நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

நொறுக்குத்தீனிக்கு பதிலாக வால்நட், முந்திரி, பாதாம், பிஸ்தா

மனித உடலின் தலைமைச் செயலகம் மூளை. இந்த மூளையின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு ஏற்ற உணவுகளை உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டார்க் சாக்லேட்
கோகோ அடங்கிய டார்க் சாக்லேட் மூளையை சுறுசுறுப்பாக்குகிறதாம். கோகோ பவுடரில் உள்ள ப்ளேவனாய்டுகள் மூளையின் சுறுசுறுப்பை தூண்டுகிறது எனவே கோகோ அடங்கிய டார்க் சாக்லேட் உட்கொள்வது மூளை வளர்ச்சிக்கு உதவும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை.

மீன் உணவுகள்

மீன் உணவுகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது மூளையின் நியூரான்களை சுறுசுறுப்பாக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. சல்மான், டுனா,போன்ற மீன்களில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பச்சை காய்கறிகள், கீரைகள்

பச்சை காய்கறிகள் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. கீரைகள், முட்டைக்கோஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மூளையை சுறுசுறுப்பாக்கும். இந்த உணவுகளில் உள்ள வைட்டமின் பி 6, பி 12 போன்றவை அல்சீமர் நோய் தாக்குதலில் இருந்து மூளையை பாதுகாக்கிறது. இந்த காய்கறிகளில் இரும்புச்சத்தும் மூளைக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

முந்திரி, பாதம்

நொறுக்குத்தீனியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக வால்நட், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவைகளை உண்ண கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. வைட்டமின் இ, வைட்டமின் பி6 போன்ற உயிர்சத்துக்களும், ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்களும் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் ஏற்றது என்கின்றனர் வல்லுநர்கள்.

மூளையாக செயல்படும் முட்டை
முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அத்தியவசிய அமைனோ அமிலங்கள், விட்டமின்கள் ஏ, டி, இ, பி2 ,பி1,பி12 , புரதம், மாவு சத்து, பல தாதுஉப்புக்கள் என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய முட்டையில் உள்ள கொளின் எனப்படும் சத்து உதவுகிறது. இது மூளைக்கு மூளையாக செயல்பட்டு நரம்பு மண்டலத்தில் இருந்து தரப்படும் சமிக்ஞை உத்தரவுகளை கொண்டுசேர்க்கும் தூதுவனாகவும் உள்ளது.

பெர்ரி பழங்கள்

அதிசய பழங்களாக கருதப்படும் பெர்ரி பழங்களில் அதிக அளவில் ஆண்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. பிளாக்பெரி, ப்ளுபெரி, போன்ற அனைத்து வகையான பெர்ரி பழங்களுமே உண்பதற்கு ஏற்றவை. இவை மூளை வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் ஏற்றது. நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மசாலாப் பொருட்கள்
மூளை வளர்ச்சியை அதிகரிப்பதில் மசாலாப் பொருட்களுக்கு முக்கிய பங்குண்டு என்கின்றனர். இது நீரிழிவு, இதயநோய்களையும் தீர்க்கிறதாம். மாதம் ஒருமுறையாவது, கரம்மசாலா பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கிறதாம்.

பச்சை தேநீர்

அதிகாலையில் தேநீர் அருந்துவது மூளையை சுறுசுறுப்பாக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். காபி அருந்துவதை தவிர்த்து பச்சைத் தேநீர், கருப்பு தேநீர் அருந்துவது புத்திக்கூர்மைக்கு உதவும் என்கின்றனர். காலை நேரத்தில் புத்துணர்ச்சியை அதிகரிப்பதோடு தேவையற்ற உடல் எடையையும் குறைக்கும் என்கின்றர்.

தானியங்கள்

கைக்குத்தல் அரிசி, கோதுமை, கம்பு, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. இதில் உள்ள விட்டமின் பி6, தையாமின் போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நினைவாற்றலை அதிகரிக்க தையாமின் உதவுகிறது என்கின்றர் உணவியலாளர்கள். இந்த உணவுகளில் உள்ள போலேட் இளமையை தக்கவைக்கும்.

நன்மை தரும் நத்தை

மூளை வளர்ச்சிக்கு நத்தை நல்ல உணவாக கருதப்படுகிறது. இது புத்திக் கூர்மையை அதிகரிக்கும். இதில் துத்தநாகம், இரும்பு போன்றவை நினைவாற்றலை அதிகரிக்கும். அதோடு உடல் வளர்ச்சிக்கும் ஏற்றது என்கின்றனர் வல்லுநர்கள்.

கருத்துகள் இல்லை: