துவதாலும்தான் தலையில் பேன் உருவாகிறது.

வசம்புவை தண்ணீர் விட்டு அரைத்து, அதனை தலையில் தேய்த்து நன்றாக ஊரவிட்டு பின் தலையை அலசினால் பேன் ஓடியேவிடும்.

இதைவிட எளிதாக, வேப்பிலை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து தலைமுடியை அலசினாலே போதும் பேன் தொல்லை நீங்கும்.

கருந்துளசி இலைகளைப் பறித்து தலையணையின் மீது நன்றாக பரப்பிவிட்டு, அதன்மேல் மெல்லிய துணியைப் போட்டு அதன்மீது தலை வைத்துப் படுத்து உறங்கினால், தலையிலிருக்கும் பேன் தலைதெரிக்க ஓடியேவிடும்.

அடுத்தது பொடுகு, இதற்கும் முக்கியக் காரணம் அழுக்கான தலைமுடி, குளித்த பின் தலைமுடியை உலர்த்தாமல் இருப்பது, அதிக உடல்சூடு, அடுத்தவர் பயன்படுத்திய தலையணை, சீப்பு, துண்டு போன்றவற்றை பயன்படுத்துவதேயாகும்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தாலே போதும் பொடுகு இல்லாமல் போகும்.

நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிதளவு மிளகு ஆகியவற்றை நன்கு ஊறவைத்து பின் நன்றாக அரைத்து அதனை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலையை தண்ணீரில் அலசினால் பொடுகு நீங்கும்.

கருத்துகள் இல்லை: