நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பற்கள் பளிச்சிட ! சத்தான உணவை சாப்பிடவேண்டும் !!

பற்களை வைத்து ஒருவரின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. வாய் சுத்தமாக இருந்தால் புன்னகை முத்துப்போல பளிச்சிடும். உங்கள் புன்னகை உங்கள் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உங்கள் அழகோடும் தொடர்புடையது. பற்கள் பளிச்சிட சத்தான உணவை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

நார்ச்சத்து உணவுகள்

உயர்தர நார்ச்சத்து நிறைந்த செலரி, ஆப்பிள், காரட், போன்றவை பற்களில் உள்ள கிருமிகளுடன் போரிடுகிறது. இவை ஆரோக்கியமான உமிழ்நீரை உற்பத்தி செய்கின்றன. ஆராஞ்சு, திராட்சை போன்றவை வாய் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஏற்றது. கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

பற்களை பாதுகாக்கும் யோகர்டு

பற்களின் இடுக்குகளில் பாக்டீரியா குடிபுகுந்தால் பற்கள் சொத்தையாகும், சுவாசம் ஆரோக்கியமாக இருக்காது, வாய் துர்நாற்றம் வீசும். எனவே ஆரோக்கியமான பற்களுக்கு யோகர்டு சாப்பிடலாம். அதில் உள்ள கால்சியல் பல் சொத்தையை தடுக்கும்.

கிரீன் டீ

பச்சை தேயிலை எனப்படும் கிரீன் டீ பருகுவது பற்களில் அசுத்த பாக்டீரியாக்கள் தங்குவதை தடுக்கும். அதேபோல் சீஸ் பற்களுக்கு அவசியமானது. இதில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஏற்றது. பிஹெச் மதிப்பை சமநிலையில் வைக்க உதவும்.

பெரிய வெங்காயம்

பற்கள் முத்துப்போல பளிச்சிட பெரிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. பாக்டீரியாக்களை கொல்கிறது. எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் பற்களை பருகுவதால் பற்கள் வெண்மையாகும்.

ஸ்ட்ராபெரி பழம் இயற்கையிலேயே பற்களை வெண்மையாக்கும் பழமாக திகழ்கிறது. நன்றாக கடித்து தின்றால் பற்கள் ஆரோக்கியமான வெண்மையுடன் பிரகாசிக்கும்.

வலிமை தரும் எள்

எள் பற்களின் சுத்தத்திற்கு சிறந்த உணவுப் பொருளாகும். நல்லெண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்வது பற்களின் வலிமைக்கு ஏற்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதும் பற்களுக்கு வலிமை தரும்.

தண்ணீர் குடிங்க

சரியான அளவு தண்ணீர் பருகுவதும் வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது தேவையான அளவு உமிழ்நீரை சுரக்கச் செய்வதோடு பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை: