நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 4 மார்ச், 2012

கருணைக்கிழங்கு மசியல்

கருணைக்கிழங்கு மருத்து குணம் நிறைந்தது. இது மூலநோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இதனை சமைத்துக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

பிடி கருணைக் கிழங்கு - 4 அல்லது 5
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து தாளிக்க
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

கருணைக் கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிறகு தண்ணீரை விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். குக்கரிலும் வேக வைக்கலாம். கிழங்கின் தோலை உறித்து நன்றாக மசித்து வைக்கவும்.

பின்னர் வானலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெடித்த உடன் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும். அந்த கலவையில் மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்கினை போட்டு நன்றாக பிரட்டவும்.

கிரேவி அதிகமாக வேண்டுமெனில் கால் டம்ளர் தண்ணீர் கூடுதலாக விடலாம். மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறலாம். மசியலானது எண்ணெய் மினுப்போடு சூப்பராக வரும். சூடாக சாதத்தில் போட்டு சாப்பிடலாம். மருத்துவ குணம் நிறைந்தது.

கருணைக் கிழங்கை நீண்டநாட்கள் வைத்திருந்து சமைத்தால்தான் காரல் தன்மை இன்றி இருக்கும். நல்லெண்ணெயில் சமைப்பதால் அரிப்பு இருக்காது. ருசி கூடுதலாகவும் இருக்கும்

சாப்பிடும் போது ரசிச்சு சாப்பிடுங்க ! உடம்புக்கு நல்லது !!

நாம் உண்ணும் உணவை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், அப்பொழுதுதான் அந்த உணவின் பலன் அனைத்தும் உடம்பிற்கு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவை வாய்க்குள் அள்ளி எறிந்துவிட்டு செல்வது ஆபத்தானது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் நின்ற கோலத்தில் உணவை அள்ளி திணித்துவிட்டு ஓடுவர் பலர். காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை இதே நிலைதான். ஒரு சிலர் உண்ணும் உணவு கடமைக்காக மட்டுமேதான் இருக்குமே தவிர உணவின் தன்மை, ருசி பற்றி உணர்வதில்லை. இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உண்ணும் உணவை டென்சன் இல்லாமல் மெதுவாக சாப்பிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு உண்ணும் பழக்கத்திற்கும், உடல் எடைக்கும் உள்ள தொடர்பு குறித்து சமீபத்தில் 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் அமெரிக்கா நிபுணர்கள், ஆய்வு மேற்கொண்டனர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.

நேரம் தவறக்கூடாது

எந்த பணி செய்பவர்களாக இருந்தாலும் உண்பதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. உணவு உண்ணும் போது அதிலும், நம் கோபதாபங்களை எல்லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம்மிடம் எழும் அந்த உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டென்சன் கூடாது

விருந்துகளில் சிலர், வேகமாகவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆன்டி ஆக்ஸிடெண்ட்

உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள்! அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது. அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும் என்றும் ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.

சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்

முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.

இந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.

இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம்.

இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்!

திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள். மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.

சில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலுடன் செயல்படும்

தினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குட்டீஸ் டிவி பாக்கிறாங்களா? மன அழுத்தம் வரும் ஜாக்கிரதை!

தொலைக்காட்சி மற்றும் கம்யூட்டர்களில் அதிக நேரம் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் வெளியிடங்களுக்குச் சென்று விளையாடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 4 முதல் 12 வயதுடைய 1486 குழந்தைகளிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

அவர்களில் ஒரு பிரிவு குழந்தைகள் தொலைக்காட்சி, டிவிடி, வீடியோ கேம், கணினி போன்றவைகளை பார்க்கவைத்து கண்காணிக்கப்பட்டனர். மற்றொரு பிரிவு குழந்தைகளை வெளியிடங்களில் விளையாட வைத்தும், புத்தகம் படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் இந்த குழந்தைகளின் நிலை குறித்து அவர்களின் பெற்றோரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் தொலைக்காட்சி, கம்யூட்டர் முன்பு அமர்ந்திருந்த குழந்தைகளின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன், பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஒரு வித அழுத்தத்துடனே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.

குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியின் முடிவில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவு இங்கிலாந்தில் வெளியாகும் குழந்தைகள் தொடர்பான இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மன அழுத்தம்

தமிழ்நாட்டிலும் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்த நேரம் தவிர அநேக நேரம் அவர்கள் தொலைக்காட்சியிலும், வீடியோ கேம் விளையாடுவதிலுமே பொழுதை கழிக்கின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தமே அவர்களை வன்முறையாளர்களாக மாற்றுவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே குழந்தைகளை அடிக்கடி பூங்காக்கள், விளையாட்டுக்கூடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை விளையாட விடலாம். நல்ல நீதி நெறி புத்தகங்களை படிக்க வலியுறுத்துவதன் மூலம் பெற்றோர்கள் அவர்களை பண்புள்ளவர்களாக்கலாம் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

ஈறு பேன் தொல்லை இல்லா கூந்தல்

கூந்தலின் அழகைக் கெடுப்பதில் பொடுகு மற்றும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. பேன் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் இந்த பேன்கள் மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே முட்டையிடுகின்றன. இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில மருந்துகளை உள்ளன.

வேப்பிலை வைத்தியம்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.

பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்யலாம். தூங்கும் போது தலையனை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகள் பரப்பி அதன் மேல் ஒரு துணி போட்டு தூங்க வைக்கலாம். இதனால் பேன் தொல்லைகள் ஒழியும்.

வெந்தையப் பொடி

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

குப்பைமேனிச் சாறு

சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்கு சூரிய வெப்பத்தில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

குப்பை மேனிக் கீரையானது பேன் தொல்லையை போக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பொன்னாங்கண்ணி

தினமும் உணவில் கீரைகளை  சேர்த்து சாப்பிட்டால்  உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து  மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர்.

*கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம்.

*இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம்.

1.ரத்த சுத்ததிற்கு

ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது  பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.


2.ஞாபக மறதி குணமாக

சிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.

3.கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும் .
இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

4.பித்தத்தைக் குறைக்க

பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

5.பொன்னாங்கண்ணி தைலம்

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.

6.தோல் வியாதிகள் குணமாக

சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.இவ்வளவு பயன்கள் உள்ள இந்தக் கீரையை இனிமேலும் ஒதுக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

புதன், 1 பிப்ரவரி, 2012

த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க ‌நினைவூ‌ட்டு‌ங்க‌ள்

குழ‌ந்தைகளை ஊ‌ட்ட‌ச்ச‌த்தான உணவை உ‌ண்ணுமாறு ‌நீ‌ங்க‌ள் எ‌ந்த அள‌வி‌ற்கு வ‌ற்புறு‌த்து‌கி‌றீ‌ர்களோ, அ‌ந்த அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவதையு‌ம் ஊ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

சு‌த்தமாக, கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்ட‌ப்ப‌ட்ட ‌நீ‌ர் குழ‌ந்தைகளு‌க்கு எ‌ப்போது‌ம் ‌கிடை‌க்க வ‌ழி செ‌ய்யு‌ங்க‌ள்.

சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு முழுதாக ஒரு ட‌ம்ள‌ர் ‌நீராவது அவ‌ர்க‌ள் குடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள்.
‌விளையா‌ட்டி‌ன் போது, படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது இடை இடையே ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌சில நா‌‌ட்களு‌க்கு ‌நினைவு படு‌த்து‌ங்க‌ள்.

‌பிறகு அ‌வ‌ர்களாகவே அதனை கடை‌பிடி‌க்கு‌ம்படி‌ச் செ‌ய்யு‌ங்க‌ள்.

எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு செ‌ல்லு‌‌ம் பழ‌க்க‌த்தையு‌ம் கொ‌ண்டு வாரு‌ங்க‌ள்.

பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.

குழ‌ந்தைக‌ள் சா‌‌ப்‌பிட‌க் கூடாதவை

பொதுவாக குழ‌ந்தைகளு‌க்கு ச‌த்தான உணவை ம‌ட்டுமே பெ‌ற்றோ‌ர் அ‌ளி‌ப்ப‌ர். ஆனா‌ல், அவ‌ர்களை அ‌றியாம‌ல் குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள் எ‌ன்பதா‌ல் ‌சில உணவு‌ப் பொரு‌ட்களையு‌ம் பெ‌ற்றோ‌ர் அ‌ளி‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

இதனா‌ல், குழ‌ந்தை‌‌யி‌ன் உட‌ல் ம‌ட்டும‌ல்‌ல, மூளையு‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

சிக்கன் ப்ரை, ஐ‌ஸ்க்ரீம், சாக்லேட், பாம் ஆயில், பப்‌ஸ், உருளை‌க் ‌கிழ‌ங்கு வறுவல் போன்றவை குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடும்.

குழந்தை‌யி‌ன் செய‌ல்பாடுக‌ள் ம‌ந்தமாக இரு‌ந்தா‌ல் டி‌ஸ்லெக்சியா எ‌ன்ற நோ‌ய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எ‌ப்போது‌ம் ஓடி ‌விளையாடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் குழ‌ந்தை ‌திடீரென ம‌ந்தமாக‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் அதை உடனடியாக கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம். சாதாரணமாக ‌வி‌ட்டா‌ல் ‌விஷய‌‌ம் ‌விப‌ரீதமாகலா‌ம்.

ஆண்களுக்கான இளமை ரகசியம்!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல....! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .

நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.

மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . !