நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 14 மே, 2013

வாய் ஆரோக்கியமே ! இதயத்தின் ஆரோக்கியமும் !!

சுத்தமான பற்கள் மற்றும் சுவாச ஆரோக்கிய பழக்கம், வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது. பொதுவாக பல் மருத்துவரை நாட வேண்டும் என்று கூறுவது வழக்கம், ஆனால் பெரும்பாலும் நாம் அதை செய்வதும் இல்லை. நம் வாய் ஆரோக்கியம் குறித்து கவலை கொள்வதும் இல்லை.தாய்வானை சேர்ந்த ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான வாய் என்பது இதய பாதுகாப்பிற்கு உகந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதய கோளாறுக்கு முக்கிய பலவீனமாக கூறப்படும் ஊற்றறை உதறல்( arterial caliberation), ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்றவற்றை வாய் ஆரோக்கியத்தை காப்பதன் மூலம் தவிர்க்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது
  மொத்தம் 29,000 பேரின் வாய் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முடிவில், அதன் முடிவில் அவர்களது இதய ஆரோக்கியம் குறித்து பரிசீலித்து அதன் மூலம் அவர்களிடம் அசாதாரண இதய துடிப்பு என்பது காணப்பதவில்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

வாய் ஆரோக்கியத்துடன் உள்ளவர்களுக்கு பாக்டீரியா தமனிகள் பாதிப்பு மிகவும் குறைவு, இவர்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.சர்வதேச இதயவியல் சம்மேளனம் முடிவில் கூறுகையில், பல் மருத்துவரை தவறாமல் பார்த்து வாய் சுகாதாரத்தை பேணுபவருக்கு மூன்றில் ஒரு பங்கானவருக்கு இதய ஆரோக்கியம் அம்சமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கருத்துகள் இல்லை: