நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 25 ஜூன், 2014

நாள்பட்ட தசைவலி, மூட்டு வலிகளைக் குறைக்கும் விட்டமின் டி! ! !

நாள்பட்ட தசைவலி மற்றும் மூட்டு வலியை, விட்டமின் டி குறைக்கும், என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர், வியன்னாவில் உள்ள, எலும்பு முறிவு மருத்துவமனையின் தலைவர், ப்ளோரியான் வெப்னர் கூறியதாவது:
விட்டமின் டி குறைவால், "பைப்ரோமாயல்ஜியா’ என்னும் நோய் தாக்குகிறது.
இந்த நோய் பாதித்தவர்களின் உடல் தசைகள் மற்றும் மூட்டுகளில், ஏற்படும் வலி குறைவதில்லை.
இந்த வலியால் பாதிக்கப்பட்டோர், தூக்கமின்மை, களைப்பு, மன அழுத்தம் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய நோயாளிகளுக்கு, விட்டமின் டி யை போதிய அளவில் அளித்தால், குணமடைய வாய்ப்பு உண்டு.
நோய் முற்றிலும் குணமாகாவிட்டாலும், தசை வலி மற்றும் மூட்டு வலி பெருமளவு குறையும்.
இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட, 30 பேருக்கு, விட்டமின் டி மருந்துகள் அளிக்கப்பட்டன.
இருபது வாரங்கள், விட்டமின் டி மருந்துகளை உட்கொண்டவர்களின், நீண்டநாள் வலிகள் பெருமளவு குறைந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் மன அழுத்தம் சிறிதும் காணப்படவில்லை. இவ்வாறு, வெப்னர் கூறியுள்ளார்.

திங்கள், 16 ஜூன், 2014

உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதா மருந்துகள் !!!


குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம்.

குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும்.

பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால் 6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

இப்போது குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத 8 வகையான மருந்துகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

ஆஸ்பிரின் (Aspirin)

மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.

இருமல் மற்றும் சளி மருந்துகள்

குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

குமட்டலை தடுக்கும் மருந்துகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.

பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்

பெரியவர்கள் சாப்பிடும் மருந்துகளை சிறிதளவு கூட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளை விட, கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் சற்று அடர்ந்த நிலையில் இருப்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வேறொரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

மற்ற குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, உங்கள் குழந்தைக்கு கொடுத்தாலும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

காலாவதியான மருந்துகள்

காலாவதியான மருந்துகளை உடனடியாக மருந்து பெட்டியில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும் நிறம் மாறிய மருந்துகளையும் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் காலாவதியான மருந்துகளின் திறன் செயலிழந்திருக்கும். மேலும் அது உயிருக்கே பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.

கூடுதலான அசிடமினோஃபென்

காய்ச்சல் மற்றும் உடம்பு வலியை குறைக்கும் மருந்துகள் பலவற்றிலும் அசிடமினோஃபென் (acetaminophen) கலக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதனை பற்றி சரியான அறிவு இல்லையென்றால், உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள்

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள் அல்லது மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுடைய தொண்டை குழியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குழந்தை திடமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க நினைப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் மாத்திரைகளை பொடியாக்கி, அவற்றை குழந்தைகளின் உணவில் கலந்து கொடுக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டு பின்னரே கொடுக்க வேண்டும்

திங்கள், 2 ஜூன், 2014

சில இயற்கை மருத்துவம் !!!

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….
*
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.*
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.*
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.*
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.*
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.*
இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.*
மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.*
வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

திங்கள், 26 மே, 2014

பேரீச்சை !!!


அவசிய‌ உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம்.
அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள்.
பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, மருத்துவ குணம் கொண்ட இப்பழத்தை தினம் உண்டு நோயற்ற வாழ்க்கை வாழ்வோமாக!

இருமலை விரட்ட சில வழிகள்!

இன்றையக் காலக்கட்டத்தில் இருமல் ஒரு பெரும் வியாதியாக உள்ளது. இருமலை விரட்ட ஆடுதொடா இலையின் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும். மேலும், இன்புறா, வல்லாரையைக் கசாயம் செய்து சாப்பிடலாம்.
!
*
இருமலை விரட்ட சில வழிகள்
விஷ்ணு கிரந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
*
வெந்தயக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வரலாம்.*
சிறு குறிஞ்சா வேரைப் பொடி செய்து கசாயம் வைத்துச் சாப்பிடலாம்.*
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.*
சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.*
சிறுதேள் கொடுக்கு இலை, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் சாப்பிட்டு வரலாம்.*
இஞ்சிச் சாறு, மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து அருந்தலாம்.*
மிளகுடன் பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை உண்ணலாம்.*
ஓமவல்லி இலைச்சாற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கான சீதள இருமலுக்குக் கொடுக்கலாம்.*
கண்டங்கத்தரி வேர், ஆடுதொடா வேர், திப்பிலி இம்மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி. வீதம் காலை மாலை குடிக்கலாம்.*
மாதுளம்பூவின் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரலாம்.*
கடுகை மைய இடித்துத் தூள் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.


 
*
கஞ்சாங்கோரை இலைச்சாற்றை 20 துளி அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.*
நஞ்சறுப்பான் இலைச்சூரணம் ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் காணாமல் போகும்.*
கொன்றைவேர்ப்பட்டை, தூதுவளைப்பொடி கலந்து சாப்பிட்டால் இரைப்பிருமலை விரட்டலாம்.*
சோடா உப்பைத் தண்ணீரில் கலந்து குடித்தால் கக்குவான் இருமலின் வேகத்தைக் குறைக்கலாம்.*
செந்நாயுறுவி வேர்ப்பட்டைப் பொடியுடன் தேனில் மிளகுப் பொடியும் சிறிது கலந்து குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.*
பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் துணியால் கட்டிக் கொண்டு வந்தால் சளி மிகுதியால் வரும் இருமலை விரட்டலாம்.*
முசுமுசுக்கை இலைப்பொடி, தூதுவளைப் பொடியுடன் கருவேலம் பிசின் கலந்து வெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். நாள்பட்ட இளைப்பிருமல் தீரும்.

வியாழன், 24 ஏப்ரல், 2014

பொடுகு தொல்லையா ?

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு.குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும்.

எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம். சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்….

1. வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். வால் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், “பொடுகு தொல்லை நீங்கும்”. தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

2. பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும

3. பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

4. வசம்பை நன்கு தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

5. வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

உலர் பாதாமி பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் !!!

ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம்.

இப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை. இயற்கையின் அருங்கொடையான இந்த பழத்தைப் பற்றிய 12 சிறந்த நற்பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.

உலர் ஆப்ரிகாட் பழங்களில் பெக்டின் உள்ளது. மேலும் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவல்லதாகும். மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் பெக்டின் பொருட்கள், உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.

செரிமான சக்தியை அதிகமாக்கும் பொருட்டு உலர் ஆப்ரிகாட்கள் உணவுக்கு முன்னதாக உட்கொள்ளப்படுகின்றன. அமிலங்களை மட்டுப்படுத்தக்கூடிய காரமானி இதில் இருப்பதே இதற்கு காரணமாகும்.

உலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும். ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயரித்துக் கொள்ளுங்கள். இத்திரவம் உங்களுக்கு தாக சக்தியையும் கொடுக்கும்.

உலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள் மிதமான மலமிளக்கியாக செயல்பட்டு, தேவையற்ற கழிவுகளை அகற்றி செரிமானக் குழாயை சீராக்க உதவுகின்றன. இது உடலின் ஜீரணத் திரவங்களுடன் எதிர்வினையாக செயலாற்றி, ஆல்கலைன் சூழலை உருவாக்கி, அதன் மூலம் செரிமானக்குழாயை சுத்திகரிக்க உதவுகிறது.



உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தையின்மை, இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. இந்த உலர் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை போக்கவல்லது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவு உட்கொள்வது நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தின் போது, இனிப்புகள் மற்றும் இதர நொறுக்குத்தீனிகளை உண்பதைக் காட்டிலும், உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.


apricot and dry fruits

உலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது

உலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்

உலர் ஆப்ரிகாட்கள் இரத்தசோகையை குணப்படுத்தக்கூடிய இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகின்றன. ஏனெனில், உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய தாதுப்பொருட்களான இரும்பு மற்றும் செம்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதனால் தான்.

காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.

உலர் ஆப்ரிகாட் சாறு, வேனிற்கட்டி, சருமப்படை மற்றும் சொறி, சிரங்கு ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய அரிப்பை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. ஆப்ரிகாட் ஸ்கரப், பெரும்பாலும் சருமத்தின் இறந்த செதில்களை அகற்றுவதற்கு உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

ஞாயிறு, 16 மார்ச், 2014

மாம்பழம் { தோல்நோய், அரிப்பு போன்றவை தீர }

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

மாம்பழம்
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உமாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.


மாம்பழம்
  
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்லர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் பொருள் மாம்பழத்தில் உள்ளது. எனவே, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினை நீக்கி உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

mango
 மாம்பழத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் அளவுடன் சாப்பிட்டுப் பயன் பெறலாம்.
அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்த்துப் போராடுவதிலும் உடலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதிலும் செயல்படுகிறது. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6, மக்னீசியத்துடன் இரும்புச் சத்தையும் அதிகம் கொண்டுள்ளது. இரும்புச்சத்து ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது

புதன், 19 பிப்ரவரி, 2014

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத வழிகள்

ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதனையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.
இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.
ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எனவே, குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்ப்பதே சிறந்ததாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் புகை பிடிக்கும் பழக்கமும் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிடும் மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடுவதே நல்லது என்றும் கருதுகின்றனர்.
ஒருவர் சாப்பிடும் உணவில் உப்பின் உபயோகமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் சுவையை அதிகரிக்க உப்பு உதவக்கூடும். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது கொழுப்புப் படிவங்களை தமனிகளில் ஏற்படுத்தி ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், உடலில் உள்ள நீர் இருப்பை சமன்படுத்தவும்,
அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தவும் உதவும் பொட்டாசியம் சத்து தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவுகின்றது. வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெள்ளரி, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், தக்காளி, காலிபிளவர், கீரை மற்றும் பிரக்கோலி போன்ற உணவுகள் உடலில் பொட்டாசியம் சத்தை அதிகரிக்கக் உதவும். இதுதவிர ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களும், காய்கறிகளும் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.