நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 21 டிசம்பர், 2011

பொடுகு தொல்லை நீங்க

உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு அதை நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயையும் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து   பின் தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சனை அடியோடு போய் விடும்.

அதிக பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் தொடர்ந்து குளித்தது வந்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். அவசரமாக தலைக்கு குளிப்பது,   நன்றாக தலையை துவட்டாதது இதனால் பொடுகு தொல்லை வருகிறது. இதனால் தண்ணீர், சோப்பு, தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். மனஅழுத்தம்,கவலையாலும் இந்த பொடுகு தொல்லை வரலாம்.

பொடுகு வருவதை தவிர்க்க.....

• ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது. 

• தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். 

• கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலியவற்றை  உணவில்  சேர்த்து கொள்ள வேண்டும்.  இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

கருத்துகள் இல்லை: