நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வெள்ளி, 31 டிசம்பர், 2021

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றும் ஆரஞ்சு பழம் !!

 பழங்களில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு ஒரு பெயரும் உண்டு.



ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

ஆரஞ்சு பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

தொப்பையை குறைத்திடும் வழி....!

 தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.  உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.



வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது  வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

எலுமிச்சையில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

 மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

ஆய்வு ஒன்றில் இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை  உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.



புதன், 29 டிசம்பர், 2021

பித்தப்பை கற்கள் நீங்க செய்யப்படும் இயற்கை மருத்துவ முறைகள்....!


 கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு  மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். 

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம்  குடிக்கவும். 


கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரணக் கோளாறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது


இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஒன்று. இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ்  அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.


இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்


புதன், 15 டிசம்பர், 2021

30 நிமிடத்தில் செய்யலாம் சூப்பரான ஸ்நாக்ஸ்

 ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

தேவையான பொருட்கள் :


எள் - 1 கப்,

பொடித்த வெல்லம் - ¾ கப்,

நீர் - ¼ கப்,

ஏலப்பொடி- 1 டீஸ்பூன்.



செய்முறை:


வெள்ளை அல்லது கருப்பு எள்ளை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி களைந்து வடிகட்டி ஈரம் காய்ந்ததும் வெறும் வாணலியில் போட்டு படபடவென வெடிக்கும் வரை காத்திருந்து (கருகிவிடாமல்) எடுத்து தட்டில் கொட்டவும்.


ஒரு பாத்திரத்தில் வெல்லம் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும்.


ஏலப்பொடி சேர்த்து பாகில் 1 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.


பாகு நன்கு காய்ந்ததும், எள்ளில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டி காம்பால் கிளறி கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.


இப்போது சூப்பரான எள்ளுருண்டை தயார்.

மாதுளை இலைகளும் மருந்தாகும்..

 இருமல், சளி:


மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் தணியும். தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவும். மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.


வயிற்று வலி:


மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும். இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாதுளை இலைகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.


தூக்கமின்மை:



மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை. ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.


தோல் அழற்சி:


நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த நோயை குணப்படுத்த மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்

திங்கள், 29 நவம்பர், 2021

தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

 தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப்-ஐ குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்குமென்று சாப்பிட வேண்டும்.

ஒரு கப்பில் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இது காய்ச்சலை போக்கும்.தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும். நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும்.உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் - தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன. இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சிரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 - 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.


ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

தக்காளி கடலைப்பருப்பு துவையல்

 தக்காளி உணவுகளை அடிக்கடி பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


தக்காளி - கால் கிலோ,

கடலைப்பருப்பு- 100 கிராம்,

கடுகு - 1 ஸ்பூன்,

பூண்டு - 4 பல்,

காய்ந்த மிளகாய்- 10,

எண்ணெய் - 2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.


செய்முறை


தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.


சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.


குழந்தைகளிடம் பேசினால் மூளை வளரும் !!!

 குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெற்றோர் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவைகளுக்கு மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். அது குழந்தைகளின் தசைகள் மற்றும் மனதை இலகுவாக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடல் பக்குவப்படுவதற்கும் வழிவகை செய்யும். குழந்தைகளிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கவும் வேண்டும்.



நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும். பாடல்கள் கேட்பதும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.


ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தாலும் புத்தகங்களில் இருக்கும் படங்களை காண்பித்து விளக்கம் அளிக்கலாம். அந்த படங்கள் குழந்தைகளின் மனதில் பதிய தொடங்கிவிடும். குழந்தைகளை ஒரே இடத்தில் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும். சுழலும் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் அங்கும், இங்கும் நகரும் போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும்.


தூரத்தில் இருக்கும் பொருட்களை காண்பித்து தொட்டு வரும்படி குழந்தைகளிடம் கூற வேண்டும். அது கை, கால்களை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு பயிற்சியாக அமையும். குழந்தைகள் படுத்திருக்கும்போது அவர்களின் தலைக்கு மேல் கண்கவர் பொருட்களை தொங்கவிட வேண்டும். அந்த பொருளை உற்று நோக்கவும், கையால் எடுக்கவும் பழகுவார்கள். அது கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். எல்லா பொருட்களையும் கூர்ந்து பார்க்கவும் பார்வையை ஓரிடத்தில் குவிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள்


புதன், 23 ஜூன், 2021

உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...

 ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது. 


அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

 சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம்  உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

 சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி  விடுகின்றன.

வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண  சக்தியைத் தூண்டும்.

 தீக்காயங்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ களிம்பாக பண்டைய காலத்திலேயே நெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீக்காயம் பட்ட இடங்களில் தினமும்  சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.


தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன...?

 தைராய்டு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது.


இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும்  தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு  உருவெடுத்துள்ளது.


தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால்  ஏற்படும் பிரச்சனையை ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும்.

 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:


 

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும்  குறைத்துவிடும்.

 

சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை  உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

 

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே,  இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்