நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 22 ஜூன், 2011

கிரீன் டீ

கிரீன் டீ" எனப்படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சை தேயிலை தேநீர் மகா உசிதம்தான் என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சை தேயிலையின் நற்குணங்கள் ஓரளவு அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்தி காட்டுகிறது.
மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது.நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் ஐந்து கப் தேநீர் அருந்தினால் கிடைக்குமாம்.

கருத்துகள் இல்லை: