நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 14 ஜூலை, 2015

கல்லீரல் (லிவர்)

குடியினால் வரும் உடல் ரீதியான நோய்களில் கொடுமையானது 'லிவர் சிரோஸிஸ்’(Lever cirrhosis). இதுதான் க்ளைமாக்ஸ். குடிநோய்களின் தலைவன் இவன். சுமார் 10 ஆண்டுகளாக தினமும் மது அருந்துபவருக்கு கட்டாயம் இந்த நோய் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலின்வயிற்றுப்பகுதியின் வலது பக்கத்தில் சுமார் ஒன்றரைக் கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற உறுப்பு இது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

நமது உடலில் இருக்கும் ரத்தத்தைச் சுத்தம் செய்வது கல்லீரல்தான். தவிர, தேவையற்ற ஒவ்வாமை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் பிற நச்சுப் பொருட்களையும் கல்லீரல்தான் அழித்து, வெளியே துரத்திவிடுகிறது. தவிர, காயம்பட்டு ரத்தம் வெளியேறும்போது ரத்தம் உறைவதற்கான புரோட்டீன்களைத் தயாரிப்பதும் கல்லீரல்தான்.
 எல்லாவற்றையும்விட நம் உடலுக்குத் தேவையான மிகமுக்கியமான நீரை உற்பத்தி செய்வதும் கல்லீரல்தான். பித்த நீரின்றி அமையாது உடல். எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் அதை நொதித்து ஜீரணமாக்க இந்தப் பித்தநீர் அவசியம். இதேபோல், உடல்நிலை சரி இல்லை என்றால், ஒருவர் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளும் ஈரலில்தான் செரிமாணம் ஆகி, அதன் பலன்கள் உடலின் இதர பாகங்களைச் சென்று அடையும்.
ஆண் தன்மை ஹார்மோனான 'டெஸ்டோரோனை’(Testosterone) உற்பத்தி செய்வதும் கல்லீரலே. மொத்தத்தில் உடலில் அது ஒரு முக்கியமான என்ஜின்.
மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease - NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.
இந்த இரண்டாவது வகை - அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது - ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: