நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 14 ஜூன், 2010

‌தீய பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் குறையு‌ம் ஆயு‌ள்

 ம‌னித‌ன் ப‌ல்வேறு ‌தீய பழ‌க்க வழ‌க்க‌ங்களு‌க்கு ஆ‌ட்படு‌கிறா‌ன். புகை‌ப்பது, மது அரு‌ந்துத‌ல், தவறான உணவு‌ப் பழ‌க்க‌ம், உடலு‌க்கு‌த் தேவையான உழை‌ப்‌பு இ‌ன்‌றி இரு‌ப்பது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஆயு‌ள் நா‌ட்க‌ள் குறை‌கிறது.

மேலே சொ‌ன்ன இ‌ந்த தவறான பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் ம‌னித உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள், அவனது வா‌ழ்‌வி‌ல் அவை ஏ‌ற்படு‌த்து‌ம் தா‌‌க்க‌ங்க‌ள் கு‌றி‌த்து நட‌ந்த ஆ‌ய்‌வி‌ல் இது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

ஆயு‌ள் குறை‌கிறது எ‌ன்றா‌ல் ஏதோ ஒரு நாளோ, இர‌ண்டு நா‌ட்களோ அ‌ல்ல.. 10 ஆ‌ண்டி‌ற்கு‌ம் அ‌திகமான ஆ‌‌ண்டுகளை, இதுபோ‌ன்ற தவறான பழ‌க்க வழ‌க்க‌த்தா‌ல் ஒரு ம‌னித‌ன் இழ‌க்க நே‌ரிடு‌கிறது எ‌ன்று கூறு‌கிறது அ‌ந்த ஆ‌ய்வு.

மே‌ற்கூ‌‌றிய தவறுக‌ளினா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் உட‌ல் ‌விரை‌விலேயே மூ‌ப்‌பினை அடை‌கிறது. அவரது உட‌ல் உறு‌ப்புகளு‌ம் பல‌வீன‌ம் அடை‌ந்து, அவ‌ரிட‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி ‌மிக‌க் குறைவாகவே இரு‌க்கு‌ம்.

இதனா‌ல் அவ‌ர் எ‌ளி‌தி‌ல் நோ‌ய் தா‌க்குதலு‌க்கு ஆளாவதோடு தனது ஆயுளையு‌ம் ‌விரை‌விலேயே முடி‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌கிறது எ‌ன்று கூறு‌கிறது ஆ‌ந்த ஆ‌ய்வு முடிவு.

கருத்துகள் இல்லை: