நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு வரக்கூடிய பைல்ஸ் பிரச்னை... தீர்வுகளும் தடுக்கும் வழிகளும்...

 மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக


சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன. 1. மூலம் (Piles) 2.ஆசனவாய் வெடிப்பு(Fissure) 3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula) உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம். ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

அறிகுறிகள்…

மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

மலம் இறுகி எளிதில் வெளியேறாது

அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

மூல சதை வெளித்தள்ளுதல்

செரிமான பிரச்னை

புளித்த ஏப்பம்

கருத்துகள் இல்லை: