நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 15 ஜூன், 2020

குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்...?

ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் ஒரு நாளைக்கு 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.
நம் குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் சரியாகும். 
 கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை  சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ்  செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.
 ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி  குடித்தால் குடல் சுத்தமாகும்.
 குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து  வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.
 அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
 கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும்  சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வைக்கும்.

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வெரிகோஸ் வெயின் நோய்க்கு தீர்வு..!!

சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.


மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு - 3 துண்டு, கற்றாழை நுங்கு - தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.

இதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும். அப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.

அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.

மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால்  படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.
 நரம்பு சுருட்டலை அறிந்ததும் மருந்து கடைகளில் கிடைக்கும் சுருக்க கால் உறைகளை. பொதுவாக கால் வலி இருப்பவர்கள், இதை பயன்படுத்தலாம். இந்த சாக்ஸை அணிவதன் மூலம் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து காலில் இருக்கும் கெட்ட ரத்தத்தை இதயத்தை நோக்கி செல்வதற்கு தூண்டுகின்றன. இதனால் நரம்பு  வீக்கம் குறையும்

வியாழன், 14 மே, 2020

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய காரணம் என்ன....?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது.

கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான  இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின்  உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.

ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து நிறைந்து உணவை அதிகம் பரிந்துரைக்கின்றார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், கர்ப்பிணிப்  பெண்களுக்கு ஏற்படக் கூடும்.

கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும். உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. உடலில் இரும்புச் சத்து சரியாகக்  கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம். முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில்  ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

புதன், 13 மே, 2020

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா...? எளிய இயற்கை அழகு குறிப்புகள்...!

சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப்  பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.
 
வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள்.  அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும். இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை  இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.
 
விளக்கெண்ணெய்யை தினமும் புருவங்களில் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெய்யில், புரதச்சத்து,  ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. 
 
ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை  புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள். 
 
முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை  ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும்  குறைகிறது. 

கொலஸ்ட்ரால் உண்டாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

நம் உடலில் கல்லீரல் உடலுக்குத் தேவையான கொழுப்பில் குறிப்பிட்ட அளவை மட்டுமே சுரக்கிறது. அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலமும் நம் உடலில் கொழுப்பு சேர்கிறது. அதிலும் நாம் கொழுப்புச் சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளையும் துரித உணவுகளையும் உண்பதால் நம் உடலில் கொலஸ்ட்ராலின்  (இரத்தத்தில் கொழுப்பின்) அளவு அதிகரிக்கிறது.

 
சிறுவயதிலிருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்டவர்களுக்கு ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது.  இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இளவயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.
 
அன்றாடம் உடற்பயிற்சி இல்லாமல் செயலற்று இருப்பதும் அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமலும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.
 
உடல் பருமனாகவும், உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருப்பதால் கலோரிகள் எரிக்கப்படாததால் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும். பொதுவாக இவ்வாறு இருப்பது நல்ல கொழுப்பின் (மிகையடர்த்தி லிப்போ புரதத்தின்) அளவைக் குறைக்கிறது.
 
நாம் உண்ணும் உணவில் நல்ல கொழுப்புகளும் உள்ளன. அவைகளை நமது உணவில் சேர்த்து உண்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் அண்டாமல் நமது உடல் மிக நலமுடன் இருப்பதுடன் நமது இருதயமும் நலமாக இருக்கும்
 
புகைப் பிடித்தலும் இரத்தக் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவை அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகும். இவ்வாறு கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஞாயிறு, 22 மார்ச், 2020

சுலபமான முறையில் காராப் பூந்தி செய்ய...!

தேவையான பொருள்கள்:
காராப் பூந்தி

கடலைப் பருப்பு - 200 கிராம்
இட்லி அரிசி - 50 கிராம்
நிலக்கடலை - 3 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் பருப்பு, அரிசியுடன் மிளகாய் தூள், காயத்தூள், உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்வாக அரைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களில் அரைபட்டு விடும்.
                                                                                     
நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் எண்ணெயின் மேல் ஒரு பெரிய கண் கரண்டியை  வைத்து ஒரு மேஜைக்கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.

பூந்தி நன்கு சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் போட்டு வெந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.

சூடாக இருக்கும் எண்ணெய்யில் கறிவேப்பிலையை வறுத்து காரப்பூந்தியுடன் சேர்க்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள நிலக்கடலையும் சேர்த்து கலந்து விடவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான காராப் பூந்தி தயார்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

வீட்டிலேயே செய்யலாம் பாதாம் பர்ஃபி

பாதாம் பருப்பு பர்ஃபிடியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 400 கிராம்



செய்முறை:

பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும்.

பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.

சூப்பரான பாதாம் பருப்பு பர்ஃபி ரெடி.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்....!!

வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது.
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை  கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது. ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு  துணைபுரிகிறது.

தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது.

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாக்குகின்றது.

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும்  தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது

திங்கள், 10 பிப்ரவரி, 2020

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம்,  கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன்,  நினைவாற்றல் அதிகரிக்கும்.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை  ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

கறிவேப்பிலையை இந்த முறையில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக்  கொண்டிருக்கும்.
கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம், கடுக்காய்த்தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி ஒரு  சிட்டிகைபொடியை வெந்நீரில் இரு வேலை குடித்து வர அழிந்துப் போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும்.

நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள், உடலில் எங்காவது இருந்தால் அவற்றைப் வெளியேற்றும்.

கறிவேப்பிலை இலையைக் கைப்பிடி அளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிசலாம். இவை குமட்டல், வாந்தி, அசீரணபேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறிவேப்பிலை இலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர  பித்தநரை, இளநரை மாறும்.

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டு பிசைந்து சுடுசோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல், பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற  பேதியும் நிற்கும்.

கறி வேப்பிலையை தொடர்ந்து உணவில் உபயோகித்துவர சளி, கபநீர்க்கட்டு அடங்கும். கறிவேப்பிலை, ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில்  போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி நான்கு வேலை 50 மில்லி வீதம் குடித்து வர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல்  குணமாகும்.