நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 20 செப்டம்பர், 2010

வெண்டைக்காய்:

நா‌ம் கா‌ய்க‌றி கடை‌யி‌ல் சாதாரணமாக வா‌ங்கு‌ம் வெ‌ண்டை‌க்கா‌ய் ‌மிக‌ச் ‌சிற‌ந்த மரு‌த்துவ‌ப் பொரு‌ள் எ‌ன்பது பலரு‌‌‌ம் அற‌வி‌தி‌ல்லை. அதாவது வெ‌ண்ணடை‌க்கா‌ய் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வெ‌ண்டை‌க்காயை சமை‌க்காமலு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வெ‌ண்டை‌க்கா‌யி‌ல் ‌பி ம‌ற்று‌ம் ‌சி ‌ச‌த்து‌க்களு‌ம், உ‌யி‌ர்‌ச்ச‌த்து‌க்களு‌ம் இரு‌க்‌கி‌ன்றன. இதனை சமை‌க்கு‌ம் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். உட‌‌ல் சூ‌ட்டா‌ல் அவ‌தி‌ப்படுபவ‌ர்களு‌க்கு வெ‌ண்டை‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாகு‌ம். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ம‌ட்டு‌ம் வெ‌ண்டை‌க்காயை குறைவாக உ‌‌ண்பது ந‌ல்லது.

கருத்துகள் இல்லை: