நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கரும்புச்சாறு

தின்ன தின்ன திகட்டாதது கரும்பு. இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட கரும்பு மருத்துவப் பயன் கொண்டது. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான் உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது. கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது.

உடல் இளைக்கும்

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயங்கள். உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்வதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கரும்புச்சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியவரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்கல் கட்டுப்படும்

கரும்பு சாறு விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம். இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும். கரும்புச் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும்.

கரும்பின் சாற்றைக் காயச்சி செய்யப்படும் சர்க்கரை நாட்டு மருந்துகளுக்குத் பயன்படுத்தப்படுகிறது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைக்கிறது. வெண்மை சர்க்கரையானது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.

சர்க்கரையைக் கொண்டு தயாரிக்கப்படும் கற்கண்டு மிகச்சிறந்த மருந்துவ குணம் கொண்டது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் ஈறுதடிப்பு, இருமல், வாந்தி ஆகியவை தீரும்.

கருத்துகள் இல்லை: