நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

இளமை நிலைத்து இருக்க இஞ்சி

அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இப்படி பல வகைகளில் நமக்கு பயன் அளிக்கும் சமையல் நண்பன் இஞ்சி ஆகும். பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய வைத்து சுக்காகவும் நமக்கு பயன் அளிக்கிறது.


இஞ்சி :- மணமுள்ள கிழங்குகளை உடைய சிறு செடி தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது. கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை. இவை, மருத்துவப் பண்பும், உணவு உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இது உணவில் சேர்க்கப்படுகின்றது. இது பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி ஏராளமாக பயிராகின்றது.

தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் அதிகமாக விளைகின்றது. நன்றாகக் காய வைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு எனப்படுபவை. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மருத்துவப்பயன்கள்:-

இஞ்சிக் கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வியர்வை மற்றும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்

கருத்துகள் இல்லை: