நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 25 நவம்பர், 2020

சப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...?

 திருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.


சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

 

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான  சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்பு கொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும்  பயன்படுத்தலாம்.

 


கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 

முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ  வேண்டும்.

 

இருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு  செய்ய வேண்டும்.

 

வெள்ளைபடுதல் குணமாக  இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.


ஞாயிறு, 8 நவம்பர், 2020

இரத்த சோகைக்கு எதிராக போராடும் சத்துக்களை கொண்ட ஆப்ரிகாட் !!

 தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.



இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான  செம்பும் இதில் நிறைந்துள்ளது. 

 

தினமும் இந்த ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தால் குடலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதில் அதிகம் கரையும் மற்றும் கரையாத நார் சத்து இருப்பதால்,  உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

 

சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், நல்ல போஷாக்குடன் இருக்கவும், ஈரத்தன்மை மிகவும் முக்கியம். இந்த பழம் சருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மையை  போதுமான அளவு தந்து எப்போதும் நீரேற்றத்தோடு வைத்திருக்க உதவுகின்றது.

 

இந்த பழத்தில் வைட்டமின் A மற்றும் பல சத்துக்கள் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. இதனால் கண்களில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் குணமடைந்து, நலல் ஆரோக்கியம் பெற உதவுகின்றது


செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மன அழுத்தம் இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்...?

 மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.


பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும்  இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

 


சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும்  மனஅழுத்தம்  இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.

 

மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும்போது, எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

 

பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே  நரைமுடியானது வந்துவிடுகிறது.

 

எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால்  பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.

 

மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு  சக்தியானது குறைவாக  உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது ஏற்படும்.

செரிமான பாதையில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!

 தினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவு சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது.  மேலும் வயிறு உப்பசம்  குறையும்.


இஞ்சியில் உள்ள அமிலம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. தினந்நோறும் இஞ்சியை சிறு துண்டாகவும் உண்டு வரலாம் அல்லது இஞ்சி  டீயாகவும் பருகலாம்.

 

உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு ஓமத்தை மென்று சாதாரண நீர் அல்லது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சீராகும். தினமும் ஒரு லவங்கத்தை  சாப்பிடுவதாலும், இரண்டு லவங்கத்தை நீரில் கொதிக்கவைத்து சிறிது தேன் கலந்து குடித்துவர செரிமானம் சீராகும்.

 


பட்டையில் உள்ள மருத்துவ குணமானது செரிமானப் பாதையில் உள்ள கோளாறுகளை சரிசெய்து ஜீரணத்தை சுலபமாக்குகிறது. தினமும் தமான சுடு தண்ணீரில்  எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் ஏற்படாது.

 

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய்க்கிருமிகளும் வர  வழிவகுக்கும்.

 

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. மேலு சாப்பிட்ட உடன் தேநீர் அருந்துவதால், இவற்றில் உள்ள அமிலங்கள் உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்த்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடுகிறது.

 

சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிடுவதால் இவை வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மக்காச்சோளத்தில் உள்ள சத்துக்களின் முக்கிய பங்கு என்ன...?

 சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது.

 

சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. 

 

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. எனினும் மூல நோயாளிகள் சோள உணவை  தவிர்ப்பது நலம்.


 

சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள்  நிறைந்திருக்கின்றன. மேலும் மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது.

 

சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன.

 

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி  அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குவதாக பல முறை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

 

சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

குடல்வால் { APPENDIX }

 நமது பெருங்குடலில் குடல் வால் என்ற சிறிய குழாய் பகுதி காணப்படும். இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல் வால் அழற்சி என்கிறோம். இந்த அழற்சி சாதாரணமான ஒன்றாக இருந்தால் கூட சீக்கிரமே இதற்கு சிகிச்சை அளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சுமார் 9 சதவீத ஆண்களும் 7 சதவிகித பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் குடல் அழற்சியைப் பெறுகிறார்கள் என்று நியூயார்க் நகரத்தில் உள்ள மருத்துவமனை கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த குடல் வால் சிறியதாக நமக்கு பயனில்லாமல் இருந்தால் கூட இதில் ஏற்படும் பாதிப்பு நம் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குடல் வால் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) குறிப்பாக இளம் வயதான 5 - 25 வயதிற்குரியவர்களை அதிகம் தாக்குகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


குடல் வால் அழற்சி ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் சில நபருக்கு 3 நாட்களுக்கு அப்புறம் கூட அறிகுறிகள் தென்படுமாம். இந்த வீக்கம் பெரிதாகி அழற்சி குடல் வால் சிதைவதற்குள் அல்லது வெடிப்பதற்குள் நாம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை நாம் லேப்ரோஸ்கோபி மூலம் செய்ய முடியும். ஆனால் சிலருக்கு அறிகுறிகள் தெரிவதே இல்லை என்பதால் இதை கண்டறிவதே கடினமாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் வயிற்றில் அழுத்தி கைகளை வைத்து குடல் வாலில் அழற்சி இருக்கிறதா என்று கண்டறிய வேண்டியுள்ளது. இருப்பினும் குடல் வால் அழற்சியின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் உங்க சிகிச்சையை முன்னரே செய்ய முடியும். இதனால் உங்க உயிருக்கு ஆபத்து வருவதையும் நீங்கள் தடுத்துக் கொள்ளலாம்.


இந்த குடல் வால் அழற்சி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. பாக்டீரியா, பூஞ்சை போன்ற குடல் வாலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளால் இது ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தொற்று வீக்கமடைந்து குடல் வால் வெடிக்க ஆரம்பிக்கும்.

கீழ்கண்ட சில அடிப்படையான அறிகுறிகளை வைத்து, குடல் வால் அழற்சி இருப்பதை பிரச்சினையின் தீவிரத்துக்கு முன்பாகவே உங்களால் கண்டுகொள்ள முடியும். அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்

குடல் வால் வலி பெரும்பாலும் அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் ஏற்படுகிறது. முதல் அறிகுறியாக வலி தொப்புளில் ஏற்பட்டு அப்படியே வலி அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் கூட வலியை உணர வாய்ப்புள்ளது. சிலருக்கு அடிவயிற்றை அல்லது கால்களை கூட நகர்த்த முடியாது. அப்படி செய்யும் போது வலி அதிகமானதாக உணர்வார்கள். இருமல், தும்மல், காரில் பயணிக்கும் போது ஏற்படும் குலுங்கல் இவற்றின் போதும் வலி தீவிரமாகும். நிறைய பேருக்கு தொப்புளுக்கு வலி எடுத்தால் அதை கண்டுபிடிக்கத் தெரியாது. ஆனால் இந்த குடல்வால் அழற்சியைப் பொருத்தவரையில், வலி தீவிரமடைய ஆரம்பிக்கும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியும்.


வலியானது அடிவயிற்றில் தீவிரமாக ஆரம்பிக்கும். அப்பெண்டிக்ஸ் இருப்பவர்களுக்கு வலியின் தீவிரத்தால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க முடியாது.

காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படுதல்

100 டிகிரி காய்ச்சல் என்பது உங்களுக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கலாம். ஆனால் 103 வரை காய்ச்சல் அடித்து எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது குடல் வால் அழற்சி யாக இருக்கலாம். வலியுடன் காய்ச்சலும் உங்களை கஷ்டப்படுத்த ஆரம்பிக்கும்.

அடிவயிற்று வலியுடன் ஓரிரு நாட்களுக்கு மேல் வயிறு வீக்கமும், வாயுப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இருந்தால் உங்க குடல் வாலில் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்த பிரச்சினை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

வயிற்றை அழுத்தும் போது வலி ஏற்படுதல்

உங்கள் வலது அடிவயிற்று பகுதியை அழுத்தும் போது அந்த பகுதியில் வலியை உணர்வீர்கள். மறுபடியும் மறுபடியும் வலி உண்டாதல் அதனுடன் காய்ச்சல், குமட்டல் போன்ற பிற அறிகுறிகளும் தென்பட்டால் தாமதம் ஆகாமல் மருத்துவரை அணுகுங்கள்


புதன், 15 ஜூலை, 2020

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் வடை

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான பிரெட் வடை ரெடி.

காரசாரமான மைசூர் சில்லி சிக்கன்

சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,

தேவையான பொருட்கள்

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான மைசூர் சில்லி சிக்கன் ரெடி.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயாவின் பயன்கள்...!!

பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவு சோயா மட்டுமே. பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.

சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. 
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது. 
 
எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை,  குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
 
வாழ்நாள் முழுவதும் சீரான, ஆரோக்கியமான வாழ்வுக்கு, நோய் தடுப்பு முறைகளே சிறந்த ஆதாரமாகும். இதில் பெரும்பங்கு வகிப்பது ஆரோக்கியமான இயற்கை  உணவுகளே. நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஊட்டச்சத்து நிறைந்த சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம்,  கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது. 

குழந்தைகளின் முடிவளர்ச்சிக்கு உதவும் சில பயன்தரும் குறிப்புகள் !!

குழந்தையின் தலையில் முடி இருக்கிறதோ இல்லையோ வாரம் இருமுறை தலைக்கு குளிப்பாட்டுங்கள். தினமும் தலைக்கு குளிப்பாட்ட வேண்டாம். வெயிலில் சென்றால் தலையில் மறைக்க பேபி டவல், ஹேட், கேப் பயன்படுத்து நல்லது.

சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுகள் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ, பி, சத்துக்கள் முடியின் தரத்தை மேம்படுத்தும். பருப்புகள்,  பப்பாளி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் இச்சத்துக்கள் உள்ளன.

தொடர்ந்து எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து வந்தால் ஸ்கால்புக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும். இதனால் முடி வளர்ச்சியும் சீராக இருக்கும். முடிக்கு  தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.

2 அல்லது 3 நாளைக்கு ஒருமுறை முடியை அலசுங்கள். வியர்வையால் உண்டாகும் அழுக்கு, கிருமிகள் நீங்கும். மேலும் தயிர், செம்பருத்தி, முட்டை போன்ற இயற்கை கண்டிஷனரை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். முடி ஆரோக்கியமாகும்.

ஈரமான முடியை துவட்டும்போது, மிதமான அழுத்தத்தில் முடியை துவட்டுங்கள். வேகமாக தேய்க்க கூடாது. ஒத்தி எடுப்பது சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கு  முடியை காய வைக்க டவலால் துடைப்பதே சரியான வழி. ப்ளோ ட்ரையர் போன்றவற்றை எக்காரணத்துக்கும் பயன்படுத்த கூடாது.

தலைக்கு மிருதுவான பிரஷ் அல்லது சீப்பை பயன்படுத்துவது நல்லது. சீரான இடைவெளியில் ஹேர் கட் செய்வதால், குழந்தைகள் அழகாக இருப்பார்கள். முடி  பிளவுகளும் ஏற்படாது. கண்கள் அருகில் வரை, முடி வளர்ந்து தொல்லை செய்யாது.