நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 21 ஜூன், 2016

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க..

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது.




எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு அப்படி 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய வாட்டர் டயட் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வல்லுனர்களும் மற்ற வழிகளை விட, வாட்டர் டயட்டை பின்பற்றினால் மிகவும் ஈஸியாகவும், சீக்கிரமாகவும் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் நடிகரான விக்ரம் கூட, தனது எடையை குறைப்பதற்கு வாட்டர் டயட்டைப் பின்பற்றினார்.

மேலும் உடல்நல வல்லுனர்களும் வாட்டர் டயட்டை பின்பற்றினால், எடை குறைவதுடன், இதர நன்மைகளும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அதில் சீரான இரத்த அழுத்தம், தெளிவான பார்வை, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதிலும் இது சற்று கடுமையான டயட். என்ன செய்வது, எடையை குறைக்க வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் தானே! சரி, இப்போது 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய அந்த வாட்டர் டயட் பற்றிப் பார்ப்போமா!!!

டே 1: தண்ணீர் வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

டே 2: க்ரீன் டீ இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது வெளியேற ஆரம்பிக்கும்.

டே 3: ஐஸ் தண்ணீர் அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.

டே 4: வெல்லம் கலந்த நீர் நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

டே 5: சூப் ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.

டே 6: ஜூஸ் ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.
<
டே 7: இனிப்பு தண்ணீர் 10 நாள் வாட்டர் டயட்டின் ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.

டே 8: சுடுநீர் எட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.

டே 9: மூலிகை நீர் பொதுவாக மூலிகை நீரைப் பருகினால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும். ஏனெனில் மூலிகைகளுக்கு அத்தகைய சக்தியானது உள்ளது. எனவே ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.

டே 10: எலுமிச்சை ஜூஸ் எடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும். குறிப்பு மேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை எடுத்து வாருங்கள்

வியாழன், 26 மே, 2016

மரபணு { Genetic } என்றால் என்ன ?


10,000 ஆண்டுகளில் நம் டி.என்.ஏ எனப்படும் மரபணு மாறியிருக்கும்…அதனால் நான் ஏன் இன்னும் 10,000 ஆன்டுக்கு முந்தைய உனவையே சாப்பிடவேண்டும் என்றால

மரபணு
மாற்றம் என்பது எத்தனை பெரிய விசயம் என்பது நமக்கு புரிபடவில்லை என பொருள்.

உதாரணமாக
எஸ்கிமோ, வெள்ளையர், கருப்பர், மங்கோலியர், இந்தியர்….இவர்களிடையே நீலக்கண், சுருட்டை முடி, கட்டை குரல், கூட்டை உயரம், மஞ்சள் நிறம் இப்படி பல வேறுபாடுகள் உண்டு.

ஆனால்
உலகில் உள்ள எந்த இரு மனிதர்களையும் எடுத்தால் அவர்களுக்கிடையே ஜீன் வித்தியாசம் 0.1% தாண்டாது. அதாவது 99.9% நம் அனைவர் ஜீன்களும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

அதே
சிம்பன்சிக்கும் நமக்கும் ஜீன் வித்தியாசம் 2% மட்டுமே…அதாவது சிம்பன்சி 98% மனிதன், அல்லது மனிதன் என்பவன் 98% சிம்பன்ஸ

நம்
ஜீன் 2% மாறினால் நாம் சிம்பன்ஸி மாதிரி அடையாளமே தெரியாத இன்னொரு உயிரினம் ஆகிவிடுவோம்.

ஆக
மரபணு மாறிவிட்டது என அத்தனை எளிதில் சொல்லி எக்ஸ்கேப் ஆகமுடியாது..உங்கள் மரபணுவை பொறுத்தவரை நீங்கள் சைபிரிய குகையில் கையில் கல் ஈட்டியுடன் அமர்ந்திருக்கும் காட்டுவாசிதான்…உங்கள் உடல் அடுத்துவரவிருக்கும் குளிர்கால பஞ்சத்தை சமாளிக்க உங்கள் தொப்பையில் கொழுப்பை எனெர்ஜியாக சேர்த்து வைத்துகொன்டிருக்கிறது…நீங்கள் கணிணியுகத்துக்கு வந்ததாக நினைத்துகொன்டாலும் மரபணு இன்னமும் கற்காலத்தில் தான் இருக்கிறது. அது கணிணியுகத்துக்கு வந்து சேர சிலகோடி ஆண்டுகள் ஆகும

அதனால் அது இருக்கும் காலகட்ட உனவையும், வாழ்க்கைமுறையையும் (விருந்து/விரதம்) பின்பற்றினால் தான் அது ஆரோக்கியமாக இருக்கும்


புரதம் { protin } என்றால் என்ன ?


புரதத்தில் இரு வகை உண்டு. முதல் தர புரதம் (9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிரம்பியவை), இரண்டாம் தர புரதம் (9 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாதவை)

அசைவ உணவில் இருப்பது முழுக்க 9 அமினோ அமிலமும் நிரம்பிய புரதம்

தாவர உணவுகளில் இருப்பது 9 அமினோ அமிலமும் இல்லாத இரன்டாம் தர புரதம்

இப்போது ஒரு சின்ன கதையை பார்க்கலாம்

பந்தியில் ராமு, சோமு இருவரும் உணவருந்தினார்கள். ராமுக்கு பறிமாறியவர் ஐந்து இட்டிலியை இலையில் போட்டுவிட்டு, ஒரே ஸ்பூன் சட்டினியை இலையில் வைத்தார்.

சோமுவுக்கு பரிமாறியவர் எட்டு இட்டிலியை இலையில் வைத்து உடன் சாம்பார், தேங்காய் சட்டினி, கார சட்டினி, நல்லெண்ணெய்/பொடி எல்லாம் போட்டு விருந்துபசாரம் செய்து அசத்தினார்.

அதனால் எட்டு இட்டிலியை இலையில் இட்டும் சோமு எட்டு இட்டிலிகளையும் முழுமையாக உண்டு, இலையை துடைத்து எடுத்தது போல சுத்தமாக குப்பைகூடையில் போட்டான

ஐந்து இட்டிலி மட்டுமே இலையில் போட்டும், பசி அதிகமாக இருந்தும் சட்டினி இன்றி இட்டிலியை உண்ணமுடியாமல் இரண்டு இட்டிலியை மட்டுமே உண்ட ராமுவின் இலையில் மூன்று இட்டிலிகள் மீதம் இருந்தது.

புரத விசயத்தில் நிகழ்வதும் இதுவே

இரண்டாம் தர புரதத்தில் 9 வகை அமினோ அமிலமும் இல்லாததால் அப்புரதத்தின் பெரும்பகுதி வீணடிக்கபட்டு யுரிவாகாக மாற்றபட்டு கழிவாக கிட்னியால் வெளியேற்றபடுகிறது. இதனால் உடலுக்கு போதுமான புரதம் கிடைக்காமலும் நம் கிட்னியில் யுரியா அதிகம் தேங்கி யூரிக் அமிலம், கவுட், கிட்னிக்கு கூடுதல் வேலை ஆகிய சிக்கல்கள் நேர்கின்றன.

9
அமினோ அமிலமும் முழுமையாக இருக்கும் முதல் தர மாமிச/பால்/முட்டை புரதம் முழுமையாக நம் உடலால் கட்டுமான பணிகளுக்கு பயன்பட்டு கழிவாக வெளியேறுவது மிக குறைந்த அளவிலேயே நிகழ்கிறது

மற்றபடி

நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர் 100- 120 கிராம் அளவு புரதம் மேக்ஸிமம் அளவில் எடுக்கலாம். அதற்கு மேல் போனாலும் அஞ்சவேண்டியதில்லை. ஆனால் நாம் எடுக்கவேன்டிய முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

400
கிராம் சிக்கன் பிரெஸ்டில் 125 கிராம் புரதம்…சிக்கன் காலை தோலுடன் எடுக்கையில் புரத அளவுகள் குறைவு.

காலை பட்டர் டீ- 8 கிராம் புரதம்
மதியம் 3 முட்டை- 18 கிராம் புரதம்
மாலை: 300 கிராம் சிக்கன் கால் தோலுடன் 75 கிராம் புரதம். மொத்தம் 100. கலோரி போதவில்லை எனில் கூட பட்டர் நிறைய சேர்த்து எடுக்கலாம். காய்கறிகளும் எடுக்கலாம

இதே மட்டன், பீஃப், போர்க் என்றால் கொழுப்பின் சதவிகிதம் மிக அதிகம். புரதம் குறைவு. அதனால் குழுவில் மட்டன் எடுப்பவர்கள் ஆட்டுகொழுப்பை மட்டும் தனியாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்

திங்கள், 23 மே, 2016

போட்டோகிராபிக் மைண்ட் !!!

ஒரு வகுப்பில் படிக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே பாடம்தான். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் சிலரால் மட்டும் எப்படி நன்றாகப் படிக்க முடிகிறது? ஒரு சிலர் இயல்பாகவே கவனத்தைக் குவித்துப் படித்து சிறந்து விளங்குவார்கள். படித்த விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.

ஆனால்,எல்லோருக்குமே இந்தத் திறமைகள் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்காக இது நமக்கு வராது என்று விட்டுவிடமுடியாது.


கீழே காணப்படும் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள்படிக்கும் விதத்திலும் புரிந்துகொள்ளும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

நேரம்,படிக்கும் சூழல் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம். இதை எப்படிச் செய்வது?

#
உங்கள் இலக்குகள் என்ன என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது காலாண்டுத் தேர்வில் நான் இவ்வளவு மதிப்பெண் வாங்குவேன் என்றோ அரையாண்டுத் தேர்வில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வருவேன் என்றோ இருக்கலாம்.

#
ஒரு பாடத்தைத் தொடங்கும் முன் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு கவனத்தையும் செலுத்தும் வகையில்அதற்கான நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

#
படிப்பதையும் செயல்முறைப் பயிற்சிகள் செய்வதையும் அவ்வப்போதே செய்து முடித்துவிடுங்கள்.அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப் போடாதீர்கள்.

#
படிக்கிற எது ஒன்றையும் நினைவில் படமாக்கி ஞாபகம் வைக்க முயலுங்கள். போட்டோகிராபிக் மைண்ட் என்று அதை சொல்வார்கள்.

#
படிக்கிற எதையும் அன்றாட வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் படிக்கிற ஒரு பாடம் தொடர்பான ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் ஏற்கெனவே இருந்தால்தான் அதோடு தொடர்புபடுத்தி உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

#
அப்படி முற்றிலும் புதிதான விஷயங்களை மனதில் இறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவற்றை இணைத்து ஒரு குறியீட்டுத் தொடரை பாஸ்வேர்ட் போல உருவாக்கிக்கொள்ளுங்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டதும் படித்த பாடத்தின் வினாவிடைகள் எல்லாம் நினைவுக்கு வருவதுபோல பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

#
ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டே படிப்பது என்பது மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சி. படித்த பாடம் முழுவதுமே சிறு சிறு குறிப்புகளாகபாயிண்ட் பாயிண்டாக உங்கள் முன் நோட்டுப்புத்தகத்தில் காட்சிதரும். ஒரு பாரா முழுவதும் படித்ததை ஒரு வரியில் சுருக்கி குறிப்பு எழுதுவது என்பது மாணவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி.

# பாடத்தின் பொருள் புரிந்து படிப்பது மிகவும் பயன் தரும். ஒவ்வொரு வரியையும் புரிந்தபிறகு அடுத்த வரிக்கு போவது என்பது ஆரம்பத்தில் சிறிது சிரமம்போல காட்சியளிக்கும். ஆனால் அது விவேகானந்தர் போல பாரா பாராவாக படுபயங்கர வேகத்தில் வாசிக்கும் திறமையை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஆரம்ப காலடித்தடங்கள் அவை. அதனால் புரிந்து படிங்கள். புயல்வேக வாசிப்புக்கு தயார் ஆகுங்கள்.

வரிகோஸ் வெயின்ஸ் என்றால் என்ன?

வரிகோஸ் வெயின்ஸ் என்பது வழமைக்கு மாறாக விரிவடைந்த, வீக்கமான, நீல நிறமுடைய, முடிச்சுண்டு இருப்பது போல் காட்சியளிக்கும் நரம்புகளாகும். இவை பெரும்பாலும் மெல்லிய எரிச்சலூட்டும் வலியுடையதாகவும், வேதனையுடையதாகவும் விளங்குகிறது.

 
இது நரம்புகளின் உள்ளே உள்ள வால்புகள் தவறாக செயற்படுவதன் விளைவாக ஏற்படுகிறது. இதயத் துடிப்பின் மூலம், இரத்தம் நாடி வழியாக உடலில் உள்ள திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. அது மீண்டும் நாளங்கள் வழியாக இதயத்தை சென்றடைகிறது. பொதுவாக நாடி, நாளங்கள் அனைத்தும் குழாய் வடிவாக கட்ச்சியளிக்கும் ஆனால் நாளங்களில் இரத்தம் பின்நோக்கி பாய்வதைத் தடுப்பதற்க்காக அதன் உட்சுவரில் மிக மெல்லிய வால்வுகள் காணப்படும். வால்வுகள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் குருதிச்சுட்டோட்டம் பலவீனமடைவதோடு, இரத்தம் நரம்புகளினுள் திரண்டு விடுகிறது. அப்போது நரம்புகள் பெரிதாகக் காட்சியளிக்கின்றன.

வரிகோஸ் வெயின்ஸ் இன் அறிகுறிகள்:
கால் உழைவு
# வீக்கம்
# கால் புண்கள்
# சொறியும் தன்மை
# காலில் தசைப்பிடிப்பு
# கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு

ஆகியவற்றை குறிப்படலாம். குருதிச்சுட்டோட்டம் குறைவாக இருப்பதால் வரிகோஸ் வெயின்ஸ் உருவாகிறது. இது பொதுவாக ஒரே நிலையில் அதிக நேரம் இருப்பவர்கள், உட்காரும் போது கால்களை குறுக்கே போட்டு உட்காரும் பழக்கம் உடையவர்கள், வழமையாக உடற்பயிற்சி செய்யும் போது தவறான முறையில் செய்பவர்கள், ஆகியோருக்கு இது பொதுவாக ஏற்படும் ஒன்றாகக் காணப்படுகிறது.


அதிக உடல்நிறை, பாரமான பொருட்களை தூக்குதல், கற்ப காலத்தில் காலுக்கு அழுத்தம் அதிகரித்தல், போன்றனவும் வரிகோஸ் வெயின்ஸ் விருத்தியடைவதைத் தூண்டுகின்றது. மற்றும் மலச்சிக்கல், இதயச் செயலிழப்பு, ஈரல் சார் நோய்கள், வயிற்றில் ஏற்படும் கட்டிகள், போன்றானவும் வரிகோஸ் வெயின்ஸ் உருவாவதற்க்கு காரணமாகின்றது. விட்டமின் C, Bio flavonoids (முக்கியமாக ரூறின்) ஆகியவற்றின் குறைபாடும் நரம்பு சுவர்களில் கொலாஜன் அமைப்பைப் பலவீனமடைய செய்கிறது. இச் செயற்பாடு வரிகோஸ் வெயின்ஸ்க்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில் இது குடும்ப அலக்கிலிருந்தும் ஏற்படலாம். இவ் வரிகோஸ் வெயின்ஸ் உருவாவதற்க்கு ஹார்மோன் மாற்று சிகிச்சைகளும் மற்றும் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளும், பங்களிப்பு செய்கிறது. என பல விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். இந் நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

முகப்பரு { Acne }

இந்த முகப் பருக்களுக்கு என்னதான் காரணமாக இருக்க முடியும் என்று பார்த்தால் அது ஹார்மோன்களின் மாற்றங்கள் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. வயிற்றில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் மற்றும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, உணவு பழக்கம் சரியாக, முறையாக இல்லாதது போன்ற காரணங்களாகும்!


மேலும் இந்த பருக்கள் எண்ணெய் பசை தன்மை கொண்ட முகங்களையே அதிகமாக பாதிக்கின்றன. கைகளால் கிள்ளிவிட்டால் அது முகத்தில் வடுக்களாக மாறிவிடுகின்றன. செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு பருக்கள் அதிகமாக இருக்கும். கழிவுகள் வெளியேறாமல் தோலில் தேங்கி விடுவதால் இந்த பிரச்சனை தோன்றிவிடுகிறது.

வேறு சில காரணங்களாலும் இந்த முகப்பருக்கள் தோன்றுகின்றன. அதிகப்படியான டீ, காபி, ஆல்கஹால், சிகரெட் போன்ற தீயபழக்க வழக்கங்களாலும் இது தோன்றுகிறது.

சரி செய்வது எப்படி?

முகப்பருக்களை எளிதில் சரி செய்து கொள்ள முடியும் தகுந்த மருத்துவம் எடுத்துக் கொள்வது அவசியம். மூலகாரனம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டால் எளிதில் சரியாகிவிடும்.

முக்கியமாக உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறான உணவு பழக்கம் கூடாவே கூடாது. அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், சர்க்கரை, எண்ணெய் பொருட்கள் ஆகவே ஆகாது.

மைதா, பாட்டிலில் அடத்து வைத்து விற்கும் உணவுகள், குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாழைப்பழம் தவிர்த்து மற்ற பழங்களை எடுத்துக் கொள்வது அவசியம் முக்கியமாக திராட்சை, மாதுளை, அன்னாசி!

எலுமிச்சை சாறு சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. புல்லின் மீது படிந்திருக்கும் பனித்துளிகளை சேகரித்து இந்த பருக்களின் மீது போடுவதால் மறைந்துவிடும் என்று பாட்டி வைத்தியம் கூறுவதுண்டு.

நாகரிக உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை சேர்த்துக் கொண்டு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறும்போது இந்த முகப்பரு முற்றிலும் மறைந்து விடும்!

ஞாயிறு, 27 மார்ச், 2016

மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு

பெண்களின் மன உளைச்சலை அதிகரிப்பதில் மாதவிடாய்க்கு முக்கிய பங்குண்டு. சரியான நேரத்தில் ரெகுலரான சுழற்சியாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் முறையற்ற மாதவிடாய் என்றால் சிக்கல்தான். சரியான உணவுபழக்கமின்மை, மன அழுத்தம், உடல்நலக் கோளாறு, மாத்திரை உட்கொள்வது போன்றவைகளினாலும் மாதவிலக்கு சுழற்சியில் சிக்கல் ஏற்படும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட பாட்டி வைத்தியத்தை பின்பற்றி பாருங்களேன்.

உடல் உஷ்ணம் அதிகமாகும்

மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் பப்பாளிப்பழம், திராட்சை, அத்திப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். இது உடலில் உஷ்ணத்தை அதிகரிப்பதோடு மாதவிடாய் சுழற்சியை ரெகுலராக்கும்.எள் மிட்டாய்

எள் மிகச்சிறந்த மருந்தாகும். பீரியட்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் எள்ளில் செய்த உணவுகள், எள் மிட்டாய் போன்றவைகளை சாப்பிடலாம்.

மூச்சுப் பயிற்சி

மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தம் நீங்கி குறிப்பிட்ட சுழற்றிசியில் மாதவிடாய் வரும்.மாதவிடாய் சிக்கல் தீர

பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவேண்டும். மூன்று முதல் ஐந்துநாள் சாப்பிட ஒழுங்கான மாதவிடாய் வரும்.

இதற்கு மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். பட்டையை மையா அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை 50 கிராம் எடுத்து பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாகத்தை இரண்டாக பிரித்து, காலை, மாலை சாப்பிடவேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் சிக்கல் தீரும்.

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை சாப்பிட மாதவிடாய்க் கோளாறு தீரும்.கல்யாணமுருங்கை இலை

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு கலந்து சாப்பிட வேண்டும். இதனால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.