நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

இளமை நிலைத்து இருக்க இஞ்சி

அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இப்படி பல வகைகளில் நமக்கு பயன் அளிக்கும் சமையல் நண்பன் இஞ்சி ஆகும். பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய வைத்து சுக்காகவும் நமக்கு பயன் அளிக்கிறது.


இஞ்சி :- மணமுள்ள கிழங்குகளை உடைய சிறு செடி தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது. கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை. இவை, மருத்துவப் பண்பும், உணவு உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இது உணவில் சேர்க்கப்படுகின்றது. இது பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி ஏராளமாக பயிராகின்றது.

தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் அதிகமாக விளைகின்றது. நன்றாகக் காய வைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு எனப்படுபவை. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மருத்துவப்பயன்கள்:-

இஞ்சிக் கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வியர்வை மற்றும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

விஷப்பூச்சிகளால் உண்டாகும் பிரச்சனையை போக்கும் வெங்காயம்....

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.


 

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.

விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணு வீர்யம் அதிகரிக்கும்

மனிதனைக் கொல்லப் போகும் கோழி இறைச்சி! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40 மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் தலைமை இயக்குனர் சுனியா கூறுகையில் ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது.

கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும் வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர் இது முற்றிலும் தவறான அணுகுமுறை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுக்கும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சிக்கனில் 3.37 முதல் 131.75 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

சனி, 22 அக்டோபர், 2016

வெள்ளைப் பூண்டு !! 30 மருத்துவகுணம் !!!

நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்

நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது,

2)
இரத்தத்தில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)
உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)
இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,

5)
மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,

6)
உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),

7)
உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

8)
இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்

9)
சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,

10)
வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,

11)
அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,

12)
புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,

13)
வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

14)
நன்கு பசியைத் தூண்டும்.

15)
குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது

16)
மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

17)
வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,

18)
பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,

19)
ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,

20)
மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

21)
கருப்பையை வலுப்படுத்தும்.

22)
சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,

23)
மூளையை பலம்பெறச் செய்கிறது

24)
சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,

25)
தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,

26)
தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,

27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,

28)
தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.

29)(
சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,

30)
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

சனி, 24 செப்டம்பர், 2016

அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகள் !!!

சமையல் சோடா கிளீன்ஸர் - சமையல் சோடாவையும்,

ஆப்பிள் சிடர் வினிகரையும் கலந்து நீங்களாகவே உங்களுக்குத் தேவையான வெண்மைப்படுத்தும் முகமூடியை (Whitening Mask) செய்யலாம். இந்த பசைக்காக நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி, நாளொன்றுக்கு இருமுறை போட்டுக் கொள்ளலாம். நீங்கள் வினிகர் மற்றும் சமையல் சோடாவை போடும் போது வரும் குமிழிகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம். அந்த குமிழிகள் உடனடியாக வருவது குறைந்து விடும். மாறாக, நீங்கள் எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை கலக்கலாம். அதனை சாதாரணமாக போட்டு விட்டு, அது காயும் வரை பொறுத்திருந்து, பின்னர் கழுவி விடவும்.அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். ஒரே இரவில் அற்புதங்களை இது நிகழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மேலும், ரேஸர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்ப்பது நலம். ஏனெனில், கருப்பான அக்குள் உருவாக இவைதான் முக்கிய காரணங்களாக உள்ளன. முடிகளை நீக்குவதற்கு மெழுகை பயன்படுத்த தொடங்குங்கள். நீங்கள் வெண்மையான அக்குளைப் பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சொல்லும் வகையில் பொறுமையும் அவசியம்

10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவது எப்படி ?

வயிற்றில் உள்ள கொழுப்பை 10 நாட்களில் குறைப்பது என்பது முடியாத ஒன்றாகும். உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியில் சரியான மாற்றங்களை கொண்டு வந்தால், 10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும்.

உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமானால். மெட்டபாலிக் வீதத்தை அதிகரிக்க வேண்டும். கீழ்கூறிய உத்திகளை பின்பற்றினால் 10 நாட்களில் தட்டையான வயிற்றைப் பெறலாம்.

நாள் 1

தட்டையான வயிற்றை பெறுவதற்கான முதல் படி, வீட்டிலுள்ள அனைத்து ஜங்க் உணவுகளையும் தூக்கியெறிய வேண்டும். ஜங்க் உணவுகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், கோழி / வாத்து, மெல்லிய மாட்டிறைச்சி, முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் ஆகியவற்றை மாற்றுங்கள். ஹாட் டாக்ஸ் அல்லது சாசேஜ் அல்லது மிட்டாய்கள் போன்றவைகளை வீட்டில் வைக்காதீர்கள். நாள் ஒன்றிலிருந்தே அனைத்து கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்க்கவும். உங்கள் உடலை சுத்தம் செய்யவும் கொழுப்பை அகற்றவும் தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். தட்டையான வயிற்றை பெறும் முயற்சியில் இறங்குவதற்கு 3-5 நாளைக்கு முன்னாள் விரதமும் இருக்கலாம். விரதம் இருக்கையில் 3-5 ஆப்பிள் சீடர் வினிகர் பானங்களை மட்டும் குடியுங்கள். 2 டீஸ்பூன் ஆர்கானிக் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் தேனை 8 அவுன்ஸ் சுத்தமான நீருடன் கலந்து கொள்ளவும். கொழுப்பை குறைக்கும் செயல்முறையை ஆரம்பிக்கும் போது இதனை 2-3 முறை குடிக்கவும்.

நாள் 2


இந்த நாளில் வேக வைத்த அல்லது பச்சை காய்கறிகளை அதிகமாக உண்ணுங்கள். கோழி சூப்பை உட்கொண்டு வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கலாம். 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை எதையாவது உட்கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மெட்டபாலிக் வீதத்தை அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நிலைப்படுத்தும். 5-6 முறை காய்கறிகளையும் பழங்களையும் உட்கொண்டால் பசியை தவிர்க்கலாம். அதிக கார்பஸ் அடங்கியுள்ள பழங்களான வாழைப்பழம், ஆப்பிள் போன்றவைகளை தவிர்க்கவும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உணவுகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுடன் உடற்பயிற்சியையும் தொடரலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால், 20 நிமிடங்களுக்கு நடை கொடுத்தல் போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

நாள் 3

காலை உணவிற்கு 50 கிராம் கார்போஹைட்ரேட்ஸை உட்கொள்ளவும். கொழுப்பை வேகமாக குறைக்க வேண்டுமானால், குறைந்த அளவிலான கார்ப்ஸ் அடங்கிய உணவுகள் முக்கியம். ஒரு கப் ஓட்ஸ் கஞ்சியில் 50 கிராம் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. மற்ற வேளைகளுக்கு, மெல்லிய புரதம் அடங்கிய உங்கள் உள்ளங்கை அளவிலான உணவுகளை உட்கொள்ளுங்கள். வே புரதம், தயிர், நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நொறுக்குத் தீனியாக உண்ணுங்கள். உட்கொள்ளும் கொழுப்பின் அளவை குறைக்க ஆலிவ் எண்ணெய் அல்லது மீன் எண்ணெய் பயன்படுத்துங்கள். மயோனைஸ், செயற்கை வெண்ணெய், வெண்ணெய், பிற காய்கறி எண்ணெய் போன்றவைகளை தவிர்க்கவும். குத்த வைத்து மூச்சு விடுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து வயிற்று கொழுப்பை குறைக்கலாம். குத்த வைத்து உட்காரும் போது, உங்கள் கீழ் பகுதியை முடிந்த வரையில் குறைக்கவும். குறைக்கும் போது மூச்சை இழுக்கவும். சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டு குறைத்த பகுதியை மேல் கொண்டு வரவும். இந்த உடற்பயிற்சியை 10 முறை தொடர்ந்து செய்யவும்.

நாள் 4

முட்டையின் வெள்ளை கருவை கொண்டு 3 ஆம்லெட் மற்றும் காய்கறிகள் அல்லது கீரைகளை காலை உணவாக உண்ணலாம். சிகப்பு மிளகு சேர்க்கப்பட்ட வேக வைத்த கோழிக்கறி அல்லது வெள்ளரிக்காய் கலந்த வான்கோழி நெஞ்சுக்கறியை நொறுக்குத்தீனியாக உண்ணலாம். காய்கறிகள், கோழிக்கறி, ஆலிவ் எண்ணெய் கலந்த சாலாட்களை மதிய உணவில் ஏறத்துக் கொள்ளலாம். ஒரு முறை உண்ணுவதற்கு 150 கிராமிற்கு அதிகமான கோழிக்கறி அல்லது வான்கோழி கறி வேண்டாம். பசிக்கும் போது பயறுகள் அல்லது நட்ஸ்களை கைநிறைய எடுத்து உண்ணுங்கள். இது உங்கள் பசியை போக்கும். வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை நீக்க க்ரஞ்சஸ் வகையிலான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் தலைக்கு பின்னால் கைகளை கட்டிக்கொண்டு, முட்டியை மடக்கி வைத்து, கால்களை தரையில் திடமாக ஊன்றவும். வயிற்று தசைகளை இறுக்கி, உங்கள் தோள்பட்டையை தரையில் இருந்து தூக்கவும். இதனை மூன்று முறையாவது செய்யுங்கள்.

நாள் 5

குறைந்த அளவிலான கொழுப்புள்ள பால் மற்றும் பழங்களை இந்த நாளில் உண்ணுங்கள். வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு போதிய கார்போஹைட்ரேத்ஸை அளிக்கும். உங்கள் வயிற்றை நிரப்ப காய்கறி சூப்கள் அல்லது சாலட்களை உண்ணலாம். இதனால் போதிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். அதிக அளவிலான தண்ணீரை குடித்து உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சியையும் செய்திடுங்கள். பின்புறமாக படுத்து, முட்டியை மடக்கி, பாதத்தை தரையில் வைத்திடவும். கைகளை படர்ந்து விரித்து, விரல்களை மேற்புறம் பார்த்தவாறு வைக்கவும். மூச்சை வெளியற்றி மெதுவாக உட்கார முயற்சிக்கவும். மூச்சை உள்வாங்கி மீண்டும் மெதுவாக படுங்கள்.

நாள் 6

பச்சை பீன்ஸ், ஒரு முழு முட்டையில் தயாரிக்கப்பட்ட கொத்து முட்டை, இரண்டு முட்டையின் வெள்ளைக்கருக்கள் மற்றும் தக்காளியை காலை உணவாக உட்கொள்ளவும். மீன், ஆட்டுக்கறி அல்லது கிரில் செய்யப்பட்ட கோழியின் நெஞ்சுக்கறியை நொறுக்குத் தீனியாக உண்ணலாம். பழங்களையும், காய்கறிகளையும் ஐந்து முறை உட்கொள்ள வேண்டும். நடைபயிற்சி முதல் உட்கார்ந்து எழுந்திருப்பது வரை அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்திடுங்கள். கொழுப்புகளை வேகமாக குறைக்க வேண்டுமானால், க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.

நாள் 7

கிரில் செய்யப்பட்ட/வேக வைத்த கோழி அல்லது வாத்தின் நெஞ்சுக்கறியுடன் வேக வைத்த கீரை அல்லது க்ரில் செய்யப்பட்ட தக்காளியை காலை உணவாக உண்ணலாம். பிரேசில் நட்ஸ் அல்லது தர்பூசணி விதைகள் அல்லது வேக வைத்த பச்சை பூக்கோசை நொறுக்குத் தீனியாக உண்ணுங்கள். தற்போது செய்து வரும் உடற்பயிற்சியை ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியாக மாற்றிடுங்கள். உடற்பயிற்சியை மாற்றுவதால் உடலில் அதிர்வு ஏற்பட்டு, மெட்டபாலிக் வீதம் அதிகரிக்கும். அதனால் வயிற்றில் இருந்து கொழுப்பு வேகமாக கரையும். ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியை 30 நிமிடங்களுக்கு செய்யவும்.

நாள் 8

குறைந்த ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளை தவிர்க்கவும். முழு கோதுமை ரொட்டி மற்றும் 2 முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு செய்த ஆம்லெட்டை காலை உணவாக தேர்ந்தெடுங்கள். 10-12 டம்ளர் தண்ணீர் குடிப்பதை தொடருங்கள். சோயா முறுக்குகள், தயிரில் ஊற வைத்த பழங்கள் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள். மேலும் சீராக செய்து வரும் உடற்பயிற்சிகளுடன் நீச்சல் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாள் 9

இந்த நாளை சைவ நாளாக மாற்றுங்கள். கலோரிகள் குறைவாக உள்ள அனைத்து காய்கறிகளையும் நாள் முழுவதும் உண்ணுங்கள். இது உங்கள் செரிமான அமைப்பில் தேங்கியுள்ள கொழுப்புகளை சுத்தப்படுத்த உதவும். நல்ல பலனை அடைய நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நடை பயிற்சியை 40 நிமிடங்களுக்கு அதிகரித்திடுங்கள். அனைத்து க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

நாள் 10

முழு தானிய உணவுகள் மற்றும் பழங்களை கொண்ட காலை உணவை உண்ணுங்கள். குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட நொறுக்குத் தீனிகள் மற்றும் சூப்களை தேவையான நேரத்தில் உட்கொள்ளலாம். விதவிதமான உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்யுங்கள் - ஸ்கிப்பிங் பயன்படுத்துங்கள் அல்லது லெக் டக் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். குறைந்த சர்க்கரை, குறைந்த கார்ப் அடங்கிய உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் நல்ல பலனை பெறலாம். வயிற்றை குறைத்து தட்டையாக மாற்ற வேண்டுமா? அதிலும் இந்த இலக்கை 10 நாட்களுக்குள் அடைய வேண்டுமா? அப்படியானால் மேற்கூறிய உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி திட்டத்தை பின்பற்றி, மெட்டபாலிக் வீதத்தை அதிகரித்து, வயிற்று கொழுப்பை குறைத்திடுங்கள்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

பா‌லி‌ன் மக‌த்துவ‌ம்




பா‌லி‌ல் தா‌ய்‌ப்பா‌ல், பசு‌ம்பா‌ல், எரு‌மை‌ப்பா‌ல், ஆ‌ட்டு‌ப்பா‌ல் என ‌சில வகைக‌க‌ள் உ‌ண்டு. ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ஒ‌வ்வொரு குண‌ம் உ‌ள்ளது.

தா‌ய்‌ப்பா‌ல்
எ‌ன்பது ஒ‌வ்வொரு குழ‌ந்தை‌க்கு‌ம், தா‌யிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் முத‌ல் ம‌ற்று‌ம் ஈடு இணைய‌ற்ற உணவாகு‌ம்.

அடு‌‌த்து
பசு‌ம்பா‌ல் எ‌ன்பது இயல்பாகவே இனிப்பானது, உடலு‌க்கு குளிர்ச்சி தருவது. ஆனா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகாது. எருமை‌ப் பா‌ல் அ‌திக‌க் கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. உடலு‌க்கு ந‌ல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


ஆ‌ட்டு‌ப்
பா‌‌லி‌ல் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ‌‌நிறைய ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

வயிற்றுப்போக்கு
உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால்


அதை உடனே கட்டுப்படுத்தும்!

பா‌ல்
குடி‌த்தது‌ம் புத்துணர்வு தர‌க் கூடியது. பசு‌ம்பா‌ல் குடி‌த்து வ‌ந்தா‌ல் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலா‌ம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மரு‌ந்தாக உ‌ள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.




பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பால், மா‌ட்டி‌ன் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது