நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 27 மார்ச், 2011

பாதாம் பக்கமிருக்க...சர்க்கரை நோய் ஓட்டமெடுக்க...

சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும்.
இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஆய்வை நடத்திய மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பாதம் பருப்பு மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுஅதில் முக்கிய பங்காற்றுகிறதாம்.

மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம்.
சர்க்கரை நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்வடுதும் திறன் குறையலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, சர்க்கரை நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் LDL கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.

இதில் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும்.அதே சமயம் அதனை சர்க்கரை நோயாகவும் கருதிவிட முடியாது.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

அதில் பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, LDL கொழுப்பின் அளவும் குறைந்துள்ளது தெரியவந்தது.

ஆக மொத்தத்தில் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் சர்க்கரை நோயும், இருதய நோயும் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார் இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்ற மருத்து விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன்!

கருத்துகள் இல்லை: