நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க சில எளிய வழிகள்!!!

அவர்களை கண்காணிப்பதன் மூலம் உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனையை உள்ளதா இல்லையா என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் குழந்தை மலம் கழிக்க வேண்டும். சில குழந்தைகள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறைதான் மலம் கழிப்பார்கள். மலம் கழிக்க கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வாந்தி, வயற்று வலி, வயறு வீக்கம்,பசியின்மை போன்றவை மலச்சிக்கல் நோயின் அறிகுறிகளாகும். அதனால், அவர்களது டயட்டில் கவனம் கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிடுவதும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.உங்கள் குழந்தைகளின் மலம் கழிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான சில வழிகளைப் பார்க்கலாம்.
1.
ஊட்டச்சத்தான உணவு உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுவகைகள் மிகவும் அவசியமானதாகும். நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை கொடுங்கள். ருசியானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்க வேண்டும். அவர்கள் டயட்டில் பழங்களும் காய்கறிகளும் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களது உணவை அழகாக அலங்கரித்து அவர்களின் பசியை தூண்டுங்கள். உங்கள் குழந்தை நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் போதுமான நீரை பருகுமாறு பார்த்துக்கொள்ளவும். இதனால் உங்கள் குழந்தை மலம் கழிப்பது சீராகும்.
2. வயிற்றை சுத்தம் செய்தல் மலச்சிக்கலை சரிசெய்வதற்கு குழந்தைகளுக்கு லக்சடிவ் மற்றும் ஸ்டூல் சாப்ட்னர் போன்றவற்றை கொடுக்கலாம். இந்த ஸ்டூல் சாப்ட்னர்கள் பாதுகாப்பானதாகும். எனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்டூல் சாப்ட்னர்கள் பயன்படுத்துவதை உடனே நிறுத்தி விடக்கூடாது.
3. உடல் உழைப்பு உடல் நலம் சீராக இருப்பதற்கு உடல் உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இதனால் குழந்தைகளுக்கும் உடலுழைப்பு மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையிடம் போதுமான உடல் உழைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு நாளில் ஒரு குழந்தையிடம் சராசரியாக 60 நிமிடங்கள் உடலுழைப்பு இருக்குமாறு பார்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
4. மருந்துகளில் கவனம் உங்கள் குழந்தைக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகளைக் கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்கும் மருந்துகளில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். அப்படி கொடுக்கும் மருந்தினால் மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே நிறுத்தி விடவேண்டும். மாறாக அவ்வாறு கொடுக்கும் மருந்தினால் உங்கள் குழந்தையின் உடல் நலம் சீராக இருந்தால் உடனே நிறுத்திவிடகூடாது. இதுவே குழந்தைகளிடையே ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதற்கான வழிகளில் சிறந்த ஒன்றாகும்.
5. ஒழுங்குமுறை சிறிய ஒழுங்குமுறை கூட பல விந்தைகளை செய்யும். வழக்கமான நேரம் ஒன்றை மலம் கழிப்பதற்காக ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் உங்கள் குழந்தை மலம் கழிக்குமாறு செய்யவேண்டும். உங்கள் குழந்தையிடம் "இது பாத்ரூம் போக வேண்டிய நேரம்" என்னும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மேற்கூறிய அனைத்தையும் செயல்படுத்தினால் உங்கள் குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இவை அனைத்து வழிகளையும் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். இருப்பினும், ஒரு குழந்தை குறைவான நார்ச்சத்தை உட்கொண்டு ஸ்டூல் சாப்ட்னர் உபயோகிப்பதும், குறைவான உடலுழைப்பு செய்து அதிக நார்ச்சத்து உணவை உட்கொள்ளுவது போன்றவை எந்த பலனையும் அளிக்காது. அதனால், சரியான முறையில் இவை அனைத்தையும் செயல்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம

கருத்துகள் இல்லை: