நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 4 மார்ச், 2012

குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடுங்க ! குழந்தைகளுக்கு நல்லது !!

குடும்பத்தினரின் பராமரிப்பில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனர். ஒரு இடங்களில் சரிவிகித சத்துணவு கிடைக்காமல் நோய்க்கு ஆளாகின்றனர். இந்த இரண்டுமே தவறானது. இதனால் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாட்டிற்கு பெற்றோர்களும், முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

நோய் தாக்குதல் அதிகம்

ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 2 முதல் 17 வயதுடைய 1லட்சத்து 83 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு நிலையத்தின் கணக்கெடுப்பின் படி கடந்த 3 வருடங்களாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பானது 3 மடங்கு உயர்ந்துள்ளது. அத்தோடு இந்த எண்ணிக்கை 2008இல் 20 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.

இந்த அதிக உடல் பருமன் குழந்தைகளின் சுய மதிப்பீட்டைக் குறைத்து அவர்களை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு ஆளாக்குகிறது என்று கண்டறியப்பட்டது.

குடும்பத்தோட சாப்பிடணும்

பெற்றோர்களோடு அமர்ந்து வாரத்தில் மூன்று நாட்களுக்கு உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது 12 சதவிகிதம் குறைவாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இவ்வாறானவர்களில் வேண்டாத உணவுப்பொருட்களை உண்பவர்கள் 20 வீதம் குறைவாகவும், சாப்பாட்டு பிரச்சினை, சாப்பிடாமல் இருப்பது என்பன 35 வீதம் குறைவாகவும் மரக்கறி மற்றும் இதர ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உண்பவர்கள் 24 வீதம் அதிகமாகவும் உள்ளனர்.

குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்தும்போது ஊட்டச்சத்துள்ள உணவுகள் குழந்தைகளுக்கு அதிகம் கிடைத்தன. குழந்தைகளும் அவற்றை ஆர்வமுடன் உட்கொண்டதாக மனோத்தத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,

எல்லா ஆய்வுகளுமே வீட்டில் குடும்பமாக அமர்ந்து உண்ணுவது சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக்கூடிய நல்லதொரு வழியாகவே சுட்டிக்காட்டுகின்றன. நம் நாட்டில் காலை நேரத்தில் குழந்தைகளுக்கு அவசரமாக ஊட்டி விடுவதும், மதியம் பள்ளியில் சாப்பிடுவதும் வழக்கம் என்றாகிவிட்டது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அதேபோல் விடுமுறை நாட்களில் மூன்று வேளையும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

கருத்துகள் இல்லை: