நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 18 மார்ச், 2015

புகைப் பிடிப்பதை நிறுத்த உதவும் வெப்சைட்!!!

ஒவ்வொரு சிகரெட்டும் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது. * ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும். *
 
சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதி நிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.
*
புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். *
எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.*
புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம். *
உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.அடுத்தடுத்து இப்படி வெளியாகும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளால் அண்மைக் காலமாக, சிலர், உண்மையிலேயே புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பதாகவும், அதற்கான இணைய தளம் எதுவும் உள்ளதா எனக் கேட்டார்கள். அனைவரும் இணையம் பயன்படுத்துவோர் என்பதால், அவர்களுக்கு இணையம் நல்ல கட்டுப்பாடு அதிகாரியாகச் செயல்படும் என எண்ணி, அப்படிப்பட்ட ஒன்றை இணையத்தில் தேடினோம்.அப்போதுதான் கண்ணில் பட்டது http://smokefree.gov/.
இந்த தளம் இது போல விருப்பம் உள்ளவர்களைத் திசை மாறாமல் கொண்டு செல்கிறது. அதற்குப் பல வழிகளைக் கையாள்கிறது.இந்த இணைய தளம் சென்றவுடன், முதலில் புகை பிடிப்பதிலிருந்து வெளியேற உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்களா? என்ற வினாவுடன் ஒரு பிரிவினைப் பார்க்கலாம்.
ஏனென்றால், வெகு காலம் புகை பிடிக்கும் ஒருவர், நிச்சயமாய் நிறுத்துவதற்கான முடிவினை எடுக்க வேண்டும். அதில் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், அடுத்து தரப்படும் பிரிவில், எந்த எந்த வழிகளில் புகை பிடிப்பதனை நிறுத்தலாம் என்று பல வழிகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
மேலும், இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம், சத்தான உணவினை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகளால் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது எனப் பல பிரிவுகளில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
புகைப்பவர்கள் எல்லாரும் ஒரு முறை இந்த தளம் சென்று பார்த்தால், நமக்காக இத்தனை முயற்சிகள் எடுத்து தகவல்களைத் தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு, புகைப்பதனை நிறுத்த முயற்சிப்பீர்கள்

கருத்துகள் இல்லை: