நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது ?

பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும்.
இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் நீண்ட நாட்கள் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருந்தால், உதட்டில் வெடிப்பு, அதனால் இரத்தம் வடிதல், மயக்கம் போன்றவை சில அறிகுறிகளாகும். இந்த சோடியத்தின் அளவு உடலில் நீடித்தால், சில சமயம் மரணத்தில் கூட முடிந்துவிடும். எனவே, உணவு முறையில் உப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்போது எப்படி உப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது என்று பார்ப்போமா!!!
1.
சமைத்த உணவின் இயற்கையான சுவையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். கரண்டியை எடுக்கும் முன்பே உப்புப் பெட்டியை எடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால், உப்பில்லாமல் ஒரு உணவின் இயற்கையான ருசியை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உப்பில்லாத உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும். சுவையில்லை, சப்பென்றிருக்கிறது என்னும் அலுப்பு மனதில் தோன்றினாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உணவில் இயற்கையான சுவையை தெரிந்து கொள்ளலாம். இதனால் உப்பு வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிட முடியும்.2.
கடைகளில் விற்கும் விருப்பமான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் போது, அதன் விபரப்பட்டியலில் உள்ள சோடியத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். மேலும் இதனால் இனிமேல் இந்த உணவுப் பொருட்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.3.
உப்பின் அளவைக் குறைக்க நினைக்கும் போது சமையலில் உப்பின் அளவானது அதிகரிக்காமல் இருக்க, சமைக்கும் போதே உப்பை அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால், பாதி உப்பு போடுவது நல்லது. மிகவும் குறைவாக இருந்தால், சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் சமைக்கும் போது போட்ட உப்பின் அளவே சரியானதாக இருக்கும். 4.
உப்புக்கு பதிலாக இதர சீசனிங் முறைகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது ஒரு மிகச்சிறந்தது. ஏனெனில் தற்போது பலவிதமான சுவையூட்டும் உணவுப் பொருட்கள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே உப்பை தவிர்க்கலாம். அவை: மூலிகை வகைகள், மசாலா வகைகள், எலுமிச்சை, பூண்டு, வெஜிடேபிள் உப்பு, சாஸ் போன்றவை.
5.
பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். புதிதான இறைச்சி, புதிதான நன்னீர் மீன்வகைகள் ஆகியவற்றில் உப்புக் குறைவான அளவில் உள்ளன. ஆனால் ரெஸ்டாரெண்ட் உணவுகளான சூப் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுப்பண்டங்கள் எல்லாவற்றிலும் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. மேலும் எப்போது எந்த பொருளை வாங்கினாலும், அதில் உள்ள லேபிளில் குறிப்பிட்டிருக்கும் சோடியத்தின் அளவைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.6.
உப்பு தூவிய தின்பண்டங்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பை துடைத்து விட்டு சாப்பிட வேண்டும். அதிலும் பிஸ்கட்டுகளில் அன்சால்ட்டட் டாப் வகைகளை விட சால்ட்டட் டாப் வகைகளே மேல். ஏனெனில் அன்சால்ட்டட் டாப் வகைகளில், அதன் உள்ளேயே உப்பின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சால்ட்டட் டாப் வகைகளின் மேல் மட்டும் தான் உப்பு தடவப்பட்டிருக்கும். ஆகவே அவற்றை துடைத்துவிட்டு சாப்பிடலாம். அதனுள்ளே சுவையைத் தரும் உப்பு இல்லையென்றாலும், மேலே கொஞ்சம் ஒட்டியிருக்கும் உப்பே போதுமானது. 7.
ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கவே முடியாது. எனவே வெளி சாப்பாட்டை விட, வீட்டு சாப்பாட்டினால், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கலாம

கருத்துகள் இல்லை: