நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 14 மார்ச், 2012

புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரை[Aspirin]

ஆஸ்பிரின் மாத்திரைகளை ஏதோ தலைவலி குணப்படுத்தும் மாத்திரை என்று நினைத்துக் கொண்டிருக்க, இருதய நோயாளிகளுக்கு இன்று ஆபத்பாந்தவனாகவும் இன்றியமையாத மருந்தாகவும் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், புற்றுநோயை கட்டுப்படுத்த பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆஸ்பிரின் மாத்திரைகள் சாப்பிட்டால் புற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம், என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் தான் புற்று நோய் வேகமாக பரவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ரசாயன மூலக் கூறுகள் சுரக்கும் நிணநீரின் தன்மையை கட்டுப்படுத்துகிறது. அதனால் புற்று நோய் வேகமாக பரவுவது தடுக்கப்படுகிறது என ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மார்பக புற்று நோய் போன்றவற்றுக்கு தொடக்க காலத்திலேயே ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் அவை மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரல், மூளை மற்றும் தொண்டை புற்று நோயை பரவாமலும் ஆஸ்பிரின் தடுக்கும் என்றும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: