நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 29 ஜூலை, 2010

இடியின் வேகம் கொட்டாவி விடுவது ஏன்? ஓசி

இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர்


இடி மின்னலை வைத்து நீங்கள் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று உடனடியாகக் கணக்கிட முடியும். இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர். அதாவது வினாடிக்கு 1 கிலோ மீட்டர். மின்னல் தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் இடியின் சப்தம் கேட்கும். இந்த இடைப்பட்ட நேரத்தைக் கண்டுபிடித்து மூன்றால் வகுத்தால் இடி எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்பது தெரியும். உதாரணமாக மின்னலுக்கும் இடிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 27 வினாடிகள் என்று வைத்துக் கொண்டால் அதை மூன்றால் வகுத்தால் வரும் விடை 9. அப்படியானால் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இடி விழுந்தது என்று அறியலாம்.

கொட்டாவி விடுவது ஏன்?

நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
ஓசி
இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் பொகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

வியாழன், 22 ஜூலை, 2010

பாசமுள்ள நண்பரே நட்பு செய்வோம்

பாசமுள்ள நண்பரே






நண்பர்கள் இல்லாதவர்கள் நரம்பற்ற வீணைக்கு ஒப்பானவர்கள். நண்பர்கள் பலவிதம். கருணை பொழியும் அன்னையாய் ஒருவர்; அடிமை போல் சேவகம் செய்யும் ஒருவர்.

ராகங்கள் வெவ்வேறு என்றாலும், பாடல் என்னவோ அன்பென்ற ஒன்றுதான்!



நண்பர்கள் இல்லாத வாழ்க்கை, சாட்சி இல்லாத மரணம் மாதிரி. நம்மிடம் பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லை. நட்புக்கு நல்லடையாளம் வெறும் அறிமுகம் அன்று; எதையும் இழக்க சம்மதிக்கும் ஆழமான அன்பு!



ஒன்றாகச் சேர்ந்து சினிமா பார்ப்பதும், தேநீர் அருந்துவதும், கடற்கரை மணலில் கனவுகளைப் பகிர்ந்து கொள்வதும் பழக்கத்தை வளர்க்கலாம். இவற்றால் மட்டும் ஆழமான நட்பு அரங்கேறுவது இல்லை. உடன் வந்து பொழுதுபோக்குபவரிடம் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமேயன்றி, இதயத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது.



சுயநலமற்ற அன்பில்தான் நட்பு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். நண்பர்கள் வேறு; கூட்டாளிகள் வேறு; தோழர்கள் வேறு. ஒரே மாதிரியான ரசனை போதும், ஒருவரிடம் தோழமை கொள்வதற்கு! ஒரு பொதுவான நோக்கம் போதும், கூட்டாளியாய் இருப்பதற்கு! ஆனால், அழிவற்ற நட்புக்கு இன்னும் நுணுக்கமான ஆழ்ந்த அன்பு அவசியமாகிறது.



கணவனும் மனைவியும்கூட நண்பர்களாக இருக்க முடியும். அதற்கு இருவரும் திறந்த புத்தகங்களாக இருக்க வேண்டும்.





`மனைவிஅமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றார் கண்ணதாசன். மனைவி மட்டும்தானா? நண்பர்கள் அமைவதும் அவன் கொடுத்தவ ரமே!



வாய்த்த நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை வளம்பெறுகிறது. அவர்களே தீயவர்க ளாக அமைந்துவிட்டால், மொத்த வாழ்க்கையும் இருண்டு விடுகிறது. வாழ்க்கை நதியின் போக் கையே நட்பு மாற்றிவிடுவதால், வள்ளுவர் அதை நான்கு அதிகாரங்களில் ஆய்ந்திருக்கிறார். வார்த்தைச் சிக்கனம் மிக்க வள்ளுவர், நாற்பது குறளை நட்புக்குச் செலவழித்திருப்பதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுகிறார்.



கையில் ஒருமுறை பச்சை குத்தினால், காலனின் கடிதம்வந்து, கனலில் வெந்து நீராகும் வரை அது மறைவதில்லை. நட்பும் பச்சை குத்துவது போன்றதே. மோசமான நண்பர்களை உதறிவிட்டாலும், அந்த நட்பின் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் நம்மோடு நடைபோடும்.



ஆயிரம் பேரிடம் நமக்கு அறிமுகம் நேர்ந்தாலும், ஆழமான நட்புக்குரியவர்கள் ஆறு பேர் தேறமாட்டார்கள். சோதனை நம்மைச் சந்திக்கும் சூழலில் சுயநல நட்பு சொல்லிக்கொள்ளாமலே கழன்று போகும். வாழ்க்கையை வியாபாரமாகக் கருதி சூதாட்ட வெறியோடு விளையாடுபவர்களிடம் உண்மையான நட்பு ஒரு பாதும் உருவாகாது. அன்பின் ஆதிக்கத்தில் தன்னலம் தகர்ந்து போகும். தன்னலத்தின் ஆளுகையில் அன்பு அழிந்து போகும்.



அன்புதான் இன்பம். அன்புதான் சிவம். அன்பில் கனிவதுதான் நல்ல நட்பு. அந்த நட்புக்கு நாளும் நேரமும் ஒதுக்குங்கள். வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க அதுதான் வழி!

புதன், 14 ஜூலை, 2010

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.

தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

வாழைத் தண்டு

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.




வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைப் பூ



வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.



அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘



வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?



ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.



நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது மூதுரையார் வாக்கு.



உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.

   
இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
வரலாறு: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது.
கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள் மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.
அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். .
  வாழையில் அதிகமாக இருக்கும் வகைகள்: 1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை. இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. காய்வகை பழுக்காது. பழுத்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது

மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. அதேபோல் சிறியது, தட்டை, வழவழப்பு, சொரசொரப்பா, விரல் நீளம் என்று பல வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டது.

வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.

குணங்கள்: வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ கிளைகளோ கிடையாது. உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும் குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.

சத்துக்கள்: பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி 10 மில்லி கிராம்> விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.

மருத்துவக் குணங்கள்

1.நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

2.கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

3. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

4. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

5.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

6.குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

7. மிக ஆரோக்கியமான ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.

ஞாயிறு, 20 ஜூன், 2010

படித்ததில் பிடித்தது !!

வயல்வெளி பார்த்து

வறட்டி தட்டி

ஓணாண் பிடித்து

ஓடையில் குளித்து

எதிர்வீட்டில் விளையாடி

எப்படியோ படித்த நான்

ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து

சில மாதம் போர்தொடுத்து

வாங்கிவிட்ட வேலையோடு

வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி

கனவு தொலைத்து

காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

மனசு தொட்டு

வாழும் வாழ்க்கை

மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு

வாழும் வாழ்க்கை

பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே

வாழ்க்கை

தொலைந்து போகுமோ ?


சொந்த பந்த

உறவுகளெல்லாம்

ஷிப் பைலாய்

சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை

தொலைந்து போகுமோ

மொத்தமும்!

புரியாது

புலம்புகிறேன்

நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து

நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி

கவலைகள் மறந்த காலம்

இனிதான் வருமா ?

இதயம் நனைத்த

இந்த வாழ்வு

இளைய தலைமுறைக்காவது

இனி கிடைக்குமா ?


சொந்த மண்ணில்
சொந்தங்களோடு

சோறு திண்பவன்
யாரடா ?

இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

:::::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: :

எழுதியவர் பெயர் தெரியாது

:::::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: :

புதன், 16 ஜூன், 2010

மசாஜ் சிகிச்சையின் நன்மைகள்

1. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.


2. மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.

3. கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

4.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.

5. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

6. மசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

மசாஜ் செய்யும் முறை :

கை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.

எப்போது மசாஜை தவிர்க்க வேண்டும்?

காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.

அரசு மருத்துவமனையில் மசாஜ்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடைபயிற்சி எந்திரம், நீராவி குளியல் எந்திரம், சைக்கிளிங் எந்திரம், ஆகியவையும் உடல் மசாஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் Dr. அருணாசலம் கூறியிருப்பது : மனித உடலிலுள்ள நாடி நரம்புகள் தூண்டப்பட்டு புத்துயிர் ஊட்டுவதற்காக நவீன முறையில் தற்போது மசாஜ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மசாஜ் செய்வதின் மூலம் உடம்பிலுள்ள கழிவுகள் வெளியேறும்.

வெளிநோயாளிகளுக்கு நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் பயிற்சியும் உள்நோயாளிகளுக்கு நீராவி குளியல் சிகிச்சையும் அளிக்கப்படும்.

நடை மற்றும் சைக்கிளிங் பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும். மேலும் கால், கை, மூட்டு தலை போன்ற வலிகளுக்கும் நவீனமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென்இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். இன்றும் கப்ஸôவோடு வெங்காயம் இருக்கத் தவறுவதில்லை. நேபாளத்தில் வெங்காயம் கடவுளுக்கு நிவேதனம் செய்வதாகச் சொல்கிறார்கள். யூதர்கள் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசி வர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17. பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம் அவரை இலை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31. ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும் பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறைவும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு...

இன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.

புகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல! இரண்டல்ல! புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.

புகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
புகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.

புகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்

கறிவேப்பிலை

 நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை ... மென்று சாப்பிட... ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.


வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.

இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப் பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல - நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு