நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 30 மார்ச், 2022

பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்

 இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.


மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

சோப்புத் தண்ணீர்

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரின்

கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். 

இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்


திங்கள், 28 பிப்ரவரி, 2022

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு வரக்கூடிய பைல்ஸ் பிரச்னை... தீர்வுகளும் தடுக்கும் வழிகளும்...

 மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக


சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன. 1. மூலம் (Piles) 2.ஆசனவாய் வெடிப்பு(Fissure) 3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula) உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம். ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

அறிகுறிகள்…

மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

மலம் இறுகி எளிதில் வெளியேறாது

அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

மூல சதை வெளித்தள்ளுதல்

செரிமான பிரச்னை

புளித்த ஏப்பம்

மூல நோய் உள்ளவர்கள் !!!

 ஹெமராய்ட்ஸ்ட் ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்றுதமிழிலும் நாம் சொல்லக்கூடிய வார்த்ர் த்தை யானது ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல என்பதேஅதிகம் பேருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும்மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்கர் ளின் மென்மையான தசை களுக்குள் பதிந்துள்ள ரத்தநாளங்களே மூலம் என்றும் ஆங்கிலத்தில் பைல்ஸ் என்றும் மனித உடற்கூறியியலில்அழைக்கப்படுகிறது. இந்த மூலங்களில், நாட்பட் ட்டட் உராய்வு, சீராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால்,

அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரியதாகும்போதுதான் மென்மையான தசை போன்றஒன்று மலத்துத் வாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்னைச் யை ஏற்படுத்துத் கின்றது.


பெருங்குடலின் கடைசி பாகத்தில் (Rectum) இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக் கசிவுடன்அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் (மூலத்தில் ஏற்பட்டட் நோய்)என்று நாம் கூறுகிறோம்.

மூலநோய் வருவதற்கான காரணங்கள்

மூலநோய் ஏற்படக் காரணமாக இருக்கும் பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியானஅழுத்தத்திற்கும், அழற்சிக்கும், நாட்பட் ட்டட் மலச்சிச் க்கல், நாட்பட் ட்டட் வயிற்றுப்போக்கு, அதிக எடை

தூக்கும் வேலை செய்தல், கர்ப்ர் ப் காலம், மிகுந்த சிரமத்துத் டனும், அழுத்தத்துத் டனும் மலத்தைவெளியேற்றும் பழக்கம் போன்றவை காரணங்களாகின்றன. எந்த வயதிலும் வரக்கூடியமூலநோய், வயதானவர்கர் ளைத்தான் அதிகம் பாதிக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர்கர் ளின்

ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கா ட் ர்ந்ர் ந்தே இருப்பது, மலம் கழிப்பதை த்தள்ளிப் போடுவது, உடல் பருமன், கல்லீரல் அழற்சி, நார்ச்ர் சச் த்துத் குறைவான உணவு, அதிககொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்டட் உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமானபிற நோய்கள், அதிக மன அழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்ர் ப்புச் சக்தியுடன் உடல்மெலிந்து இருத்தல் போன்றவை மூலத்தை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கை யையும் சிக்கலாக்கிவிடுகின்றது.

மூலநோயின் அறிகுறிகள்

மலப்புழையைச் சுற்றிலும் சிவந்திருத்தல், மலப்புழையில் லேசான மற்றும் அதிகமான வலி,மலம் வெளியேறும்போது வலி மற்றும் ரத்தக்கசிவு, குதத்தை ச் சுற்றி வீக்கம், எரிச்சச் ல், அரிப்பு,தொட்டுட் உணரக்கூடிய அளவில் வலியுடன்கூடிய சதை போன்ற சிறிய கட்டிட் கள் (அவை

உறைந்துபோன ரத்தக் கட்டிட் களாகும்), மலம் வெளியேறியபின் சளிபோன்ற திரவம் வடிதல்மூலநோயையும் அதற்குக் காரணமான மலச்சிச் க்கலையும் தடுக்கும் நார்ச்சச் த்தின் அவசியம


ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதனுக்கு பரிந்துரைக்கப் பட்டட் நார்ச்ர் சச் த்தின்அளவு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்லது அவரது 1000 கிலோ கலோரிக்கு 12 கிராம் என்பதாகும்.

இந்தியாவின் சை வ உணவுகள் ஒரு நாளைக்கு 225 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும்,அயல் நாட்டுட் உணவுகள் 80 முதல் 170 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும்

பெற்றிருக்கின்றன. மலத்தின் அளவு 100 கிராமுக்குக் கீழே குறையும்போது, குடலில் கழிவுகள்தேங்கி, மலத்தின் அளவு, வெளியேறும் இடைவெளி மற்றும் நேரம்; குறைந்து, இறுக்கமடைந்து,மிகுந்த சிரமத்துத் டன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், போதுமான அளவு நார்ச்ர் சச் த்துத்உணவுகளை உண்ணும்போது, கழிவுப்பொருட்கட் ள் குடலின் வழியாக நகரும் நேரம்

குறைக்கப்படுவதுடன், மலத்தின் அளவு அதிகரித்துத் , உடனுக்குடன் கழிவுகள்வெளியேற்றப்படுகின்றன.

மூலநோயைத் தடுக்கும், குணப்படுத்தும் உணவுகள்

ஓட்ஸ்ட் ஸ் , பார்லிர் , உளுந்து போன்ற பிசின் போன்ற திரவப்பொருள் அதிகமாக இருக்கும்உணவுகளில் ஒன்றையாவது தினமும் உண்ணவேண்டும்.தாவரங்களின் செல்களை இணைக்கும் பசை போன்ற பொருளான பெக்டின் (Pectin) கொய்யா,

ஆரஞ்சு, எலுமிச்சைச் சை, சாத்துத் க்குடி, ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கின்றது. கரையக்கூடியதன்மையுள்ள இந்த நார்ச்ர் சச் த்தானது, மலத்தை குழகுழப்புத் தன்மை யுடன் மென்மையாக்கி,இறுகிய மலத்தை த் தவிர்த்ர் துத் , பெருங்குடலிலும் மலக்குடலிலும் மலமும் நச்சுச் ம் தேங்காமல்

இருப்பதற்கு உதவிபுரிகிறது.கரையாத நார்ச்ர் சச் த்தாகிய செல்லுலோஸ் (Cellulose) என்னும் பொருள் தவிடு நீக்காத கோதுமை,அரிசித் தவிடு, காய்களின் மென்மையான தோல், தோல் நீக்கப்படாத முழு பருப்பு வகை கள்ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன. இவை, குடலில் நீரை உறிஞ்சி, மலத்தின் அளவை

அதிகப்படுத்தி, நச்சுச் ப்பொருட்கட் ளை வடிகட்டிட் எளிதில் வெளியேற்றிவிடுகின்றன. இதனால்,குடலின் சுவர்கர் ள் சீராய்ப்பு இல்லாமல், மலப்புழை நரம்புகளும், ரத்தக்குழாய்களும்பாதுகாக்கப்படுகின்றன.பச்சைச் சையான வெண்டைக்காய், தக்காளி, கேரட், ட் முளைக்கட்டிட் ய வெந்தயம், உளுந்து,கொண்டைக்கடலை போன்றவற்றை தினந்தோறும் உணவில் சேர்க்ர் க் வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் பழங்களைக் கட்டாட் யம் உண்ண வேண்டும்.பழச்சாச் றாக அருந்தாமல், பழமாக அப்படியே சாப்பிடுவதால், போதுமான நார்ச்ர் சச் த்துத் எளிதாகக்கிடைக்கும்.

காலையில் பல் துலக்கியவுடன், கொதிக்க வைத்துத் ஆறவைத்த வெதுவெதுப்பான நீரை ஒன்றுஅல்லது இரண்டு டம்ளர்கர் ள் அளவில் பருக வேண்டும். இதனால் உணவுக்குழாய் முதல் மலக்குடல்வரையுள்ள வாயுக்களும் நச்சுச் க்களும் நீங்கப் பெறும



தயிர் அல்லது மோரை தொடர்ச்ர் சிச் யாக பருகுவதால் எரிச்சச் லும் புண்களும் குறைக்கப்பட்டுட் ,

பெருங்குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்கப்பட்டுட் , நச்சுச் க்கள் நீங்கி குடல்சுத்தமடைவதால், உள் மூலத்தில் உள்ள சீராய்ப்புகள் குணமடையும்.சிறிதளவு தேங்கா யை அப்படியே மென்று சாப்பிடுவதும், தேங்காய்ப்பால் அருந்துவதும்வீக்கத்தை யும் புண்ணையும் குணப்படுத்துத் ம்.

வீட்டிட் ல் சமைக்கப்படும் உணவாக இருந்தாலும் காரம், புளிப்பு, உப்பு அதிகம் சேர்ப்ர் ப் தை யும்சூடான உணவுகளை அவசரமாக சாப்பிடுவதை யும் தவிர்த்ர் த் ல் நலம் பயக்கும்.காயங்களும், சீராய்ப்புகள், வலி அதிகமான இருப்பின், கீரைகளை தவிர்ப்ர் ப் து நல்லது. இவைரத்தப்போக்கை யும், வலியையும் மேலும் அதிகமாக்கக் கூடும். மூலநோ ய் வருவதற்கு முன்னரேசரியான முறையில் கீரை சேர்த்ர் த் உணவுகளை எடுத்துத் க் கொள்வதால், மலச்சிச் க்கலைத் தவிர்த்ர் துத்மூலநோயையும் தடுக்கலாம்.

மலச்சிச் க்கலுடன் சேர்ந்ர் ந்த ஆரம்ப நிலை மூலநோய் இருப்பதை அறிந்தவுடன், பப்பாளிப்பழம்,அத்திப்பழம் போன்றவற்றை தொடர்ச்ர் சிச் யாக உணவில் சேர்க்ர் க் வேண்டும்.

சர்க்ர் க் ரைவள்ளி, சோளக்குருத்துத் , எள், பாதாம், கேழ்வரகு போன்ற உணவுகள் எரிச்சச் லையும்,புண்ணையும் குணப்படுத்தி வேதனையை குறைக்கவல்லவை.

மூலநோய் உள்ளவர்கர் ள் தவிர்க்ர் க் வேண்டிய பொருட்கட் ள்

மூலநோய் உள்ளவர்கர் ள் அதிகமான எளிய சர்க்ர் க் ரையுடன் பளபளப்பூட்டட் ப்பட்டட் மாவுச்சச் த்துத்நிறைந்த பொருட்கட் ளான மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த

உணவுப்பொருட்கட் ளையும் தவிர்க்ர் க் வேண்டும். சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்ர் துத் செய்யப்பட்டட்பேக்கரி பொருட்கட்ளான பிரட்,  பிஸ்கட், கேக் வகை களையும் பிற இனிப்பு வகை களையும்தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும். அதிகஉப்பு சேர்தல் ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சிச் உணவுகளை உண்ணக்கூடாது.

வினிகர், சோடியம் பென்சோயே  அஜினோ மோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்றவேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாச்றுகள், பாக்கெக்ட்டில் அடைக்கப்பட்டவற்றல் வகை கள், சாஸ் மற்றும் ஊறுகாய்களை அறவே தவிர்க்ர் க் வேண்டும். இந்த பொருட்கள்

அனைத்தும், மூலநோய் அறுவை சிகிச்சைச் மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்கர்ளுக்கு,

மீண்டும் சீராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிச் க்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடும


செவ்வாய், 18 ஜனவரி, 2022

பழங்காலத்து மறந்து போன ஆச்சரியமூட்டும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

 என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதைவிட வேகமாக நம்முடைய ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி வருவதை நம்மால் மறுத்து விடவும் முடியாது. ஓடியாடி உழைத்த பணமெல்லாம் கடைசியில் மருத்துவத்திற்கு தான் நாம் செலவு செய்கிறோம். இதை உணர்ந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்போமோ? என்னவோ? தெரியவில்லை. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் கூட ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்ததை நினைத்தால் இப்பொழுதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.


அவர்கள் விட்டு சென்ற ஆச்சரியமூட்டும் சில வீட்டு வைத்தியங்களை, இன்றும் நாம் பயன்படுத்தினால் நீண்ட ஆயுளைப் பெற முடியும். நம் வீட்டு சமையல் அறையில் இல்லாத மருந்துகளை விடவா? மருந்தகத்தில் கொடுக்கும் மருந்துகள் வேலை செய்து விடும்? இரண்டு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் செய்து வந்த இந்த வீட்டுக் மருத்துவ குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

 நம் உடலானது அதிகம் தண்ணீரால் நிரம்பியது. நாம் தண்ணீரை எப்பொழுது குறைவாக குடிக்கிறோமோ! அப்பொழுது ஆரோக்கிய பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்து விடும். இதற்கு முதல் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணிற்கு கொப்பரையாக இருக்கும் தேங்காயுடன் கசகசாவை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஒரே நாளில் வாய்ப்புண் காணாமல் போய்விடும். சிறு துண்டு கடுக்காயை எடுத்து வாயின் ஓரத்தில் வைத்துக் கொண்டு இருந்தால் வாய்ப்புண் விரைவாக ஆறும்.

அடுத்தும் இதே பிரச்சனை தான். தண்ணீர் குடிக்காதவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. நீர்க்கடுப்பு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். நீர்க்கடுப்பு இருப்பவர்களுக்கு புழுங்கல் அரிசியை வடித்த தண்ணீருடன், சிறிதளவு உப்பும், ஒரு டீஸ்பூன் வெண்ணெயையும் கலந்து குடித்து வர கொஞ்ச நேரத்திலேயே நல்ல நிவாரணம் கிடைத்துவிடும்.


கடினமான உணவுப் பொருட்களையும், குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இளமையிலேயே பற்கூச்சம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பற் கூச்சத்தை விரைவாக சரி செய்வதற்கு, புதினா இலைகளை காய வைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். புதினாவின் விதைகளை அடிக்கடி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால் பற் கூச்சம் ஏற்படுவது படிப்படியாக குறைந்து விடும்.


வயது முதிர்வு காரணமாக வரும் இடுப்பு வலி, மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனடியாக நீங்குவதற்கு சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யும் கலந்து ஆற வைத்து குடித்து வந்தால் விரைவாக நிவாரணம் கிடைக்கும்.


முடி வளர இயற்கை மருத்துவ குறிப்புகள் !!!

 வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை  மறையும்.

இளநரை கருப்பாக: நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக: ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர்,  செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர முடி கருப்பாகும்.


காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை பெற: அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

நரை போக்க: தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

வெள்ளி, 31 டிசம்பர், 2021

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றும் ஆரஞ்சு பழம் !!

 பழங்களில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு ஒரு பெயரும் உண்டு.



ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

ஆரஞ்சு பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

தொப்பையை குறைத்திடும் வழி....!

 தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.  உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.



வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது  வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

எலுமிச்சையில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

 மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

ஆய்வு ஒன்றில் இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை  உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.



புதன், 29 டிசம்பர், 2021

பித்தப்பை கற்கள் நீங்க செய்யப்படும் இயற்கை மருத்துவ முறைகள்....!


 கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு  மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். 

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம்  குடிக்கவும். 


கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரணக் கோளாறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது


இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஒன்று. இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ்  அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.


இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்


புதன், 15 டிசம்பர், 2021

30 நிமிடத்தில் செய்யலாம் சூப்பரான ஸ்நாக்ஸ்

 ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

தேவையான பொருட்கள் :


எள் - 1 கப்,

பொடித்த வெல்லம் - ¾ கப்,

நீர் - ¼ கப்,

ஏலப்பொடி- 1 டீஸ்பூன்.



செய்முறை:


வெள்ளை அல்லது கருப்பு எள்ளை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி களைந்து வடிகட்டி ஈரம் காய்ந்ததும் வெறும் வாணலியில் போட்டு படபடவென வெடிக்கும் வரை காத்திருந்து (கருகிவிடாமல்) எடுத்து தட்டில் கொட்டவும்.


ஒரு பாத்திரத்தில் வெல்லம் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும்.


ஏலப்பொடி சேர்த்து பாகில் 1 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.


பாகு நன்கு காய்ந்ததும், எள்ளில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டி காம்பால் கிளறி கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.


இப்போது சூப்பரான எள்ளுருண்டை தயார்.

மாதுளை இலைகளும் மருந்தாகும்..

 இருமல், சளி:


மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் தணியும். தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவும். மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.


வயிற்று வலி:


மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும். இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாதுளை இலைகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.


தூக்கமின்மை:



மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை. ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.


தோல் அழற்சி:


நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த நோயை குணப்படுத்த மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்