நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 23 அக்டோபர், 2019

டெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...!!

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது,  அவருக்கும் டெங்கு பரவும்.
வைரஸ் நோயாளியிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகள் உடல் நலம் பெறும்வரை,  கொசுவலைக்குள் இருப்பது நல்லது.

டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான ads கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும். பழைய டயர், தூக்கி வீசி எரியப்பட்ட  பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவாறு பார்த்து கொள்ளவேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி  விடவேண்டும்.

வீட்டில் உப்யோகபடுத்தாத தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து கொள்ளவேண்டும்.  அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்க்கை சுழற்சி ஏழு நாள். ஆதலால்,  எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனப்பெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ  ஏதுவாக அமைந்துவிடும்.

நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்கவேண்டும். வீட்டில் உள்ள குளிரூட்டி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்காமல்  அவ்வப்போது நீக்கி விடவேண்டும்.


கொசு கடிக்காமல் கை, கால்களை நன்றாக மூடி வைக்கவேண்டும். கொசு வலைகளை பயன்படுத்தலாம். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு  வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் சிலருக்கு இது சுவாச  அலர்ஜி ஏற்படுத்தும்.

இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும்.

அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்.

நீ சேர்ந்திருக்கும் இடங்களில் கொசுவின் லார்வாவை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே  நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

உணவில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்!!

உணவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயத்தாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.  வெங்காயம் போலவே வெங்காயத் தாளிலும் கந்தகச்சத்து அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தாள் வெள்ளை,மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட  பல்வேறு வகைகளில் கிடைக்க கூடியது. இது குறைந்த கலோரியை கொண்டது.
வெங்காயத்தாளில் வைட்டமீன் சி, வைட்டமீன் பி2, வைட்டமின் ஏ,கே மற்றும் தயமின் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன இதுமட்டுமின்றி மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,காப்பர்,மாங்கனீஸ் நார்ச்சத்துகள் மூலங்களாக உள்ளன.

வெங்காயத்தாள் கீரை வகையை சேர்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவருக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும். இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப்பூ பசியை தூண்டும்

சனி, 31 ஆகஸ்ட், 2019

தோல் சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் தரும் இயற்கை வைத்தியம்!!

அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து  அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை  எல்லாம் ஓடிப்போய்விடும். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.

வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப்  பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில்  குளித்தாலும் தோல்  சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.

ஞாயிறு, 21 ஜூலை, 2019

எலுமிச்சை தோலை கொதிக்கவைத்த பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

.எலுமிச்சைச் சாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை தோலும் சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.
முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்து, அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். 10 முதல் 15 நிமிடம் ஆறவைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக் கொண்டு, ஒரு  டம்ளர் நீருடன் சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்தினமு இந்த காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை தரும்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக  வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தப்படுத்தும். 

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது.

உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். பல வழிகளில் உடலில் சேரும் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் கூடினால், அடுத்தடுத்து பல பிரச்னைகள் வரும்.
காரணங்கள்:

உயர் ரத்த அழுத்தத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் சேருகிற நீர், உடலில் சேருகிற உப்பு, சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்த நாளங்கள் வேலை செய்கிற விதம், ஹார்மோன்கள் வேலை செய்கிற விதம் போன்றவை முக்கியமானவை.

உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய்,  ஏன் மரணம்கூட ஏற்படலாம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு,  உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு,  புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம்.

சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாது. இதை எசன்சியல் ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவார்கள். சில நேரம் மற்ற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.

ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி. கிராம்  அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த  அழுத்தம் கட்டுப்படும். உணவில் அதிகளவு கறிவேப்பிலை, கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அகத்திக் கீரை, சுண்ட வத்தல் ஆகியவற்றைச் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

எலுமிச்சம்பழம், புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால், உப்பின் தேவை குறையும். பசும் பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப்  போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பும், கொழுப்பும் குறையும்

செவ்வாய், 25 ஜூன், 2019

இட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து

தேவையான பொருட்கள் :

பாசிப் பருப்பு - 1 கப்
பச்சைப் பயறு - 2 கரண்டி
நிலக்கடலை - 2 கரண்டி
கொள்ளு - 2 கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பச்சை கத்தரிக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு


செய்முறை :

தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.

வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து  கொஸ்துவில் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.

இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

புதன், 12 ஜூன், 2019

வேரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!!

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் திடீரென கால்களில் கரன்ட் வைத்த்து போல் ‘சுர்’ரென இழுக்கும் ஓர் உணர்வு இருக்கும். அடுத்த சில நிமிடங்களுக்கு கால்களை அசைக்கவே முடியாது. ‘வேரிகோஸ்  வெயின்ஸ்’ என்ற இந்த நரம்பு சுருட்டிக் கொள்ளும் பிரச்னையை வாழ்க்கையில் பலரும், ஏதேனும் ஒரு காலகட்டத்தில்  உணர்ந்திருப்பார்கள்.
பெண்களை அதிகம் பாதிக்கின்ற இந்த வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனை பற்றி பார்ப்போம். இதயம்தான் உடல் உறுப்புகள் அத்தனைக்கும்  ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புகிறது. ரத்தக் குழாய்களுக்கு ‘வெயின்ஸ்’னு பேர். அப்புறம் கார்பன் டை ஆக்சைடு கலந்த   ரத்தத்தை மறுபடி இதயத்துக்குக் கொண்டு வருவதும் இதே வெயின்ஸ்தான். இப்படி ரத்தம் இதயத்துக்குப் போவதற்கு கால் தசைகளும்கூட பம்ப் மாதிரி உதவி செய்யும். அப்படிப் போகும்போது கால்களில் உள்ள நாளங்கள் வீங்கி, புடைத்து விடுவதால், ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தாலும் வேரிகோஸ் வெயின்ஸ் வரலாம்.

ஆண்களைவிட பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் வருது. நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்க்கிறவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்குகிறவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். பரம்பரை ரீதியாகவும்  குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் இதனால் பாதிக்கப் படுகிறார்கள்.

கை, கால்கள் வலி, வீக்கம், உள்ளுக்குள் ரத்தம் தேங்கி, சருமத்தில் மாற்றங்கள் தெரியும். சின்னதா அடி பட்டாலும் அதிக ரத்தப் போக்கு, சருமத்தில் கருப்பு, கருப்பா திட்டுக்கள், நடக்கும் போது வலி வெரிகோஸ் வெயின்ஸ் நிறைய அறிகுறிகளைக் காட்டும். சில சமயம் புண்  வந்தாலும் சீக்கிரம் ஆறாது.

எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. கால்களை ரொம்ப நேரம் தொங்கவிட்டபடி உட்காராமல், கொஞ்சம் உயர்த்தின  மாதிரி  வைக்க வேண்டும். ரொம்ப நேரம் நிற்பதை தவிர்ப்பது நல்லது.. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பப்பையோட அழுத்தம் காரணமாக,  இந்தப்  பாதிப்பு வருவது உண்டு.

இடது பக்கமாக திரும்பிப் படுக்கிறது அவர்களுக்கு இதம் தரும். பிரச்சனை இருக்கிறவர்கள் உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. கால்களில் சாக்ஸ் மாதிரி அணியற ‘கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ்’ உபயோகிப்பது பலன் தரும்.

பிரச்சனை தீவிரமானவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன. ‘என்டோவீனஸ்  லேசர் சிகிச்சை’, ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி  அப்லேஷன்’, ‘செலெரோ தெரபி’ போன்ற நவீன சிகிச்சைகளும் குணம் தரும்

சனி, 8 ஜூன், 2019

நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் தயிரின் முக்கிய பங்கு!!

தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது நல்லதாகும். லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம்.
கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக  இருக்கிறது.
 தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும். காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன்  சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது.

பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும். உப்பு அல்லது சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை  அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும்.
 ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். மூல நோயால் அவதிப்படுபவர்கள்  தயிரை பயன்படுத்தலாம். தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும்  நல்லதாகும்.

பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை  தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும்.

வியாழன், 30 மே, 2019

வாய்வுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் அதற்கான தீர்வுகளும்...!!

செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய  காரணமாகும்.
வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால், அதனை சரி செய்யவேண்டியது அவசியம்.

வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக்கப்படுகிறது.

மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை  வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.

புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா  எண்ணெய் வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. மேலும் இவை அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.

திங்கள், 6 மே, 2019

அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.

அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல்,
நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும். டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும்போது சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்துகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. டீயில் டோனிக் அமிலம் உள்ளது. இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை உண்டாக்க காரணமாகிறது