நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 6 மே, 2019

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒரு மாதம் வரை 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

நாம் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆக ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. எலும்பு பலவீனம் அடைய கால்சியம் சத்து அவசியம். அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளது. எனவே, இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

மார்பக புற்று நோய் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளை அழிக்கும்.

உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும்.

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தொண்டைப்புண் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

இருமல் மற்றம் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும். முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நம் கண்களுக்குத் தேவையான விட்டமின் ஏ அதிக அளவு நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

வெள்ளி, 15 மார்ச், 2019

நெஞ்சு படபடப்பு

நெஞ்சு படபடப்பு அல்லது மார்புப் படபடப்பு ( palpitations ) என்பது அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பாகும். இது வியாதி இல்லாமலும் ஏற்படலாம், அல்லது இருதயப் பிரச்னையாலும் உண்டாகலாம். கடும் உழைப்பு, கவலை, பரபரப்பு காரணமாகவும் இது ஏற்படலாம்.           சாதாரணமாக நமது இருதயத் துடிப்பை நாம் அறிவதில்லை. சில வேளைகளில் இருதயம் வேகமாகத் துடிப்பதை நம்மால் உணரமுடியும். இதையே நெஞ்சு படபடப்பு என்கிறோம்.அதிகமான மது , புகைத்தல் , தேநீர் காப்பி , போன்றவையும், தைராய்டு சுரப்பி கோளாறினாலும் இதயப் படபடப்பு ஏற்படலாம்.
நாம் அனைவருமே எப்போதாவது இதுபோன்று நெஞ்சு படபடப்பு உண்டானதை உணர்ந்திருப்போம். இது அடிக்கடி ஏற்பட்டால் அது இருதய வியாதியின் அறிகுறியாகக் கொள்ளலாம். இதய படபடப்புடன் வியர்வை, மயக்கம், தலைவலி, தலை சுற்றல், நெஞ்சு வலி போன்ற இதர அறிகுறிகள் உண்டானால் நிச்சயமாக இருதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நெஞ்சு படபடப்பு சில மனக் கோளாறுகளிலும் உண்டாகும். அத்துடன் அதிகமான இரத்தம் இழத்தல், கடுமையான வலி , பிராணவாயு பற்றாக்குறை போன்றவற்றாலும் இது உண்டாகும்.
நான்கு வகைகளில் இருதயம் படபடக்கலாம்.

* Extra Cardiac Stimulation இருதயம் புறம்பாகத் தூண்டப்படுதல்.

இதில் இருதயத்திற்குப் புறம்பான பகுதியில் தூண்டுதல் உண்டாகி அதன் துடிப்பை அதிகரிக்கச் செய்வதாகும்.
இணைப்பரிவு நரம்பு மண்டலம் ( parasympathetic nervous system ) இருதயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. பயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டி அதன் மூலமாக இருதய துடிப்பை அதிகரிக்கச் செய்கின்றன.
அத்துடன் வயிறு குடல் பகுதிக்கு செல்லும் வேகஸ் நரம்பு மன உளைச்சல் காரணமாக தூண்டப்பட்டு இருதய துடிப்பை அதிகரிக்கச் செய்யும்.

* Sympathetic Overdrive – பரிவு நரம்பு மண்டல துரித செயல்பாடு.

பரிவு நரம்பு மண்டலம் என்பது சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது. பயம், அதிர்ச்சி, இரத்தத்தில் குறைவான இனிப்பு, பிராணவாயு குறைவு , இரத்தச் சோகை, இருதயச் செயலிழப்பு, போன்றவை இந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன.

* Hyperdynamic Circulation – அதி வேகமான இரத்தவோட்டம்

இருதய வால்வு கோளாறு, தைராய்டு சுரப்பி துரித செயல்பாடு, காய்ச்சல், இரத்தச் சோகை, கர்ப்பம் போன்றவற்றில் இருதயம் வேகமாகத் துடிப்பதால் நெஞ்சு படபடப்பு ஏற்படும்.

* Cardiac Dysrhythmias – ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

இதில் இதயத் துடிப்பு சீராக இல்லாமல் போவதால் அந்த ஒழுங்கற்றத் துடிப்பு நெஞ்சு படபடப்பாக உணரப்படும்.
பரபரப்பும், மன உளைச்சலும் கார்ட்டிசால், அட்ரினேளின் எனும் ஹார்மோன்களின் அளவை உயர்த்தி இணைப்பரிவு நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை தாக்கி இருதயத்தின் வேகஸ் நரம்பை அதிகமாக தூண்டி விடுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து படபடப்பு உண்டாகிறது.
இதே வெகஸ் நரம்புதான் வயிறு கூடல் பகுதிக்கும் கிளைகள் விடுவதால், வயிறு உப்பல், ஏப்பம் போன்றவை ஏற்படும்போது கூட நெஞ்சு படபடப்பும் உண்டாகலாம்.

  நோய் அறிதல் ( Diagnosis )

நெஞ்சு படபடப்பு சாதாரணமானதா அல்லது இருதயத் தொடர்புடையதா என்பதை அறிந்துகொள்ள நோயாளியின் வயது, படபடப்பு வரும் நேரம், அது குறையும் அல்லது மறையும் விதம் காப்பி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் போன்றவற்றை மருத்துவர் கேட்டு அறிந்து கொள்வார்.

இரத்தப் பரிசோதனையின் மூலமாக தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் தெரிந்து கொள்வார்.

படபடப்பு வர காரணம் !!!

சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கெல்லாம் பதற்றமடைகின்றனர். ஆகமொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்துகொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?! இங்கே தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும்போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்திருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும்போதோ, மாறும்போதோ அல்லது அதிலிருந்து விலகும்போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய்விடுகிறது.

கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மனநலக் கேடுகளை விளைவிக்கிறது.

பலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பினும், பெரும்பாலானோர் உதவி பெறுவதில்லை.

பதற்றம் உடலுக்குக் கெடுதலா?
ஓரளவு பதற்றம் நல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும்கூட! இது எதிர்பாராத ஆபத்திலிருந்தோ, தாக்குதலிலிருந்தோ நம்மைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, கவனத்துடன் இருக்கச் செய்து, வேலைகளைத் திறம்படச் செய்ய உதவுவதுடன், பிரச்சினைகளைச் சமாளிக்கத் தூண்டுகோலாகவும் இருக்கிறது.

ஆனால் எல்லா நேரமும் பதற்றமாக இருக்கும்போது உடல், மனஅளவில் பல உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

‘பேனிக் அட்டாக்’ (Panic Attack)
குறுகிய கால அவகாசத்துக்குள் (10 நிமிடங்களுக்குள்) பதற்றத்தின் அறிகுறிகள் பன்மடங்காக உச்சத்தை அடையும். மூச்சடைப்பு, மூச்சுத் திணறல், சாகப் போவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

ஃபோபியா (Phobia) அதிக பயம்
மற்றவர்கள் சாதாரணம் என்று நினைக்கக் கூடிய சூழ்நிலைகள், குறிப்பிட்ட சில இடங்கள், பொருட்கள் அல்லது மிருகங்களிடம் சிலருக்கு அளவு கடந்த பயம் இருக்கும். அதிக ஜனநெரிசல் கொண்ட இடங்களையோ அல்லது எளிதில் வெளியே செல்ல முடியாத இடங்களையோ (உதாரணமாக ரயில், பேருந்து) கூட சிலர் தவிர்க்க நினைப்பார்கள்.

ஆனால் இவ்வாறு தவிர்ப்பது, பயத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைக்காது. பதற்றப்படுவோம் என்று ஒவ்வொரு சூழ்நிலையையும் தவிர்த்தால் அதிலேயே பொழுது கழிந்துவிடும். வாழ்க்கை இன்னமும் சிக்கலாகத்தான் போகும்.

பதற்றமும் உடல் நலமும்
பதற்றம் பல உடல் உபாதைகளுடன் தொடர்பு உடையது. பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த அறிகுறிகளும் தீவிரமாகி உடலளவில் நெஞ்சு படபடப்பு, மூச்சுவாங்குதல், மயக்கம், அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலில் வலி, சோர்வு, நடுக்கம், முகம் வெளிறிப் போதல், வியர்த்தல், மரத்துப் போதல், வாய் உலர்தல், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

எப்பொழுதும் கவலையுடன் இருத்தல், கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் எரிச்சலடைவது, மனச் சோர்வு போன்ற மன உபாதைகளும் ஏற்படும்.

பதற்றம் காரணமாக வரும் உடல், மன உபாதைகள் வேறு சில நோய்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. எனவே பதற்றம் காரணமாக இந்த உபாதைகள் வரும்போது, வேறு ஏதோ நோய் வந்துவிட்டதாக தவறாகக் கணிக்கக் கூடாது.

பதற்றம் ஏற்படக் காரணங்கள்
மரபுவழி காரணங்கள் முக்கியமானவையாகக் கூறப்படுகின்றன. குடும்பத்தினர் யாருக்காவது இது இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
மூளையில் உள்ள சில புரதங்கள் குறைவினாலும் பதற்றம் ஏற்படலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள், உதாரணமாக, விபத்து, இறப்பு போன்றவை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை அதிகப்படுத்தும்.
மன அழுத்தமும் பதற்றத்தை அதிகரிக்கும்.
பதற்றத்திலிருந்து எப்படி வெளிவருவது?

புரிந்து கொள்ளுதல்
உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பதற்றத்தின் அறிகுறிகள், எந்தவிதமான சூழ்நிலையில் ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எப்படிச் சரியாகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை தினமும் எழுதி வைப்பதன் மூலம் உங்கள் பதற்றத்தைப் பற்றிய புரிதல் அதிகமாகும். அதை எப்படிச் சரிசெய்வது என்றும் பார்க்க முடியும்.
உணவுமுறை

அதிகமாக காபி பருகுவது பதற்றத்தை அதிகரிக்கும்.

பழக்கம்

புகை பிடித்தல், மது அருந்துதல் பதற்றத்தை அதிகரிக்கும்.

வாழ்க்கை முறை

எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பது, உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தத்தின் காரணம் அறிந்து திறம்பட சமாளிப்பது பதற்றத்தைச் சரிசெய்ய உதவும்.

பதற்றம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். மருந்துகள் தவிர கௌன்சலிங் (Counselling), காக்னிடிவ் பிஹேவியர் தெரபி (Cognitive Behaviour Therapy) என பலவிதமான கலந்தாய்வு சிகிச்சைகள் உள்ளன

ஞாயிறு, 10 மார்ச், 2019

மருதாணியை பயன்படுத்தி தலைமுடி உதிர்வை தடுக்கும் டிப்ஸ்...!

மருதாணி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க  உதவாது.
இலையுடன், படிகாரமும் சேர்த்து அரைத்து அதன் விழுதை, கருந்தேமல், படைகள், கால்வலி, நரம்பு இழுப்பு உள்ளவர்கள் தேய்த்து வர இந்நோய்கள் நீங்கும். இலையை உள்ளங்காலில் தேய்த்தால் கண் எரிச்சல் நீங்கும். இலையின் விழுதை தலையின் இருபுறமும் பக்கவாட்டில்,  நெற்றிப் பொட்டின் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

அம்மை போட்ட காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கும் நேரிடாதவாறு பாதுகாக்க இலையை அரைத்து இருகாலடிகளில்  வைத்துக் கட்டலாம். நகங்களுக்கு வைக்க நகம் யாதொரு நோய்க்கும் உட்படாமல் தடுக்கப்படும்.

மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும். இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

இலைகளின் இளஞ்சிவப்பு நிறச்சாயம் உள்ளங்கைகள், நகங்கள், பாதங்கள் மற்றும் கேசத்திற்கு நிறங்கொடுக்கும் பொருளாகவும்,  துணிச்சாயமாகவும் உபயோகிக்கப்படுகிறது. நறுமணப் பொருட்கள் சேர்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது.

விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து  வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்.

கூந்தலின் செழுமையான கேச வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. மருதாணிப் பூவை அரைத்து தொழுநோய் புண்களுக்குப் பற்றிடலாம். கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி  தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.

வாய்ப்புண் எதனால் வருகிறது? அதை வராமல் தடுக்கும் மருத்துவ முறைகள்...!

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.
நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத்  தொல்லைகள் தொடரும்.

வாய்ப்புண் காரணங்கள்:

ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை  மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்  வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது.

தடுக்கும் வழிமுறைகள்:

ஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மனஅழுத்தம் ஏற்படாதவாறு  தியானம், யோகா  பயிற்சிகளை செய்யவேண்டும்.

நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் ஆறும்.

மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின அதாவது கொப்பரை தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன்கிடைக்கும்.

தொப்பையை விரைவில் குறைக்க உதவும் உணவு வகைகள்.....!

உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.
நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு,  தொப்பையும் குறையும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.

உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும்.

பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே  ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால்,  வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன.

பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு  சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.

அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை  சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.

சனி, 23 பிப்ரவரி, 2019

சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு

வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு எப்படி குணுக்கு செய்வதென்று பார்க்கலாம். அதைப் படித்து, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுங்கள்
தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 பெரிய கப்
மைதா - 4 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், குணுக்கு ரெடி!!!

திங்கள், 11 பிப்ரவரி, 2019

நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்!!!

அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.



ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.

அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.

அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.


உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.

ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள். 

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்...!

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
முதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை:

வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம்  விட்டு பிறகு கழுவலாம்.

வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே  அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும். இதனால் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம்  உதவுகிறது.





உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது  முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.

கரும்புள்ளிகளின் மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும்  புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய  வேண்டும்.

ஒரு வாழைப்பழத்துடன் (பூவன் பழம்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும்  தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.

இந்த வாழை - வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும்.  எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.

வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை  காத்திருந்து, பிறகு கழுவவும்.

இயற்கையான முறையில் முக அழகைப் பராமரிக்க உதவும் தேங்காய் பால்...!

வெயில், மழை, தூசி, கெமிச்சல்ஸ், ஊட்டச்சத்தில்லா உணவுகள் என அத்தனையும் சேர்ந்து நம்முடைய சருமத்தை ஒருவழியாக்கிவிடுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களில் மூலம் இயற்கையாகவே நம்முடைய அழகைப் பராமரிக்க உதவும்.
வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய்ப் பாலில் இருக்கிறது. தேங்காயில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. இது முகத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சிலருக்கு சிறு வயதிலேயே முகச் சுருக்கங்கள், கருவளையங்கள் என சருமத்தையே பாழாக்கிவிடும். அவர்கள் தங்களுடைய தோற்றத்திலிருந்து பத்து வயது குறைவாகத் தெரிய கூட வழிகள் இருக்கின்றன.

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அது மிக வலிமைமிக்க ஆண்டி- ஆக்சிடண்ட்டாக செயல்படும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை  சாறுடன் ஒரு ஸ்பூன் பால், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள்  வரை அதை முகத்தில் உலரவிட்டுப்  பின், குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுறிதளவு அரிசி மாவை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின், வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென்றிருக்கும்.

தேவையானவை : முல்தானிமட்டி - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன். செய்முறை : இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக  இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

பப்பாளி இயற்கை நமக்குக் கொடுத்த வரங்களுள் ஒன்று. அதில் முழுவதும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கனிந்த பப்பாளியை கூழாக்கி,  அதில் சில துளிகள் தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, அது நன்கு இறுகும் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகம் கழுவுங்கள்.

கரும்புள்ளி நீங்க : தேவையானவை : உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 டீஸ்பூன் பயிற்றம் மாவு - 1 டீஸ்பூன்.  செய்முறை: மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச்  செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.