நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 16 மார்ச், 2017

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்...

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.
2.
சளியை ஒழுச்சு கட்டிடும்.
3.
வாயுத் தொல்லை என்பதே வராது.
4.
தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5.
தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6.
அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7.
ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8.
இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9.
முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10.
தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3
வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன

கேப்பை, கேழ்வரகு, நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் விளிக்கப்படும் ராகி, நம் தேசத்தின் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம்.

எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது. தமிழ் நிலத்தோடும், கலாச்சாரத்தோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு! கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோ நம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை.

"வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி!" என காவிரி பாயும் சோழர் பகுதிகள் கொண்டாடிய முப்போக விளைச்சலை, நம் தாத்தாக்கள் செய்தார்கள், நம் அப்பாக்கள் கண்டார்கள், நாம் கேள்விப்பட்டோம்! ஆனால் நம் அடுத்த சந்ததியோ தம் வரலாற்று புத்தகங்களில் படித்துக் கொண்டும், மீத்தேன் எரிவாயுவை சுவாசித்துக் கொண்டும், அதனடியில் கிடைக்கப் போகும் பெட்ரோலைக் குடித்து வாழ்வார்களோ என்னவோ! இது தனிக் கதை!

ஆனால், காவிரி போல் ஆற்றுப் பாசன வசதியற்ற நிலப்பரப்பில், வறட்சி காலத்தில் தாக்குப்பிடித்து மிக சொற்ப நீர் வசதியிலேயே வளரக்கூடியவையும், பூச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாதவையுமான சிறுதானியங்கள்தான், விவசாய சமூகமாய் நாம் வாழ்ந்த காலத்தில், பெரும்பான்மை மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் இயற்கைகொடுத்த இன்சூரன்ஸ்!


ஏன் சிறுதானியங்கள்?
சர்க்கரை, கொலஸ்டிரால், BP, இருதயம், கேன்சர் என பல லைஃப் ஸ்டைல் நோய்களால் விரட்டப்படும்நியு ஏஜ்’ இந்தியனுக்கு சிறுதானியங்களின் தேவை இரு மடங்காகி இருக்கிறது. ஏனெனில்,
அரிசிமணி பெரும்பாலும் பாலிஷ் செய்யப்பட்டு ஒரு சர்க்கரை சக்கையாகவே கிடைக்கிறது. ஆனால், அளவில் சிறிய இந்த சிறுதானியங்களை பாலிஷ் செய்வது கடினம், அதனால் இவற்றின் ஊட்டச்சத்து பாதுகாக்கப்படுகிறது.
மேலும், பூச்சிக் கொல்லிகளின் தேவை இவற்றிற்கு இல்லை ஆதலால், கெமிக்கல் அபாயம் இந்த மண்ணுக்கும் இல்லை, உண்ணும் நம் உடலுக்கும் இல்லை.

அந்த அதிசய சிறுதானியங்களில் இன்றும் நம்மோடு பரவலாய் புழக்கத்தில் உள்ள கேழ்வரகு ஒரு சாம்பியன் உணவுதான் என்பதற்கு கீழிருக்கும் ஊட்டச்சத்து அட்டவணை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

எனவே, அரிசியை விட குறைந்த சர்க்கரைச் சத்து, 18 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளதால், உண்டபின் இரத்தத்தில் சர்க்கரை அளவைடபுக்’ என ஏற்றாமல், மிக சீராக ஏற்றும் தன்மையுடைய (Low Glycaemic Index Food), நல்ல உணவு ராகி. இருப்பினும் கூழாய் குடிக்காமல், களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம்.

அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது.

பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் என கலவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது (Baby Food). 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது.

புதுத் தாயின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு.

சிலருக்குக்லூடன் அலர்ஜி’ என கூறப்படும், கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகில், ‘க்லூடன்’ இல்லாததால், ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் 1200 மாத குழந்தை வரை (100 வயசு தாத்தாவும் குழந்தைதானேங்க!) எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் உண்டென்றால், அது சூப்பர் ஃபுட் தானே!

அதனால்தான் என்னவோ, நம் வழக்கில் உள்ள இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, பக்கோடா, இனிப்பு உருண்டை என உணவுகளில் என்னென்ன வகையுள்ளதோ அத்தனையிலும் ராகியை பயன்படுத்துவது மிக நன்மை.


6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை:
கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சுத் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, கூழ் செய்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.

எந்த ஒரு Tin food விடவும் மிகச் சிறந்த, விலை குறைந்த ஒரு Baby Food! தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள்! தோனியும், விராத் கோஹிலியும்சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி’ எனவும், ஒரு கண்ணியமான தாய்க்குலம், ‘என் எலும்பைக் காப்பது இந்த வுமென்ஸ் ட்ரிங்க்தான்’ எனவும் உங்கள் வீட்டு தொலைக்காட்சியில் ராகியைக் காட்டி கூவ வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வீட்டுத் தட்டில் என்ன விழ வேண்டும் என்பதை பன்னாட்டுக் கம்பெனிகளை நிர்ணயிக்க விடாதீர்கள்!

உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய அறிவியல். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். இதே போல், மேலும் பல பாரம்பரிய வழக்கங்களில் மனித வாழ்வின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அறிவியல் பொதிந்திருக்கலாம். பொத்தாம்பொதுவாய், அவற்றைநான்சென்ஸ்’ என ஒதுக்காமல், அவற்றிற்குரிய கவனம் கொண்டு, சார்பு அற்ற, நடுநிலையான, திறந்த மனதுடன் அவற்றை நாம் ஒவ்வொருவருமே சீர்தூக்கி அணுகுவது அவசியம். நம் பொக்கிஷங்களை காப்பது நம் கடமையெனில், நம் பாரம்பரிய வாழ்வறிவும் பொக்கிஷம்தான். அவற்றைக் காப்பதும் நம் கடமைதான்!!

சனி, 18 பிப்ரவரி, 2017

நீரிழிவு, கொழுப்பு அதிகமா? கவலையே படாதீங்க!

லவங்க பட்டை பற்றி கேள்விப்பட்டிருப் பீர்கள். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.

இவ்வாறு சொல்லியிருப்பவர்கள் யார் தெரியுமா?அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.

நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர். 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.

* 18
முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23
முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
*
இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.

நம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

அல்சரும்… உண்மையும்





நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள்.
மறுபடியும்
ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் தவறு. பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போது தான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன.
வயிற்றில்
நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பதும் தவறு. நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.
தினம்தோறும்
இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப்போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ…. அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை(புண்களை) உருவாக்குகிறது. ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.
அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

சனி, 11 பிப்ரவரி, 2017

இருமல் மருந்துகளைக் கடைகளில் சுயமாக வாங்கிக் குடிக்கும் பழக்கம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இது சரியா?

இது சரியில்லை.
இருமல் என்பது நம் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்துவதற்காக உடல் ஏற்படுத்திக்கொண்ட இயற்கையான ஒரு செயல்பாடு. இருமல் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. காற்றில் கலந்து வரும் தூசி, புகை, வாசனை, வேதிப்பொருட்கள் எனப் பலவும் இருமலைத் தூண்டலாம். மூக்கு, தொண்டையில் தொடங்கி நுரையீரலின் மூச்சு சிறுகுழல்கள்வரை எந்த இடத்திலும் கிருமிகள் தாக்கி, சளி பிடித்து இருமல் வரலாம்.
தடுமம், தொண்டைப் புண், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, சிஓபிடி (COPD), புற்றுநோய் ஆகியவை இருமலை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. இதயம் செயலிழக்கும்போது நுரையீரலில் நீர் கோத்து இருமல் வருவதுண்டு. ஒவ்வாமையும், புகைபிடித்தலும் இருமலை வரவேற்பவை. சுவாசப் பாதைக்குத் தொடர்பில்லாத அல்சர், நெஞ்செரிச்சல், குடல்புழு காரணமாகவும் இருமல் வரலாம். உணவு புரை யேறினால்கூட இருமல் வரும்.
இப்படியான காரணங்களைக் கொண்டு, இருமலைப் பல வகைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். திடீர் இருமல், நாட்பட்ட இருமல், வறட்டு இருமல், சளி இருமல், ஒவ்வாமை இருமல், ஆஸ்துமா இருமல், இரவு நேர இருமல் என்பன முக்கியமான வகைகள்.

எந்த இருமலுக்கு என்ன மருந்து?
இருமலானது சுவாசப் பாதையில் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்தும், சளி அல்லது நீர் கோத்திருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தும், வீசிங் இருப்பதைப் பொறுத்தும் இருமலின் சத்தம் வேறுபடும். அதை வைத்தே நோய் பாதிக்கப்பட்டுள்ள இடத்தை மருத்துவரால் தெரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்டமாக, ஸ்டெதாஸ்கோப்பைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் மார்பை முறையாகப் பரிசோதிக்கும்போது, இருமலுக்குக் காரணமும் வகையும் தெரிந்துவிடும். அதற்கேற்பத்தான் அவர் இருமல் மருந்தை எழுதிக் கொடுப்பார்.
உதாரணமாகச் சளி இருமல் என்றால் சளியைக் குறைக்க மருந்து, ஆஸ்துமா என்றால் மூச்சுக் குழாயை விரிக்கிற மருந்து, ஒவ்வாமை என்றால், அதைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தருவது, இதயச் செயலிழப்பு காரணம் என்றால் சிறுநீரைப் பிரிக்கும் மருந்து கொடுப்பது எனக் காரணத்தைக் களையும்போதுதான் நோய் குணமாகும்.
சரியான காரணத்தைக் களைய…
எந்த வகை இருமல், என்ன காரணம் எனத் தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்தால், இருமலுக்கான அடிப்படைக் காரணத்தைக் களைய முடியாது. அதனால் இருமல் குறையாது. வீண் செலவுதான் ஏற்படும். மருத்துவரிடம் போவதைத் தள்ளிப்போடுவதால், நோய் அதிகப்படவும் வாய்ப்பிருக்கிறது.
இருமல் மருந்துகளில் சளியை வெளியேற்றும் மருந்துகள், வீசிங் பிரச்னையைக் குறைக்கும் மருந்துகள், மூளையில் இருமல் மையத்தைக் கட்டுப்படுத்தி இருமலை மட்டுப்படுத்தும் மருந்துகள், தூக்கம் வரச்செய்யும் மருந்துகள் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றைச் சுயமாக வாங்கி உட்கொள்ளும்போது, அவற்றின் அளவு அதிகமாகி ஆரோக்கியம் கெடலாம்.
உதாரணமாக, ஆஸ்துமாவுக்குத் தரப்படும் ஒருவகை மருந்து அளவுக்கு மீறினால் விரல் நடுக்கத்தைக் கொடுக்கும்; நெஞ்சு படபடக்கும். தூக்கம் தரும் இருமல் மருந்துகளுக்குப் பல பேர் அடிமையாவதும் உண்டு. வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரத்தை இயக்குபவர்கள், இரவு நேரப் பணியாளர்கள் இம்மாதிரியான இருமல் மருந்துக்கு அடிமையாகி, விபத்துகளைச் சந்திக்கின்றனர்

வியாழன், 12 ஜனவரி, 2017

பருப்புக் கீரை கடையல்

தேவையான பொருட்கள்:
கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
தக்காளி - 1 (பெரியது)
மிளகாய் வத்தல் - 4
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும். பாதி தக்காளியை பொடியாக வெட்டி வைத்துக்கொண்டு வெங்காயத்தை பொடியாக வெட்டவும். குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். சுவையான பருப்புக் கீரை கடையல் தயார். சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்