நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 16 நவம்பர், 2015

நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. – பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

 

மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க ...



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக

, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்: கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்: கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை: எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு
: சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி: எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு: பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது

செவ்வாய், 10 நவம்பர், 2015

எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது சோயா பீன்ஸ்!!

சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயிர் கொல்லியானஎய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.
அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும்எச்..வி.’ கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச்..வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

திங்கள், 26 அக்டோபர், 2015

சப்பாத்திக்கான பருப்பு

தேவையானப்பொருட்கள்:

பாசி பருப்பு (பயத்தம் பருப்பு) - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2இஞ்சி - ஒரு சிறு துண்டு
தக்காளி - 1கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:

பயத்தம் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணை, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு மலர வேக விடவும். பசைபோல் குழைய விட வேண்டாம்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து பொரிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்றாக மசிய வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்த பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை ஊற்றிக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து கீழே இறக்கி வைக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். கொத்துமல்லித் தழையை மேலே தூவி விடவும்.
சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஏற்ற பருப்பு இது.

சந்தன மரம்

ரகங்கள் -: இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.
பயன் தரும் பாகங்கள் -: சேகுக்கட்டை மற்றும் வேர்.

வளரியல்பு -: தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளை யுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம்
விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.
மருத்துவப்பயன்கள் -: சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.
முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.
கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.
பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.
சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.
சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.
மருதாணி விதை, சந்தனத்தூள் கலந்து சாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும்.
நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.
சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.
100
கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல்நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.
நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.
நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

புகைப் பிடிப்பதை நிறுத்தியவர்கள் உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற ஆரோக்கிய உணவுகள்!

புகை பிடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும். புகைக்கு அடிமையானவர்கள் எளிதில் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். புகையிலையில் இருக்கும் மிக முக்கிய மூலப்பொருளான நிகோடின் தொடர்ந்து உடலில் செல்லும்போது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும்.
இந்த அதிவேக ரத்த அழுத்ததைத் தாங்க முடியாமல், நுரையீரல் தன்னுடைய சுத்திகரிக்கும் வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும். இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
 மது அருந்தும்போது அதை உட்கொள்பவருக்கே அதிக பாதிப்பு. ஆனால், புகையால், புகைப்பவருக்கு மட்டுமல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகப் பாதிப்பை தந்து, சுற்று சூழலுக்கும் அது தீங்கை விளைவிக்கிறது.
மேலும், புகைப்பிடிப்பதால், உடலில் வைட்டமின்கள் , சி சத்துக்கள் இழக்கப்படும். இந்த வைட்டமின் நம் உடலில் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நிரந்தர நோயாளியாக வாய்ப்பு அதிகம்.

புகைப் பிடிப்பதை நிறுத்தினாலும், நம் உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற பல வருடங்கள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம், புகைத்ததினால், உடலில் கலந்த நிகோடின் அளவைக் குறைக்கலாம்.
ப்ராக்கோல
இதில் வைட்டமின் சி மற்றும் பி5 அதிகமாக இருப்பதால், புகையிலையினால் குறைந்த, வைட்டமின் சி-யின் அளவை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமின்றி, உடலில் கலந்துள்ள நிகோடின் அளவைக் குறைக்க இது உதவுகிறது.
ஆரஞ்சு
பொதுவாக நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஆரஞ்சு சாறு மிகவும் நல்லது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸை குடிப்பவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதுடன் மன அழுத்தம், சோர்வுகளை நீக்கவல்லது. இதிலிருந்தும் நமக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.
கேரட
ஒவ்வொருமுறை புகைப்பிடிக்கும் போதும் நம் உடலில் மூன்று முதல் நான்கு நாட்கள் அந்த நிகோடின் அளவு குறையாமல் தங்கி விடுகிறது. இதனால் நமது உடலின் உள் உறுப்புகள் மட்டுமில்லாமல் தோலின் தன்மையும் மாறிவிடுகிறது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் , சி, கே மற்றும் பி சத்துக்கள் வேகமாகச் செயல் புரிந்து உடலில் கலந்துள்ள நச்சுப்பொருளான நிகோடினை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
பசலைக்கீரை
கீரை என்றாலே சத்துதான். அதிலும் பசலைக் கீரையில் பல வைட்டமின்கள் உள்ளன. இதில் ஃபோலிக் ஆசிட் அதிகமாகக் காணப்படுகிறது. ஃபோலிக் ஆசிட், ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.
கிவ
பார்ப்பதற்குச் சப்போட்டா பழம் போல இருக்கும் இது. எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவே இருக்கிறது. இந்த அதிசய பழத்தின் மூலம் உடலில் கலந்துள்ள நிகோடின் அளவை விரைவில் வெளியேற்றலாம்.
தண்ணீர்
புகைப்பதினால் உடலில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படும். அதிகளவு தண்ணீர் குடிப்பதின் மூலம், புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும். அது மட்டுமின்றி, நிகோடின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது