நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மனிதனைக் கொல்லப் போகும் கோழி இறைச்சி! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40 மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் தலைமை இயக்குனர் சுனியா கூறுகையில் ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது.

கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும் வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர் இது முற்றிலும் தவறான அணுகுமுறை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுக்கும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சிக்கனில் 3.37 முதல் 131.75 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: