நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 24 அக்டோபர், 2011

ஜோக்கு

0. வயசான மனிதர் ஒருத்தர் சாகும் நிலையில் இருந்தார் அவர் தன்னோட குடும்ப டாக்டர், வக்கீல், பாதிரியார் மூணு பேரையும் கூப்பிட்டார். ”என்னோட மொத்த சொத்து மூணு லட்சம்

ரூபாய், இதை யாருக்கும் தர எனக்கு இஷ்டம் இல்லை. இந்தப் பணத்தை என்னோடவே கொண்டு போகணும்-னு ஆசைப்படறேன். இதை உங்க மூணு பேரிடமும் ஆளுக்கு ஒரு லட்சமா

தர்றேன். நான் செத்ததும் என் சவப்பெட்டியில் இந்தப் பணத்தையும் போட்டுப் புதைச்சிடுங்க”-னு குடுத்துட்டு கொஞ்சநாள்ல அவர் செத்துப் போய்ட்டார்.

அவரது சவப்பெட்டியில் மூணு பேரும் ஆளுக்கொரு கவரைப் போட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்துப் பாதிரியார் அழுதுக்கிட்டே, ”நான் எழுபதாயிரம் ரூபாய்தான் போட்டேன். ஒரு அநாதை

குழந்தையோட கல்விக்காக அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன்” னு குற்றவுணர்வோடு சொன்னார்.

இதைக் கேட்டதும் டாக்டரும் “நான் நாற்பதாயிரம் ரூபாய்தான் போட்டேன். மருத்துவமனையில் ஒரு மெஷின் வாங்கறதுக்காக அறுபதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன். நான் பாவி”-னு

ரொம்ப அழுதார். அதைக் கேட்டுட்டிருந்த வக்கீலுக்குக் கோபம் வந்தது. ”ச்சே நான் உங்களை மாதிரி ஏமாத்து ஆசாமி கிடையாது. சுளையா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி அந்த

சவப்பெட்டிக்குள்ள போட்டுட்டேன்னார்”

1. ஒரு வக்கீலிடம் ”நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு

கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா” ?-னு கேட்டான் ஒருத்தன்.

”நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன” ?-னு கேட்டார் வக்கீல்.


2. மரணப் படுக்கையிலிருந்த கணவன், தன் மனைவியிடம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ”உனக்குத் தெரியுமா. என்னோட எல்லா கஷ்ட காலங்கள்லயும் நீ என்

கூடவே இருந்திருக்கே. நான் ஒரு விபத்துல சிக்கினப்ப கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டே என்னோட பிஸினஸ் நொடிச்சுப் போனப்ப தைரியம் சொன்னது நீதான். உடம்பு மோசமாகி.

ஏழெட்டு மாசமா கோமாவுல இருந்தப்பவும் கூடவே இருந்து பார்த்துக் கிட்டது நீதான். இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கறப்போ .. ..”

”எமோஷனலாகாதீங்க .. .. என் கடமையைத்தானே செஞ்சேன்” கண்ணீர் உகுத்தாள் மனைவி.

பொருட்படுத்தாமல் கணவன் சொன்னான் - ”குறுக்கே பேசாதடி சனியனே. .. நீதான் எனக்கு எல்லா துரதிர்ஷ்டத்தையும் கொண்டுவந்திருக்கே”

3.ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. ”என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே” னு சொன்னா முதல் பெண். அதுக்கு

ரெண்டாவது பெண் “என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்” ன்னா முதல் பெண்ணுக்கு

செம ஆச்சரியம் ”அப்படி என்னதான் பண்ணினே ?”-னு கேட்டா.

”ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா ?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்” னு சொன்னா

ரெண்டாவது பெண்.

முதல் பெண் ”புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு ?” -னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் ” வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்”

கருத்துகள் இல்லை: