நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

தக்காளி கடலைப்பருப்பு துவையல்

 தக்காளி உணவுகளை அடிக்கடி பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


தக்காளி - கால் கிலோ,

கடலைப்பருப்பு- 100 கிராம்,

கடுகு - 1 ஸ்பூன்,

பூண்டு - 4 பல்,

காய்ந்த மிளகாய்- 10,

எண்ணெய் - 2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.


செய்முறை


தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.


சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.


குழந்தைகளிடம் பேசினால் மூளை வளரும் !!!

 குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெற்றோர் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவைகளுக்கு மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். அது குழந்தைகளின் தசைகள் மற்றும் மனதை இலகுவாக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடல் பக்குவப்படுவதற்கும் வழிவகை செய்யும். குழந்தைகளிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கவும் வேண்டும்.



நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும். பாடல்கள் கேட்பதும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.


ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தாலும் புத்தகங்களில் இருக்கும் படங்களை காண்பித்து விளக்கம் அளிக்கலாம். அந்த படங்கள் குழந்தைகளின் மனதில் பதிய தொடங்கிவிடும். குழந்தைகளை ஒரே இடத்தில் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும். சுழலும் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் அங்கும், இங்கும் நகரும் போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும்.


தூரத்தில் இருக்கும் பொருட்களை காண்பித்து தொட்டு வரும்படி குழந்தைகளிடம் கூற வேண்டும். அது கை, கால்களை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு பயிற்சியாக அமையும். குழந்தைகள் படுத்திருக்கும்போது அவர்களின் தலைக்கு மேல் கண்கவர் பொருட்களை தொங்கவிட வேண்டும். அந்த பொருளை உற்று நோக்கவும், கையால் எடுக்கவும் பழகுவார்கள். அது கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். எல்லா பொருட்களையும் கூர்ந்து பார்க்கவும் பார்வையை ஓரிடத்தில் குவிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள்


புதன், 23 ஜூன், 2021

உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...

 ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது. 


அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

 சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம்  உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

 சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி  விடுகின்றன.

வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண  சக்தியைத் தூண்டும்.

 தீக்காயங்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ களிம்பாக பண்டைய காலத்திலேயே நெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீக்காயம் பட்ட இடங்களில் தினமும்  சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.


தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன...?

 தைராய்டு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது.


இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும்  தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு  உருவெடுத்துள்ளது.


தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால்  ஏற்படும் பிரச்சனையை ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும்.

 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:


 

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும்  குறைத்துவிடும்.

 

சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை  உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

 

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே,  இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்

திங்கள், 17 மே, 2021

கண்பார்வையின் நலத்திற்கு மிகுந்த பலன் தரும் செர்ரி பழம் !!

 செர்ரி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும்  அவசியமாகும். 


கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது.




செர்ரி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல்  பிரச்சனைகள் நீங்கும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் செர்ரி பழம் பேருதவி புரிகிறது. 

 

பலருக்கும் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செர்ரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில்  செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

 

செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். எனவே இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க செர்ரி பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும்.

 

செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

புதன், 14 ஏப்ரல், 2021

நகங்கள் உடையாமல் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் !!

  என்னதான் மெனிக்கியூர், பெடிக்கியூர் என நகங்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்த நகம்  படக்கென உடைந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிடும். இதற்கு காரணம் நம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாதது தான்.


* கால்ஷியமும் புரோட்டீனும் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளவது நகங்களுக்கு சிறந்தது.இந்த சத்துக்கள் கிடைப்பதற்கு முட்டையை தினமும்  உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

 

* அயன் மற்றும் ஜிங்க் நிறைந்த  உணவை சாப்பிட வேண்டும் அதாவது பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் உடைந்த நகம் கூட நன்கு வளரும்.  

 


* விட்டமின் ஏ மற்றும் பயோட்டீன்(விட்டமின் பி) நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவது நகங்களுக்கு பலத்தை பெருக்கும். கேரட், பீட்ரூட் போன்ற  காய்கறி சேர்த்து கொள்ளுங்கள்.

 

* சியா விதைகள், சம்சா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான நகங்கள் கிடைக்கும் இவை துணை புரியும். வெதுவெதுப்பாக ஆலிவ் ஆயிலை சூடாக்கி  நகங்களில் வாரம் ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம்.

 

* பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால் இயற்கை முறையில் ஆரோக்கியமான பலப்பலப்பான நகம் வளரும். கைகள் ஈரமாக இருக்கும்  போது நகங்களை ஷேப் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

 

* தரமான நெய்ல் பாலிஷ்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நெய்ல் பாலிஷ் ரிமுவரை அடிக்கடி பயன்படுத்துவது நகரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நெய்ல் பாலிஷ் ரிமுவர் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து உபயோக்கிப்பது நல்லது.


வியாழன், 11 மார்ச், 2021

பார்லியில் உள்ள சத்துக்கள் ...

 பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.


உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம்  காணப்படுகிறது.

 

பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக  செயல்படுகிறது.

 


பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன.

 

பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு  வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைகிறது.

 

பித்தப்பை கற்கள் நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாக  காரணமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கிறது.

கருப்பட்டியில் உள்ள சத்துக்களும் அற்புத மருத்துவ குணங்கள்

 சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.



ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.


கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.


கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.


கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின்

இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தை பளிச்சிட செய்யும் காஃபி தூள் !!

 கற்றாழையின் சதை பகுதியை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்


.


காஃபி தூள் 4 ஸ்பூன், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.

 

ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில்  கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

 

4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால்,  கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

 

4 ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.


முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

 எடை கூடிய பொருட்களைத் தூக்குதல் முதுகுவலி உருவாக்கும் முக்கிய காரணி. இது அலுவலகங்களில் பாரமான பெட்டிகளைத் தூக்குவோருக்கு மட்டுமல்லாமல் தொடர்ந்து கனமான லாப்டாப் பை, கேமரா பை, மளிகை, கைப்பெட்டி போன்றவற்றைத் தூக்கிச்செல்வோருக்கும் பொருந்தும். 


ஒரே இடத்தில் நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்பதோ, நிற்பதோ, படுத்திருப்பதோ முதுகிற்கு ஆரோக்கியமானதல்ல. ஆகவே, நேரம் கிடைகும்போதெல்லாம் எழுந்து அக்கம் பக்கம் நடந்து சில எளிய நீட்சி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் முதுகுப்புறத்தில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கவும் செயல்பாட்டின்மையால்  வரும் நோவு, அழுத்தம் போன்றவை குறையவும் வழி வகுக்கும்.

 

முடிந்தவரை தோள்களிலுள்ள பாரத்தை குறைக்கவோ, உடலின் இருபுறமும் பாரத்தைப் பிரியுமாறு செய்யவோ அல்லது ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றி மாற்றிக்கொண்டோ இருப்பது நல்லது.

 

முதுகுவலி குறைய காலுக்கு இதமான, 1- இஞ்சுக்கும் குறைந்த ஹீல்ஸ் செருப்புக்களை அணியுங்கள். 

 


முதுகு படுக்கையை தொடுமாறு நேராக தூங்குவதால் முதுகுத்தண்டின்மேல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கால்களை லேசாக உயர்த்திக்கொண்டு தூங்கும் போது  இந்த அழுத்தம் குறைகிறது. முழங்காலின் அடியில் தலையணையை வைத்துத் தூங்கும்பொழுது, முதுகின்மீதான அழுத்தம் பாதியாகக் குறைக்கப்படுகிறது.

 

கால்சியம், விட்டமின் D அடங்கிய உணவுகளை உட்கொள்வதால் எலும்புகளை வலுவாக வைத்திருக்கலாம். கால்சியம் பால், தயிர், கீரைகளில் கிடைக்கிறது. விட்டமின் D கொழுப்புள்ள மீன், முட்டையின் மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, போன்றவற்றில் கிடைக்கிறது.

 

நிமிர்ந்த நிலை மிடுக்கான நல்ல தோரணையைத் தருவதுடன், முதுகுத்தண்டின் உட்பாகங்களைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வளைந்து  நிற்கும் மோசமான நிலையினால் முதுகிற்கும் முதுகுத்தண்டிற்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது