நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய...

தேவையான பொருட்கள்:
தக்காளி - 100 கிராம்

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 50 மில்லி

கடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

புளி - ஒரு எலுமிச்சை அளவு

எண்ணெய் - 25 மில்லி
 
செய்முறை:
தக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஒட்டாமல் திரண்டு வரும் போது கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆந்திரா தக்காளித் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்

ஆரோக்கியம் கொண்ட உளுத்தம் மாவு புட்டு...!

தேவையானவை:

தோல் உள்ள உளுந்து - 200 கிராம்

புழுங்கல் அரிசி - 100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

ஏலக்காய் - சிறுதளவு

உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தையும், அரிசியையும் தனித்தனியே நன்றாக சுத்தம் செய்து அரைத்த மாவை ஒன்றாக கலந்து, இதில் தேவையான அளவு உப்பு போட்டு, சிறுது தண்ணீர் தெளித்து கெட்டியாக சற்றே கரகரப்பான பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதாவது புட்டு மாதிரி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

புட்டு மாதிரி உதிரியாக வேக வைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும். புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்து கிளறவும். சூடாக சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமள், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

பலன்கள்:

உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண்களுக்கு கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும் ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

குறிப்பு:

உளுந்தை சற்று லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். நல்ல வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!

நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை கொண்டு நமது முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்

உலர்ந்த சிகைக்காய்

உலர்ந்த நெல்லிக்காய்

ரீத்தா (பூந்தி கொட்டை)

தண்ணீர்

ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை:

வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த நெல்லிக்காய் - 1/2 கப்

உலர்ந்த சிகைக்காய் - 1/2 கப்

பூந்தி கொட்டை - 10

தண்ணீர் - 1.5 லிட்டர்


 

 
செய்முறை:

முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.

இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நிரந்தரமாக அக்குளில் உள்ள முடியை நீக்குவது எப்படி தெரியுமா ?



பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள்.

இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம்.

அக்குளில் உள்ள முடியை இயற்கை வழியில் நீக்க உதவும் அந்த இரண்டு சமையலறைப் பொருட்கள் தான் எலுமிச்சை மற்றும் சர்க்கரை.

2
டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், அக்குளில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி வளர்வதே நின்றுவிடும்.

வேண்டுமானால் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இந்த முறையின் மூலமும் அக்குள் முடியை நிரந்தரமாக தடுக்கலாம்.

எலுமிச்சையை சருமத்திற்குப் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். இதனால் எலுமிச்சையால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

முக்கியமாக இந்த முறையை அக்குளில் மட்டுமின்றி, கை, கால்களில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம்...

ஞாயிறு, 9 ஜூலை, 2017

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்.....!! ஆபத்தாம்...!!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கு எடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழக வேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.

கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.
கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது.இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ?


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம்.

பலன்கள்:

ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்றங்களை காணலாம்.

* கண்களின் கருவளயம் மறைந்து போகும்

* தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்

* முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலாற்றுவீர்கள்

* ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்

சனி, 8 ஜூலை, 2017

ஆஸ்துமாவின் அறிகுறிகளும் அதனை தீர்க்கும் எளிய இயற்கை மருத்துவம்

ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது. ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது


தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

அறிகுறிகள்:

சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.

இயற்கை மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.

உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.

நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

வியாழன், 15 ஜூன், 2017

இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா இஞ்சியில...

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

இ‌ஞ்‌சியை, த‌ட்டி தே‌னீ‌ர் கொ‌தி‌க்க வ‌ை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து தே‌‌னீ‌ர் பருகலா‌ம். சுவையு‌ம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

‌சில சமைய‌ல் வகைக‌ளி‌ல் இ‌ஞ்‌சியை ம‌சி‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்வா‌ர்க‌ள். அதுபோ‌ன்ற உணவு வகைக‌ள் வ‌யி‌ற்றை‌க் கெடு‌ப்ப‌‌தி‌ல்லை.

இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்திற்கு தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
 

வியாழன், 1 ஜூன், 2017

சூடான மைதா பக்கோடா !!!

தேவையான பொருட்கள் :

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - அரை கட்டு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

*
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

*
இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

*
அடுத்து மைதா மாவுடன் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

*
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

*
இப்போது மொறுமொறுவென சூடான மைதா பக்கோடா ரெடி!!!

*
இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

புதன், 31 மே, 2017

இரத்த அழுத்தத்தை சீராக்க சீரகமே சிறந்த மருந்து

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். சிறிது சீரகம், மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடலில் ஏற்படும் கோளாறுகள் குணமாகும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்