நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 19 பிப்ரவரி, 2014

கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த"கேழ்வரகு"

கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும்.
இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.
கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும்.

மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :-
கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.
இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது.
ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான்.
அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.
அதனால் ஏற்படும் மாற்றம்:-எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.

கருத்துகள் இல்லை: