நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 13 ஜூலை, 2015

அழகுக் குறிப்புகள்


தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும்மிருதுவாகவுமஇருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிட
ம்கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தாலமுகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றதடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகமஅழகு பெறும்.
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளரவெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்த

அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்த

நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம

சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்

வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாற்றைப்

பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகள

காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில

குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம

வேர்க்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு,
கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்த

அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்

வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும்,
சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து,
சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூட
எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில

தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருக்களினால் ஏற்பட்ட தழும்பும் மறையும

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும
.முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை,
சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.
காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட
சருமம் புதுப் பொலிவடையும்.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம
கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
,

பல் சொத்தைப் பற்றி தெரியுமா?

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?
ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.
சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.
மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.
பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.
ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.
ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.
அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.
சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.
அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.
தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது.
அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.
ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.
த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது.
அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.
ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.
ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்...
ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

திங்கள், 22 ஜூன், 2015

குண்டுக்கு மருந்து பூண்டு !!!

பூண்டு
பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.பூண்டில் வைட்டமின்கள் 'ஏ', பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

*
புற்றுநோய் வராமல் தடுக்கும்.

*
ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இத னால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.

*
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்!

*
கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.

*
எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

*
கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை களின் எடை அதிகரிக்கும்.

*
சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.

*
வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.

*
ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.

*
கண்ணில் புரைவளர் வது தவிர்க்கப்படும்.

*
சளியை போக்கும்.

*
உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.

*
முதுகுவலி குறையும்.

*
காசநோய் வராமல் தடுக்கும்.

*
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*
உடலை இளமையாக வைத்துக்கொள்ளும்.பூண்டின் மருத்துவ பலன்கள்,............இத்தகையை மகத்துவம் கொண்ட பூண்டுவை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லது. தினமும் காலை ஒரு மடக்கு தண்ணீர் அருந்திவிட்டு பூண்டு பல் 2-ஐ எடுத்து அரை குறையாக மென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சற்று வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை பூண்டு கஞ்சி வைத்து சாப்பிடலாம். பசும்பாலில் பூண்டு போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பசும்பாலில் பூண்டு காய்ச்சும்போது ஒரு தம்ளர் பாலுக்கு குறைந்தபட்சம் ஒரு பூண்டு போடப்பட வேண்டும்.பச்சையாக தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது, அவித்து 2 பூண்டு சாப்பிடுவதற்கு சமம். ஆனால் குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக பூண்டுவை சாப்பிடக்கூடாது.

செவ்வாய், 12 மே, 2015

பல் சம்பந்தமான நோய்களை நீக்கும் பல்பொடி.

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 -
சுக்கு
2 -
காசுக்கட்டி
3 -
கடுக்காய்
4 -
இந்துப்பு
இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும். இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-
ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-
ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80
ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.

தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது ?

பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும்.
இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் நீண்ட நாட்கள் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருந்தால், உதட்டில் வெடிப்பு, அதனால் இரத்தம் வடிதல், மயக்கம் போன்றவை சில அறிகுறிகளாகும். இந்த சோடியத்தின் அளவு உடலில் நீடித்தால், சில சமயம் மரணத்தில் கூட முடிந்துவிடும். எனவே, உணவு முறையில் உப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்போது எப்படி உப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது என்று பார்ப்போமா!!!
1.
சமைத்த உணவின் இயற்கையான சுவையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். கரண்டியை எடுக்கும் முன்பே உப்புப் பெட்டியை எடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால், உப்பில்லாமல் ஒரு உணவின் இயற்கையான ருசியை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உப்பில்லாத உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும். சுவையில்லை, சப்பென்றிருக்கிறது என்னும் அலுப்பு மனதில் தோன்றினாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உணவில் இயற்கையான சுவையை தெரிந்து கொள்ளலாம். இதனால் உப்பு வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிட முடியும்.2.
கடைகளில் விற்கும் விருப்பமான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் போது, அதன் விபரப்பட்டியலில் உள்ள சோடியத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். மேலும் இதனால் இனிமேல் இந்த உணவுப் பொருட்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.3.
உப்பின் அளவைக் குறைக்க நினைக்கும் போது சமையலில் உப்பின் அளவானது அதிகரிக்காமல் இருக்க, சமைக்கும் போதே உப்பை அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால், பாதி உப்பு போடுவது நல்லது. மிகவும் குறைவாக இருந்தால், சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் சமைக்கும் போது போட்ட உப்பின் அளவே சரியானதாக இருக்கும். 4.
உப்புக்கு பதிலாக இதர சீசனிங் முறைகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது ஒரு மிகச்சிறந்தது. ஏனெனில் தற்போது பலவிதமான சுவையூட்டும் உணவுப் பொருட்கள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே உப்பை தவிர்க்கலாம். அவை: மூலிகை வகைகள், மசாலா வகைகள், எலுமிச்சை, பூண்டு, வெஜிடேபிள் உப்பு, சாஸ் போன்றவை.
5.
பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். புதிதான இறைச்சி, புதிதான நன்னீர் மீன்வகைகள் ஆகியவற்றில் உப்புக் குறைவான அளவில் உள்ளன. ஆனால் ரெஸ்டாரெண்ட் உணவுகளான சூப் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுப்பண்டங்கள் எல்லாவற்றிலும் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. மேலும் எப்போது எந்த பொருளை வாங்கினாலும், அதில் உள்ள லேபிளில் குறிப்பிட்டிருக்கும் சோடியத்தின் அளவைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.6.
உப்பு தூவிய தின்பண்டங்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பை துடைத்து விட்டு சாப்பிட வேண்டும். அதிலும் பிஸ்கட்டுகளில் அன்சால்ட்டட் டாப் வகைகளை விட சால்ட்டட் டாப் வகைகளே மேல். ஏனெனில் அன்சால்ட்டட் டாப் வகைகளில், அதன் உள்ளேயே உப்பின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சால்ட்டட் டாப் வகைகளின் மேல் மட்டும் தான் உப்பு தடவப்பட்டிருக்கும். ஆகவே அவற்றை துடைத்துவிட்டு சாப்பிடலாம். அதனுள்ளே சுவையைத் தரும் உப்பு இல்லையென்றாலும், மேலே கொஞ்சம் ஒட்டியிருக்கும் உப்பே போதுமானது. 7.
ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கவே முடியாது. எனவே வெளி சாப்பாட்டை விட, வீட்டு சாப்பாட்டினால், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கலாம

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க ?

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.


ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது.

கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்: கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்: கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை: எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு: சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி: எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு: பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.