நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 16 மே, 2018

வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காணலாம். ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறிய துண்டு, பால் - 1 கப், தேன் - 1 ஸ்பூன்.

செய்முறை:

இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின்  சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும்.

ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான  இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பயன்கள்:

இஞ்சிப் பாலைக் குடித்தால், சிகரெட் பிடித்து அதனால் நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால், சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.

தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

கோடையில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வழங்கும் நுங்கு

பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். பனை எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர்.
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதன் ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக  மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார்.

இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.  நம் உடலுக்குத் தேவையான  நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப்  பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,  பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. 

நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன்,  நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். 

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால்,  தாகம் அடங்கிவிடும்.  ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலிற்கு தேவையாக ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.




மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும்.

100கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் இதில் உள்ளது.

மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கையான நோய் எதிர்ப்பு பொருட்களாகும். இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறிவிடும். இதனால் தேக ஆரோக்கியம் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

கிழங்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு மட்டுமே உண்ண வேண்டும்.

கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை உள்ளது.

திங்கள், 16 ஏப்ரல், 2018

பூசணிக்காய் தயிர் பச்சடி


தேவையான பொருட்கள் :


வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோ
தயிர் - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2  ஸ்பூன்
கடுகு, உளுந்து - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடாயில்  எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.

சுவைாயான  பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி.

வியாழன், 22 மார்ச், 2018

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய்  பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால்  கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால் , உடல்  எடையை குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது  நல்லது.

கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.

கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

செவ்வாய், 20 மார்ச், 2018

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் தெரியும்

வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.

அதாவது நீரை கொதிக்க வைத்து அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து 3 நிமிடம் கழித்து, அதை வடிகட்டி, தேன் கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையில் குடிக்கலாம்.

வெந்தய டீ குடிப்பதன் நன்மைகள்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்கள் போன்ற பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, நம் உடம்பில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவும் குறையும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 1 டம்ளர் வெந்தய டீயை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி, குடல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய நோயின் தாக்கம், விட்டமின் B1 குறைபாட்டினால் ஏற்படும் பெரிபெரி நோய் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்கிறது.
பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவும்.
வெந்தய டீயை தினமும் குடித்து வந்தால் அது நம் உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.
வெந்தய டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அது மூட்டு வலி, முழங்கால் வலி முழுவதுமாக குணமாக்கும்.
சைனஸ், சளித் தொல்லை, பொடுகு பிரச்சனை, தொண்டைப்புண், வாய் புண் மற்றும் உடல் துர்நாற்றம் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

வியாழன், 1 மார்ச், 2018

விக்கல் ???

விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல் எடுக்கும், சில சமயங்களில் இது ஆபத்தில் கூட முடியும், மூச்சுக் குழாயில் உணவு சென்று அடைத்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.

உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது.

உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும்.

விக்கல் வர என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள்.

வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

விக்கல் நிறுத்த என்ன செய்வது?

* மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள்
*
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும்.
*
மென்மை உப்புகள் பயன்படுத்தவும்
*
எலுமிச்சை சாபிட்டால் விக்கல் நின்றுவிடும்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மறந்து போன மருத்துவ உணவுகள் -- சமையல் குறிப்புகள்

 

''உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே...'' என வரவேற்கிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா. இவர் வழங்கும் இந்த ரெசிபிகள் சுவையானவை... சத்தானவை!

பிரண்டைச் சத்துமாவு
தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் - அரை கிலோ, புளித்த மோர் - ஒரு லிட்டர், கோதுமை - ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து - தலா 100 கிராம்.

செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.

மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.


அஷ்ட வர்க்க உணவுப்பொடி
தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் - தலா 50 கிராம்.

 

செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!

மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.


இஞ்சிப் பச்சடி
தேவையானவை: இஞ்சி - 100 கிராம், புளி - சிறிதளவு, எலுமிச்சை - 4, பெரிய வெங்காயம் - 2, உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.





எள்ளு சாதம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - 450 கிராம், எள், நெய் - தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு - தலா 15 கிராம், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் - அரை மூடி, கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!

மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.


வேப்பங்கொழுந்து துவையல்
தேவையானவை: வேப்பங்கொழுந்து - 30 இணுக்கு, வெல்லம் - 10 கிராம், உளுத்தம்பருப்பு - 20 கிராம், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.

 

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 

முடி கொட்டுகிறதா? கருமை நிறம் வேண்டுமா?; கவலையை விடுங்க....!

கரும்பச்சை இலைகளையுடைய சிறு செடியினம், நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையது.
 

வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

குணமாகும் நோய்கள் - வலிப்பு, நரம்பு நேய்கள், புண்கள், மூலம், காமாலை, நீர்சுருக்கு நீக்கும்.

இயற்கை சாயம்:

டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரி இலைகளைப் பயன்படுத்தினால், எந்த கலவையும் இல்லாமல் கருகரு முடியை பெறலாம்.
 

 


 
அவுரி ஆயில் செய்ய:

அவுரி இலை - 50 கிராம்

மருதாணி இலை - 50 கிராம்

வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்

கறிவேப்பிலை - 50 கிராம்

பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் அரைத்து, வைத்திருக்கும் அவிரி கலவையுடன் சேர்த்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதிநிலைக்கு வரும்போது இரக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி தலைக்கு என்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் மிடுயின் நிரம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன.



மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.

உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

2. நீரிழிவுக்கு உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.

3. முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும்  ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.

4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.

5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.